• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மனிதநேயமிக்க காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி வெளியிட்ட  “இக் ஷு” டீசர்…

by Tamil2daynews
November 16, 2021
in சினிமா செய்திகள்
0
மனிதநேயமிக்க காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி வெளியிட்ட  “இக் ஷு” டீசர்…
0
SHARES
42
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஐந்து மொழிகளில் தயாராகும் ‘இக்‌ஷு’ டீசரை வெளியிட்ட போலீஸ் அதிகாரி ராஜேஸ்வரி!
அறிமுக நாயகன் ராம் நடிக்கும் படம் இக்ஷு. டாக்டர் அஸ்வினி நாயுடு தயாரிக்கும் இந்தப் படத்தை வி.வி.ருஷிகா இயக்கியுள்ளார். விகாஸ் படிஷா இசையமைத்துள்ளார். நவீன் டுகிட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் விமர்சையாக நடைப்பெற்றது. சமீபத்திய மழையின்போது உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளைஞரை துணிச்சலாக காப்பாற்றிய காவல் ஆய்வாளர் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னோடிகள் முன்னிலையில் டீசரை வெளியிட்டார்.
விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் கலைப்புலி ஜி.சேகரன், தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறப்பினர் விஜயமுரளி, கில்டு தலைவர் ஜாக்குவர் தங்கம், நடிகர் நட்டி உட்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மக்கள் தொடர்பாளர் பிரியா வரவேற்றார். நிகழ்ச்சியை கவிதா தொகுத்து வழங்கினார்.
விழாவில் இசையமைப்பாளர் நவீன் படிஷா பேசும்போது, ‘இந்தப் படத்தின் நாயகன் ராம் நேரில் பார்க்கும்போது சாக்லேட் பாய் லுக்கில் இருக்கிறார். ஆனால் படத்தில் அவருடைய நடிப்பு டெரர் ரகமாக உள்ளது. படம் முழுவதும் அவருடைய கடும் உழைப்பை பார்க்க முடிந்தது. இதில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. பாடலாசிரியர்கள் ஸ்ரீ சிராக், ஷியாம் ஆகியோர் சிச்சுவேஷனுக்கு ஏற்ற மாதிரி பிரமாதமான வரிகளைக் கொடுத்துள்ளார்கள். பாடல்கள் பேசப்படும் விதத்தில் வந்துள்ளன’ என்றார்.
விழாவில் நாயகன் ராம் கூறியதாவது, இந்த டீமுக்கு நான் மிகப் பெரிய நன்றி சொல்லவேண்டும். ஏனெனில், புதுமுகமாகிய என் மீது நம்பிக்கை வைத்து மிகப் பெரிய பொறுப்பை வழங்கியுள்ளார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக கதைக்கும் கேரக்டருக்கும் என்ன நியாயம் செய்ய முடியுமோ அதை செய்திருக்கிறேன். இந்தப் படம் அனைத்து தரப்புக்கும் பிடிக்கும் விதமாக உருவாகியுள்ளது’’ என்றார்.
இயக்குநர் ருஷிகா பேசும்போது, ‘இது எனக்கு முதல் படம். இந்தப் படத்தை  உண்மை சம்பவத்தை மையாக வைத்து இயக்கியுள்ளேன். இது பேமிலி கலந்த த்ரில்லர் ஜானர். எனது தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ் மொழியில் படம் இயக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. அந்த வகையில் ஒரே கல்லில் ஐந்து மாங்காய் அடித்த மாதிரி தமிழ், தெலுங்கு என்று ஐந்து மொழிகளில் இயக்கியது மகிழ்ச்சி’ என்றார்.
 
விழாவில் தயாரிப்பாளர் விஜய் முரளி கூறியதாவது, ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் ஐந்து மொழிகளில் வெளியான டீசர் படத்தின் தரத்தின் உறுதி செய்துள்ளது. பெண் இயக்குநர்கள் வரிசையில் ருஷிகா அறிமுகமாவது மகிழ்ச்சி. ‘இக்ஷு’ என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ‘கண்’ என்றும் ‘சிவன்’ என்றும் அர்த்தப்படுத்தலாம் என்றார்கள். அந்த வகையில் டைட்டில் தனித்துவமாக உள்ளது. சினிமாவுக்கு ஜாதி, மதம் என்கிற பேதம் கிடையாது. எந்த மொழியில் எடுத்தாலும் அது சினிமாதான். இந்த நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினராக வந்துள்ளார். சமூகத்துக்கு காவல் துறையின் பங்களிப்பு மிக முக்கியம். உதராணத்துக்கு ஒரு நாள் நேரம் காவல் துறை இயங்கவில்லை என்றால் நாட்டில் வன்முறை, கொலை, கொள்ளை என்று சமூக விரோத குற்றங்கள் பெருகிவிடும். அத்தகைய சூழலில் காவல் துறையினர் எப்போதும் முன் களப் பணியாளர்களாக தங்கள் கடமையை சரியாக செய்து வருகிறார்கள். அவர்களுக்கு வீர வணக்கம். இது சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்பதால் ரசிகர்களிடைய வரவேற்பு பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.
விழாவில் நட்டி பேசும்போது, ஹீரோ ராம் முதல் படம் மாதிரி இல்லாமல் வெகு சிறப்பாக பண்ணியிருக்கிறார். இயக்குநர் ருஷிகாவும் திறமையாக இயக்கியுள்ளார். காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்கள் மழை சமயத்தில் ஒரு உயிரை காப்பாற்றியது எல்லோர் மனதையும் நெகிழ வைத்தது. அதற்கு தலை வணங்குகிறேன். காவல் துறை உங்கள் நண்பன் என்பதற்கு ராஜேஸ்வரி மேடம் சிறந்த உதாரணம். இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகள்’’ என்றார்.
விழாவில் கலைப்புலி ஜி.சேகரன் பேசியதாவது, ‘நல்லவங்க நாலு பேர் இருந்தால் மழை பெய்யும் என்பார்கள். அந்த வகையில் ராஜேஸ்வரி மாதிரி இருக்கிறவர்கள்தான் மழை பெய்கிறது. அவருடைய தன்னமலற்ற சேவையை பாராட்டும் விதமாக தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியது வெகு சிறப்பு. மழைக் காலத்தில் அரசாங்கம் போர்க் கால அடிப்படையில் சிறப்பாக மக்கள் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் முதல்வர் அவர்களின் தேவை தமிழ் சினிமாவுக்கு தேவை. அவர்போல் சுயநலம் பார்க்காத தலைவர் தமிழ் சினிமாவுக்கு தேவை. இப்போது தயாரிப்பாளர்களை வழி நடத்த எவ்வித முயற்சியும் இல்லை. சில வருடங்களுக்கு முன் தீபாவளி சமயத்தில் முதல் இரு வாரங்களுக்கு எந்த புதுப் படமும் வெளியாகது. காரணம், அந்த சமயத்தில் மக்கள் தீபாவளுக்கு துணிமணி வாங்குவதில் பிஸியாக இருப்பார்கள். இப்போது அப்படி இல்லை. இந்த தீபாவளிக்கு முன் 11 படங்கள் வெளியானது. அதில் பல படங்களின் காட்சிகள் மக்கள் தியேட்டருக்கு வராத காரணத்தால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இந்த புரிதல் இல்லாமல் படங்கள் வெளியானல் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். அதை நெறிமுறைப்படுத்தி தயாரிப்பாளர்களின் நலன் காக்கப்பட வேண்டும். அதற்கு நம்முடைய முதல்வர் நல்வழி காண்பிக்க வேண்டும்’’ என்றார்.
விழாவில் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி பேசியதாவது, காவல் அதிகாரியான என்னை இந்த விழாவுக்கு அழைத்ததில் மகிழ்ச்சி. காவல் துறையில் நான் மட்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறேன். என்னைப்போன்று பல காவலர்கள், அதிகாரிகள் முன் களப் பணியாற்றி மக்கள் சேவை செய்து வருகிறார்கள். அவர்களும் புகழுக்கும் போற்றுதலுக்குரியவர்கள் என்பதை இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். காவல் துறை எப்போதும் உங்கள் நண்பன் என்பதுதில் மாற்றமே இல்லை. சினிமா சமூகத்தில் பல மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. பல படங்களில் காவல் துறையை கண்ணியமாக காண்பித்துள்ளார்கள். சில படங்களில் காவல் துறையை தவறாகவும் சித்தரித்துள்ளனர். இங்கு பேசும்போது காவல் துறைக்கு ஒரு நாள் விடுமுறை அளித்தால் நாடு என்ன மாதிரி பிரச்சனையை சந்திக்கும் என்பதை சொன்னார்கள். அதையே நான் மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். காவல் துறையின் சேவை இல்லையென்றால் மக்களின் நிம்மதி பறிபோய்விடும். குற்றங்கள் பெருகிவிடும். காக்கி என்றால் விரோதமாக பார்க்கும் மனநிலையை கைவிடவேண்டும். காக்கி உடைக்குள்ளும் ஈரம் இருக்கிறது. நாங்கள் வெளியேதான் பலா மாதிரி தெரிவோம். உள்ளே இனிக்கும் சுளை. மக்கள் சேவைதான் எங்களுக்கு முக்கியம். எங்களை நேசியுங்கள். காவல் துறையினர் பொதுப் பணியில் இருப்பதால் நல்லது, கெட்டது என்று தங்கள் வீட்டு நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் மக்கள் சேவையில் இருப்பார்கள். காவல் துறை என்பது உங்கள் சேவைக்காக மட்டுமே. பயப்படாமல் நீங்கள் எங்களை அணுகுங்கள். இதற்கு யாருடைய துணையும் வேண்டாம். உங்கள் பிரச்சனை எதுவோ நேரிடையாக வாருங்கள். நாங்கள் தீர்வுக்கு வழி வகுக்கிறோம். காவல் துறை புனிதமான துறை. உங்கள் குழந்தைகளுக்கு தைரியம் கொடுத்து வளர்த்தெடுங்கள்’ என்றார்.
விழாவில் ஜாக்குவார் தங்கம் பேசியதாவது, ‘தமிழ்நாடு எப்போதும் வந்தாரை வாழ வைக்கும் நாடு. இந்த விழாவில் நட்டி, விஜயமுரளி, கே.ராஜன், கலைப்புலி ஜி.சேகரன் போன்ற நல்ல உள்ளங்கள் வந்திருப்பது மகிழ்ச்சி. காவல் துறை என்பது நமது தாய். இராணுவம் நமது தந்தை. அவர்கள் வெயில், மழை என்று பாராமல் கடமை செய்வதால்தான் மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். காவல் துறையினருக்கு தற்காப்பு கலை கற்றுக்கொடுத்த பெருமை எனக்கு உண்டு. இதில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். நம் மொழியை காப்போம். உங்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பேசுவதை அதிகமாக கற்றுக்கொடுங்கள். தமிழ் வெல்க’ என்றார்.
விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது, ‘ தயாரிப்பாளர் அஸ்வினி அவர்கள் 5 மொழிகளில் இந்தப் படத்தை எடுத்துள்ளார். அவருடைய துணிச்சல் பாராட்டுக்குரியது. சினிமாவை பயன்படுத்தி பலர் சமூக வலைத் தளங்களில் சம்பாதிக்கிறார்கள். அதில் சிறு தொகையாவது சினிமாவில் உள்ள நலிந்தவர்களுக்கு உதவி செய்ய முன் வரவேண்டும். சமூக வலைத் தளங்களில் வீடியோ போடும் நண்பர்கள் நாகரீகமாக தலைப்பு கொடுங்கள். சினிமாவில் நாங்கள் எல்லோரும் நண்பர்களாக பழகி வருகிறோம். எங்களுக்குள் மோதல் உருவாக்குமளவுக்கு தலைப்பு கொடுக்காதீர்கள். சமூகத்தில் என்னளவில் பல ஆயிரம் குழந்தைகளுக்கு இலவச கல்விக்கு உதவி செய்துள்ளேன். காவல் துறையில் எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள். உயர் போலீஸ் அதிகாரிகள் விஜயகுமார், சைலேந்திர பாபு ஆகியோரிடம் எனக்கு நல்ல நட்பு உண்டு. அவர்கள் நேர்மைக்கு புகழ் பெற்றவர்கள். விஜயகுமார் சென்னை போலீஸ் கமிஷனராக பொறுப்பில் இருந்த போது திருட்டு வி.சி.டி. ஒழிப்புக்கு பல வகையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள். காவல் துறையில் ஒரு சிலர் நேர்மை தவறலாம். மற்றபடி காவல் துறை சமூகத்தில் சிறப்பான சேவை வழங்கி வருகிறது. சினிமாவில் போலீஸை தவறாக சித்தரிக்கிறவர்களை நான் நேரில் சந்திக்கும்போது கண்ணியமாக எடுக்கச் சொல்வதுண்டு. இப்போது அரசாங்கம் போலீஸ் துறைக்கு பல நல திட்டங்களை அறிவித்துள்ளது. வாரத்துக்கு ஒரு நாள் விடுமுறை, போலீஸ் பந்தோபஸ்து பணியில் பெண் காவலர்களளை விடுவித்தது போன்ற பல நல்ல அறிவிப்புகளை இந்த அரசாங்கம் செய்து வருகிறது. அந்த வகையில் போலீஸ் துறையை சேர்ந்த ராஜேஸ்வரி ஆற்றிய சமூகப் பணி என்பது மகத்தானது. அவருக்கு ராயல் சல்யூட். சினிமா போலீஸ் துறையின் பணிகளை சிறப்பாக நேர்மையாக பதிவு செய்கிறது. ‘ஜெய்பீம்’ படத்தில் போலீஸ் அராஜகத்தையும், ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியையும் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அந்த வகையில் இந்தப் படக்குழு  சமூகத்துக்கு பயனளிக்கும் ஒரு படைப்பு கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துகள்’ என்றார்.
விழாவுக்கு வந்த அனைவருக்கும் தயாரிப்பாளர் அஸ்வினி நாயுடு நன்றி தெரிவித்தார்.
Previous Post

அறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆர். எஸ். எஸ்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளதா? – சீமான் கண்டனம்

Next Post

வெங்கடேஷ் டகுபதி நடிப்பில் வெளிவரவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட த்ருஷ்யம் 2 திரைப்படத்தின் டிரெய்லரை Amazon Prime Video வெளியிட்டது

Next Post
வெங்கடேஷ் டகுபதி நடிப்பில் வெளிவரவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட த்ருஷ்யம் 2 திரைப்படத்தின் டிரெய்லரை Amazon Prime Video வெளியிட்டது

வெங்கடேஷ் டகுபதி நடிப்பில் வெளிவரவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட த்ருஷ்யம் 2 திரைப்படத்தின் டிரெய்லரை Amazon Prime Video வெளியிட்டது

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • Mrs and Mr – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கைமேரா பட இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • Freedom – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

July 12, 2025

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் D54 பிரம்மாண்ட திரைப்படம் – பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பம்!

July 12, 2025

“டிரெண்டிங்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

July 12, 2025

சவுத் ஸ்டார்ஸ் x மார்வெல்: ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எந்தெந்த நடிகர்கள் நடிக்கலாம்?

July 12, 2025

“பறந்து போ” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்!

July 12, 2025

Freedom – விமர்சனம்

July 12, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.