• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் முன்னோட்டம் வெளியீடு

by Tamil2daynews
August 10, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் முன்னோட்டம் வெளியீடு

 

சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.  இது மகிழ்ச்சி- உணர்வு பூர்வமான தருணங்கள்- இனிமையான சூழல் கொண்ட முழுமையான திரைப்பட  அனுபவத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாரிப்பாளர்கள் சூர்யதேவர நாக வம்ஷீ  மற்றும் சாய் சௌஜன்யா  ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் – இந்த ஆண்டின் மிகச்சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக அமைய உள்ளது.

நாற்பது வயதை கடந்தும் தனது கனவுகளை துரத்தும் சர்வதேச துப்பாக்கி சுடும் வீரரான சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தை இந்த ட்ரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. ஸ்டைல் -கனிவு- நகைச்சுவை- உணர்ச்சிகள் – ஆகியவற்றை சூர்யா மிக சிறப்பாக கையாண்டு, பார்வையாளர்களின் மனதை உடனடியாக கவரும் வகையிலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரது கவனம் ஈர்க்கக்கூடிய திரை ஆளுமையும்… வெங்கி அட்லூரியின் உணர்வுபூர்வமான திரைக்கதையும்… இணைந்து சமீப காலங்களில் சூர்யாவின் மிகச்சிறந்த மற்றும் மனதிற்கு நெருக்கமான நடிப்புகளில் ஒன்றாக இந்த படம் அமையும் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன.
திரையில் மமிதா பைஜூ தனது தனித்துவமான வசீகரத்தை வெளிப்படுத்த.. ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன் மற்றும் சிறந்த நட்சத்திர நடிகர்கள் குழு இந்த உணர்வுபூர்வமான பயணத்திற்கு கூடுதலாக வலிமை சேர்த்துள்ளனர். ஜி. வி பிரகாஷ் குமாரின் மனதை வருடும் இசை… நிமிஷ் ரவியின் நேர்த்தியான ஒளிப்பதிவு… வெங்கி அட்லூரியின் தனித்துவமான கதை சொல்லும் பாணி… ஆகியவை இந்த ட்ரெய்லரை மேலும் மெருகூட்டுகிறது.

கோயம்புத்தூரில் நடைபெற்ற பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் படத்தின் உணர்வுபூர்வமான ஆழம் மற்றும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் திறன் குறித்தும் படக் குழுவினர் மிகுந்த நம்பிக்கையை பேச்சில் வெளிப்படுத்தினர். அந்த நம்பிக்கையை இந்த ட்ரெய்லர் முழுமையாக உறுதிப்படுத்தி இருப்பதுடன் மறக்க முடியாத திரையரங்க அனுபவத்திற்கான உத்திரவாதத்தையும் பார்வையாளர்களுக்கு அளிக்கிறது.

சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் – ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் வார இறுதியில் மறக்க இயலாத உணர்ச்சிகளின் உலகத்தை இப்படம் பார்வையாளர்களுக்கு வழங்க உள்ளது.

Previous Post

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ் – The Paradise ‘ படத்தின் டீசர் வெளியீடு

Next Post

புதிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஆகஸ்ட் 28-ல் உலகம் முழுவதும் வெளியாகும் நயன்தாரா – கவின் நடித்த ‘ஹாய்’

Next Post

புதிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஆகஸ்ட் 28-ல் உலகம் முழுவதும் வெளியாகும் நயன்தாரா - கவின் நடித்த ‘ஹாய்’

Popular News

  • கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.