• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“ஓ மை டாக்” படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்கிறார் அருண்விஜய்..!

by Tamil2daynews
April 20, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
“ஓ மை டாக்” படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்கிறார் அருண்விஜய்..!
‘ஓ மை டாக்’ படத்தின் முன்னோட்டத்தை அண்மையில் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த திரைப்படம் அர்ஜுன் என்ற குழந்தைக்கும், சிம்பா என்ற நாய்க்குட்டிக்கு இடையேயான உணர்வுபூர்வமான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் இடம்பிடித்த ஆர்ணவ் விஜய் மற்றும் சிம்பா என்ற நாய்க்குட்டி என இரண்டும் திரையிலும், திரைக்குப் பின்னாலும் இவர்களுக்கு இடையேயான அன்பையும், பிணைப்பையும் பகிர்ந்து கொள்கின்றனர். படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை ஆர்ணவ் விஜய்யின் தந்தையான அருண் விஜய் இப்படி விவரிக்கிறார்,” செல்ல பிராணியான சிம்பா முதல் நாளே ஆர்ணவ்வை கீறி விட்டது. ஆனால் அவர் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டு படப்பிடிப்பை தொடர்ந்தார்” .
Arun Vijay On Son Arnav's Experience Shooting With Pups In 'Oh My Dog'
அருண் விஜய் இது தொடர்பாக மேலும் பேசுகையில்,
” அது ஆர்ணவ்வின் உலகம். சிம்பா நன்கு வளர்ந்தவர். இரண்டு மூன்று குட்டிகளுடன் வளர்ந்து கொண்டிருந்ததால் எங்களிடம் வந்தன. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பின் போது வெவ்வேறு குட்டிகள் வளர்ந்து வருவதால், அவற்றினோடும் படப்பிடிப்பில் நடிக்க வேண்டியிருந்தது. நாய்க்குட்டிகள் எப்படி நடந்து கொள்கின்றன என்பது உங்களுக்கு தெரியும். அவற்றில் சில நாய்க்குட்டி ஆர்ணவ்வை கடிக்கத் தொடங்கியது. அவை சிறிய குட்டிகள் என்பதால் அவை கடிக்கின்றனவா? இல்லையா? என்பது கூட தெரியாது. சில குட்டிகள் கூர்மையான பற்களால் கடிக்கத் தொடங்கியது. ஆனால் அதனை ஆர்ணவ் சரியாக எதிர்கொண்டார். கைகளில் ஏற்படும் கீறல்களால் எந்த பிரச்சனையும் இல்லை. அது சிறிய காயம் என்று அவர் கூறினார். பிறகு அவரை கைகளை சானிடைசரை கொண்டு சுத்தப்படுத்திக் கொண்டு நடித்தார். ஏனெனில் அவருக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அந்த விசயம் அந்த தருணத்தில் அவனுக்கு உதவியது. படத்தில் ஆர்ணவ்வுடன் நாய்க்கும் இருக்கும் தொடர்பு உண்மையாக இருந்தது. அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவும் விரும்பினார்.” என்றார்.
Sarov Shanmugam's Movie On Pet Love 'Oh My Dog' Trailer Unveiled
‘ஓ மை டாக்’ ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை ஒன்றாக ஒன்றிணைத்திருக்கிறது. நிஜ வாழ்க்கையில் தாத்தா- தந்தை- மகன் என மூவரும் விஜயகுமார், அருண் விஜய் மற்றும் ஆர்ணவ் விஜய் முதல் முறையாக திரையில் தோன்றுகிறார்கள். இவர்களுடன் மகிமா நம்பியார் மற்றும் வினய் ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், சரோவ் சண்முகம் இயக்கத்தில் அமேசான் ஒரிஜினல் திரைப்படமாக ஏப்ரல் 21ஆம் தேதியன்று பிரைம் வீடியோவில் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியாகிறது. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது.
Previous Post

அனந்தம் ZEE5 ஒரிஜினல் சீரீஸ் பத்திரிகையாளர் சந்திப்பு !

Next Post

KGF2 படம் மூலமாக இந்திய அளவில் மிகப்பெரிய கவனம் ஈர்த்த ஹோம்பாலே பிலிம்ஸ் புரொடக்‌ஷன் நிறுவனம் தனது 14-ஆவது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்குகிறார்.

Next Post
பிரபபல திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்..!

KGF2 படம் மூலமாக இந்திய அளவில் மிகப்பெரிய கவனம் ஈர்த்த ஹோம்பாலே பிலிம்ஸ் புரொடக்‌ஷன் நிறுவனம் தனது 14-ஆவது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்குகிறார்.

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தீபன் பூபதி; மணமகள் நிவேதிதா கிரி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.