ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தமிழிலும் சாதனைப் படைத்து வரும் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட முன்னோட்டம்

by Tamil2daynews
May 16, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழிலும் சாதனைப் படைத்து வரும் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட முன்னோட்டம்

 

பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாராகி தமிழில் வெளியான ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் குறுகிய கால அவகாசத்திற்குள் பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
உலகின் மிகவும் எதிர்பார்க்கப்பட்டகாவிய படைப்பான ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் வெளியாகி, பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தி, விசேடமான உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. ‘ஆதி புருஷ்’ படத்தில் பான் இந்திய நட்சத்திர நாயகனான பிரபாஸ், சயீப் அலி கான், கிருத்தி சனோன், சன்னி சிங்,  தேவதத்தா நாகே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதனை பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கியிருக்கிறார். இந்திய திரையுலக வரலாற்றில் முதன்முறையாக இப்படத்தின் முன்னோட்டம் எழுபதிற்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிடப்பட்டது.
Adipurush: Prabhas, Saif Ali Khan & Kriti Sanon Starrer Grand Teaser Was Unveiled On The Banks Of The Sarayu
‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம், இராமாயணத்தை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் காணும் போது, பக்தி உணர்வும், ஆன்மீக உணர்வும் கிளர்ந்தெழுகிறது. பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நட்சத்திர நடிகர்கள் திரையில் தோன்றுவதால், இந்த பிரம்மாண்டமான படைப்பு பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. அதிலும் ‘பாகுபலி’ மூலம் இன்றைய தலைமுறை தமிழ் ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு  அமர்ந்திருக்கும் நடிகர் பிரபாஸ் ஸ்ரீராமபிரானாக தோன்றி நடித்திருப்பது பார்வையாளர்களிடத்தில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வசீகரமிக்க கதைக்கு நம்பகத் தன்மையுடன் கூடிய பிரம்மாண்டத்தை இணைத்து.. இந்திய வரலாற்றில் மறக்க இயலாத ஒரு அத்தியாயத்தை ‘ஆதி புருஷ்’ படைத்திருக்கிறது. முன்னோட்டத்தில் ‘அற வாழ்க்கை’ குறித்து ராமபிரானாக நடித்திருக்கும் பிரபாஸ் பேசும் வசனங்கள், தமிழ் ரசிகர்களிடத்தில் பெரும் அதிர்வையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக ‘ஆதி புருஷ்’ படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
‘ஆதி புருஷ்’ படத்தை டி சீரீஸ் பூஷன் குமார் & கிரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் மற்றும் யுவி கிரியேசன்ஸின் பிரமோத்- வம்சி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் தேதியன்று உலகளவில் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது.
Previous Post

‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா நடிக்கும் டைகர் நாகேஸ்வரராவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிப்பு

Next Post

’பிச்சைக்காரன்2- ஆண்டி பிகிலி’- ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

Next Post

’பிச்சைக்காரன்2- ஆண்டி பிகிலி’- ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

Popular News

  • ‘பெல்” பொடன்ஷியல் மிக்க கதை என்பதால் நடித்தேன் – குரு சோமசுந்தரம்

    ‘பெல்” பொடன்ஷியல் மிக்க கதை என்பதால் நடித்தேன் – குரு சோமசுந்தரம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொத்தினேனி நடிப்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் உருவாகி வரும் #BoyapatiRAPO படத்தின் மைசூர் ஷெட்யூல் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ‘தேஜாவு’ வெற்றி பட இயக்குனரின் ‘தருணம்’ அடுத்த பட பூஜை..!

    0 shares
    Share 0 Tweet 0
  • விருதுகளை அள்ளிய விக்ரம் சுகுமாரனின் ‘இராவணகோட்டம்’..!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“ரஜினி படத்தை பார்த்த பின்புதான் நடிகையாக ஆசைப் பட்டேன்..”

“ரஜினி படத்தை பார்த்த பின்புதான் நடிகையாக ஆசைப் பட்டேன்..”

June 8, 2023

LIGHT HOUSE MEDIA நிறுவனம், SHRI DHARMA PRODUCTIONS, JASPER STUDIOS & VISTHAARA உடன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அஜித்குமார் இயக்கத்தில் ‘முகை’ திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு

June 8, 2023

டைரக்டர் என்.லிங்குசாமி – கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு!

June 8, 2023

விருதுகளை அள்ளிய விக்ரம் சுகுமாரனின் ‘இராவணகோட்டம்’..!

June 8, 2023

படப்பிடிப்பில் மிகப்பெரிய தீ விபத்தில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பிய ‘ஃ’ பட ஹீரோவும் இயக்குநரும்

June 8, 2023

தண்டட்டி இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

June 8, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!