• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஏஜிஎஸ் #25 – தளபதி #68

by Tamil2daynews
May 22, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஏஜிஎஸ் #25 – தளபதி #68

 

தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றவுள்ளார்.
‘பிகில்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக அவரது 68-வது படத்திற்காக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இணைகிறது. #Thalapathy68 என்று அழைக்கப்படும் இத்திரைப்படமானது ஏஜிஎஸ்-ன் 25-வது படைப்பு என்பதோடு இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிக பிரமாண்டமான வகையில் உருவாக உள்ளது.
சிறந்த உள்ளடக்கம் மற்றும் உயர்தர தயாரிப்பு என கடந்த 25 படங்களாக முத்திரை பதித்துள்ள ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட், #தளபதி68 அதன் மிகச்சிறந்த படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஏஜிஎஸ், தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் இந்த அற்புதமான கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
அனைத்து பார்வையாளர்களாலும் விரும்பப்படும் சிறந்த பொழுதுபோக்கு படமாக #தளபதி68 இருக்கும். சர்வதேச தரத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்ற உள்ளார்கள்.
நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் மற்றும் படத்தலைப்பு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தயாரிப்பு நிறுவனத்தால் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.
கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோரின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள #தளபதி68, 2024-ம் ஆண்டு வெளியாகும்.
Previous Post

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் ‘வீரன்’ ..!

Next Post

சமூக வலைத் தளங்களை தெறிக்கவிட்ட தமிழ் பாடல்

Next Post

சமூக வலைத் தளங்களை தெறிக்கவிட்ட தமிழ் பாடல்

Popular News

  • முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.டி. நாயுடு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது!

May 24, 2026

நடிகர் மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, ஜியோஹாட்ஸ்டார் ‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ திரைப்பட விழாவில் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஸ்ட்ரீம் செய்து கொண்டாடுகிறது!

May 24, 2026

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஒய் ஜீ எம்-ன் ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்

May 24, 2026

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

May 24, 2026

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

May 24, 2026

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

May 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.