• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஹிப் ஹாப் ஆதியின் “தீ வீரன்” ஆவணப்படம் இணையத்தில் வெளியீடு !

by Tamil2daynews
April 27, 2021
in சினிமா செய்திகள்
0
ஹிப் ஹாப் ஆதியின் “தீ வீரன்” ஆவணப்படம் இணையத்தில் வெளியீடு !
0
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 

தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட நட்சத்திரமாக ஜொலித்து வரும் ஹிப் ஹாப் ஆதி, இந்த கோவிட் 19 நோய்தொற்று காலத்தில், மக்களுக்காக உழைத்திட்ட, தமிழ்நாடு தீயணைப்பு துறை காவலர்களின் அன்றாட நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு, “தீ வீரன்” எனும் ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார்.

ஆவணப்படம் குறித்து ஹிப்ஹாப் ஆதி கூறியதாவது…

இது அனைத்தும் கடந்த மார்ச் மாதத்தில், கோவிட் நோய் தொற்று, அதிகரித்த காலத்தில் தான் துவங்கியது. தீயணைப்புதுறை மாவட்ட அதிகாரி திரு.ராபின் அவர்களின் அழைப்பின் பேரில், அம்பத்தூர் தீயணைப்பு அலுவலகத்தின் தினசரி நடவடிக்கைகளை பார்வையிட அழைக்கப்பட்டேன். என்னை பொறுத்தவரை தீயணைப்பு துறையினர் என்பவர்கள் காவல்துறை போலவே உடை அணிபவர்கள், தீவிபத்து நேரிடும்போது மக்களுக்கு விரைந்து உதவுபவர்கள் என்கிற எண்ணமே இருந்தது. ஆனால் அவர்களுடன் ஒன்றாக செலவழித்த அரை நாளிலேயே, என் எண்ணம் சுக்கு நூறாக உடைந்தது. அவர்களின் பணியை குறித்து மட்டுமல்ல, அவர்களின் வாழ்க்கை குறித்த என் எண்ணமும் முற்றாக மாறியது. மிகவும் கடினமான கோவிட் நோய்தொற்று காலத்தில் அனைவரும் வீட்டிலிருக்கும் நேரத்தில், உதவி தேவைப்படும் அனைத்து இடங்களுக்கும் இந்த தீயணைப்பு வீரர்கள் பம்பரம்போல் சுழன்று பணியாற்றி கொண்டிருந்தார்கள். கடின காலத்தின் முன்கள பணியாளர்களாக அவர்கள் முழு விருப்பத்துடனும், மிக மகிழ்வுடனும் மக்களுக்கு உதவினார்கள். அவர்களுக்கு அவர்கள் குடும்பமும் துணையிருந்தது. இவையாவும் என்னுள் பெரும் மாற்றங்களை, நேர்மறை தன்மையை உருவாக்கியது. பெரும் நம்பிக்கையை விதைத்தது. இவர்களின் உழைப்பை வெளியுலகிற்கு தெரியப்படுத்த வேண்டுமென்கிற எண்ணம் என்னுள் வலுவாக ஆட்கொண்டது.

ராபின் சார் அவர்களிடம் ஆவணப்படம் எடுக்கும் அனுமதியைக் கோரினேன். இரண்டு மாத காலம் நிலைமை சரியாகவும், அவர்களின் அன்றாட வாழ்வினை பதிவு செய்யவும் அனுமதி கேட்டேன். இந்த ஆவணப்பட் பதிவு காலத்தில் அங்கிருந்த ஊழியர்களுடன் தொடர்ந்து உரையாடியதில் அனைவரும் மிகுந்த நெருக்கமான உறவாக மாறிவிட்டார்கள். உண்மையாக சொல்வதானால் இந்த அனுபவம் எனது புறவாழ்க்கையை வெகுவாக மாற்றியது. இது கலை வடிவமாக மாறும்போது காண்போருக்கு பெரும் நம்பிக்கையையும், நேர்மறை எண்ணங்களையும் உருவாக்கும் மேலும் உதவி தேவைப்படுவோருக்கு உதவும் எண்ணத்தை வளர்த்தெடுக்கும்.  இம்மாதிரியான தாக்கங்கள் என் வாழ்விலேயேயும் நடந்ததுள்ளது. எனது சுய விருப்பத்தின் பேரில் நான் வாங்கிய மாடு, பின்னொரு நாளில் “டக்கரு டக்கரு” உருவாக காரணமாக அமைந்தது. 2012 காலத்தில் இருந்து சமூகம் குறித்து பல ஆவணப்படங்கள் எடுத்திருந்தாலும் “டக்கரு டக்கரு” எங்களுக்கு பெரியளவில் பெயர் பெற்று தந்தது. அதே போல் “தமிழி” துவங்கியதுவும் சுய விருப்பத்தின் பேரில் தான், ஆனால் அதனை முடிக்க 2 வருட காலம் ஆனது. இறுதியாக 8 அத்தியாயங்கள் கொண்ட தமிழ் ஆவணங்கள் குறித்த ஆவணப்படமாக அது உருமாறியது. அதே போல் தான் “மாணவன்” ஆவணப்படமும். இச்சமூகத்தில் மாணவனின் கடமை குறித்த அந்த ஆவணப்படம், இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை உருவாக்கியது.

தீயணைப்புத் துறையை பார்வையிட சென்ற ஒரு நாள் பெரும் தாக்கத்தை உருவாக்கி, இப்போது “தீ வீரன்” உருவாக ஒரு வருட கால நேரத்தை எடுத்து கொண்டது. நாம் எதை செய்ய வேண்டும் என்கிற தெளிவும் நமது பார்வையும் சரியாக இருந்தால் மற்றவை நன்றாக நடக்கும். உங்களின் நம்பிக்கை உங்களை கைவிடாது. எங்களது இந்த ஒரு வருட பயணம் நிறைய நம்பிக்கை உழைப்பு, தியாகத்தினை, கொண்டது. இந்த ஆவணப்படத்தை உருவாக்கியது மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.இந்த இனிய நேரத்தில்  ஆவணப்படத்தை உருவாக்குவதில் முழு ஆதரவை தந்த, தமிழ்நாடு தீயணைப்பு துறை முதன்மை அலுவலர். திரு Dr.C.சைலேந்திர பாபு IPS அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். அதோடு எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்த மற்ற அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் மற்றும் அனைத்து தீயணைப்பு வீரர்களுக்கும் இந்த “தீவீரன்” ஆவணப்படத்தை சமர்பிப்பதோடு, எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

Documentary Link :
https://youtu.be/PWTZt8HygOg
Previous Post

பாம்பாட்டம்” படத்தில் மல்லிகா ஷெராவத்தின் லுக்கு வெளியானது

Next Post

கார்த்தி நடிக்கும் புதியபடம் “சர்தார்”. படப்பிடிப்பு துவக்கம் !

Next Post
கார்த்தி நடிக்கும்  புதியபடம் “சர்தார்”. படப்பிடிப்பு துவக்கம் !

கார்த்தி நடிக்கும் புதியபடம் “சர்தார்”. படப்பிடிப்பு துவக்கம் !

Popular News

  • ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் பாணியில் அல்வா என்ற குறும்படத்தை அவரின் உதவியாளர் ஜெ.எம் ராஜா இயக்கி இருக்கிறார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.