குடும்ப அட்டைக்கு-1000 துணிவு,வாரிசுக்கு-1500 to 3000
எப்பொழுதுமே தமிழக மக்கள் என்றால் எல்லோருக்குமே ஒரு ஏளனம் இருப்பது நிச்சயம் உண்மை.
பொதுவா ஒரு மாநில அரசு பொங்கல் பண்டிகை என்றால் ஒரு இலவசமாக அரிசி கொடுப்பது வெல்லம் கொடுப்பதையே வாடிக்கையாக வைக்கும்
அதிலும் தற்போதைய ஆளும் அரசு ஒரு குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து உள்ளது.

இது அனைவராலும் வரவேற்கத்தக்க ஒன்று.
அரசிடம் இருந்து மக்கள் பெரும் பணத்தை அவர்கள் தன் சொந்த குடும்பத்திற்கோ மற்ற அத்தியாவசிய செலவுகளுக்காக செலவு செய்வது நியாயம்.
ஆனா கொடுத்த அரசே அதை திரும்ப பெறுவது நியாயமா..!
குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் அரசு தியேட்டர்களில் அதிகப்படியான டிக்கெட் விலை ஏற்றத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்.
இந்தப் பொங்கல் பண்டிகைக்கு இரண்டு மிகப்பெரிய நடிகர்களான அஜித்,விஜய் படங்கள் ரிலீசாவது உலகறிந்த விஷயம்.

பிரச்சனையே இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது தான்.
ஒரு பக்கம் வாரிசு திரைப்படத்திற்கு 1500 முதல் 2500 வரை தியேட்டர் கவுண்டர்களிலேயே டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
இன்னொரு பக்கம் துணிவு திரைப்படத்திற்கு 1500 முதல் 3000 ரூபாய் வரை டிக்கெட் படுஜோராக விற்பனையாகிறது.
இந்தப் பணம் எல்லாம் யாருக்கு போய் சேருகின்றது படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கா, படத்தைவாங்கிய விநியோகஸ்தர்களுக்கா, படத்தை திரையிடும் திரையரங்க உரிமையாளர்களுக்கா என்றால் இல்லை.
இந்த ஒட்டு மொத்த வசூல் பணமும் தமிழகத்தில் படத்தை திரையிடும் ஆளும் அரசான அவர்களின் குடும்ப நிறுவனத்துக்கே போய் சேருகிறது.
இதை சற்றும் யோசிக்காத மக்களும்,ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு இரு படத்துக்கும் பாக்கெட்டில் இருந்து பணத்தை அள்ளிக் கொடுத்து டிக்கெட்டை வாங்கி செல்கின்றனர்.
இதுல ஒரு யோசிக்க வேண்டிய விஷயம் என்னன்னா
ஒரு குடும்பத்தில் ஐந்து பேர், நான்கு பேர், மூன்று பேர் , இருந்தாலும் ஒரு குடும்பத்திற்கு ஒரே குடும்ப அட்டை தான்.
ஆனால் ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் தலா ஒருவருக்கு மட்டுமே இந்த கட்டணம் என்பதை பல பேர் மறந்து விடுகின்றனர்.

ஒரு குடும்பத்தில் நான்கு பேர் ஒரு திரைப்படத்தை காண வேண்டும் என்றால் தலா 1500 வீதம் ரூபாய் 6000 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே ஒரு படத்தை ஒரு குடும்பம் பார்க்கும் சூழல் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.
மேலும் சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்கில் ஒரு மிகப்பெரிய நடிகரின் ரசிகர் கவுண்டரில் டிக்கெட் எடுக்க சென்று இருக்கிறார் டிக்கெட் விலையை கேட்ட அவருக்கு அதிர்ச்சி தாங்க முடியாமல் தியேட்டர் மேனேஜரிடம் முறையிட அவரோ நாங்கள் என்ன செய்வது படத்தை வாங்கி இருக்கும் நிறுவனம் இந்த விலையை தான் விற்க சொல்கிறார்கள் வேண்டுமென்றால் போலீசில் புகார் கொடுங்கள் என்று இருக்கிறார்.
இதுல என்ன ஒரு கொடுமை என்றால் அந்த தியேட்டர் மேனேஜரின் அருகிலேயே ஒரு காவல்துறை அதிகாரியும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துதான்.
ஆளும் அரசு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களை தொட போகிறது இதுவரை எந்த ஒரு கெட்ட பெயரும் இல்லாத இந்த
ஆளும் அரசு சற்று சுதாரித்துக் கொண்டு இந்த டிக்கெட் விலை நிர்ணயத்தை சற்று தடுத்தால் பாமர மக்களுக்கு பாதிக்கப்படுவதை நிறுத்தலாமே.
(குறிப்பு)
தமிழக முதல்வர் தன் இலாகாவில் உள்ள மந்திரிகள் தவறு செய்தால் அதை மேடையில் பகிரங்கமாக தெரிவித்து இதனால் எனக்கு தூக்கம் வருவதில்லை என்று கூறும் முதல்வர் அவர்களே இது உங்கள் குடும்பத்தில் நடக்கும் தவறுகள் சற்று விழித்துப் பாருங்கள்…