• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்” விமர்சனம்

by Tamil2daynews
March 11, 2022
in விமர்சனம்
0
பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்
0
SHARES
73
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்தப்படம் பொள்ளாச்சி சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர்களுக்கு இப்படம் ஆறுதலாக நிச்சயமாக இருக்கும்.

சுக்கிர திசை ஒருத்தருக்கு அடிச்சா ஒருமுறை அடிக்கும்.

ஆனா இங்க நம்ம சூர்யாவுக்கு தொடர்ந்து மூன்று முறை அடிச்சி இருக்கு.

மகாபாரதத்தில் பாஞ்சாலியின் சேலையை உருவி அவமானப் படுத்தும் பொழுது கண்ணபிரான் அவளுடைய சேலை அவிழாமல் இருக்க தொடர்ந்து சேலை கொடுத்துக்கொண்டே இருப்பார்.அதேபோல் நம்ம வீட்டு பெண்கள் மட்டுமல்லாமல் அடுத்த வீட்டு பெண்களின் மானத்தையும் கயவர்களிடம் இருந்து காப்பாற்ற கண்ணபிரான் ஆக சூர்யா பழிவாங்கும் கதையே “எதற்கும் துணிந்தவன்*

படத்தோட இறுதிக்காட்சி பற்றி நண்பர்களிடமும் சோசியல் மீடியா மூலமும் யாரும் ஷேர் பண்ணாதீங்க அப்படின்னு படத்தோட இசை வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் கூறியிருந்தார்.

அவரின் வேண்டுகோளுக்கு இணங்க படத்தின் இறுதிக் காட்சி பற்றி இதில் நாங்கள் பதிவிடவில்லை.

ஆனால் அந்த இறுதிக் காட்சியை  இயக்குனர் வடிவமைத்திருக்கும் விதமும், அவர்களுக்கு கொடுக்கும் தண்டனையும் தான் படத்தின் மொத்த முதுகெலும்பு.
“கண்ணபிரான்”  என்ற வக்கீலாக சூர்யா ஏற்றிருக்கும் இந்த வேடம் சூரரைப்போற்று படத்திலும் ஜெய்பீம் படத்திலும்இல்லாத அளவுக்கு பவர்ஃபுல்லாக அமைந்திருக்கிறது சூர்யாவின் வேடம்.
வாழ்க்கையில் பெரிய அளவில் வளர வேண்டும் என்ற பல இளைஞர்களின் கனவை “சூரரைப்போற்று” திரைப்படத்திலும் இருளர் இன மக்களின் வாழ்வுக்காக ஆதரவுக்காக போராடும் வக்கீலாக “ஜெய்பீம்” திரைப்படத்திலும் நடித்திருந்த சூர்யாவுக்கு இந்த “எதற்கும் துணிந்தவன்” படத்தின் மூலம் ஒட்டுமொத்த பெண்களின் ஆதரவும்,வரவேற்பும் கிடைக்கும் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை.

ஆதினி என்ற கதாபாத்திரத்தின் மூலம் இரண்டாவது படத்திலும் நம் மனதில் ஒட்டிக் கொள்கிறார் பிரியங்கா மோகன் .

ஒருகட்டத்தில் அவர் நிச்சயமாக தற்கொலை செய்துகொள்வார் என்று படம் பார்க்கும் அத்தனை பேரும் நினைக்கையில் அந்த முடிவை மாற்றி அப்படியே வேறு ஒரு முடிவை கொண்டுவரும் தைரியம் இயக்குனரின் திரைக்கதையில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இயக்குனர் பாண்டிராஜ்க்கு ஒரு சபாஷ்.

சூர்யாவின் அப்பாவாக சத்யராஜ் ஆதிராயர்  என்ற கதாபாத்திரத்திலும் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன்  கோசலை என்ற கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்துகின்றனர்.அதிலும் அம்மா, மகன் காட்சிகள் ஒரு குடும்பத்தில் நடப்பதை அப்படியே பிரதிபலிக்கின்றன.காமெடி என்று சூரியும் ‘விஜய் டிவி’ புகழும் வந்து செல்கின்றனர்.

இந்த படத்துல அடுத்ததா சொல்லணும்னா படத்தில் இன்னொரு ஹீரோவே இவர்தான் இன்ப என்ற கதாபாத்திரத்தின் மூலம் சூப்பரா நடிச்சு இருக்காரு நம்ம வினய்.வினய் நடித்த நிறைய படங்களில் குற்றச்சாட்டுகள் இருக்கும்.அவருடைய டயலாக் டெலிவரி சரியில்ல ஆக்டிங் சரியில்ல ஃபேஸ் ரிஆக்சன் சரியில்ல நிறைய குற்றச்சாட்டுகள் உண்டு ஆனா இந்த படத்துல நிச்சயமா இந்த குற்றச்சாட்டுகள் சொல்பவர்கள் அனைவருக்குமே  ரொம்ப பிடிக்கும் சும்மா மிரட்டலா நடிச்சிருக்கார் வினய்.அவருக்கும் ஒரு வாழ்த்துக்கள்.

அடுத்தது படத்தோட இசையமைப்பாளர் டி இமான் பாடல்கள் படம் வெளிவருவதற்கு முன்பே மிகவும் பிரபலமானது எல்லாத்துக்கும் தெரியும்.பின்னணி இசையில் இமான் சூர்யாவுக்கு என்ன தேவையோ கதைக்கு என்ன தேவையோ புகுந்து விளையாடி இருக்கிறார்.

படத்தோட கதை பாத்தீங்கன்னா ஒரு சாதாரண கதை தான் இரண்டு ஊருக்கும் சண்டை இந்த ஊரில் இருந்து அந்த ஊர்ல பொண்ணு கொடுக்க மாட்டோம் பொண்ணு எடுக்கமாட்டோம் அப்படின்னு  ஒரு இரண்டு வருஷமா வாழ்ந்து இருக்க ஊருக்கு நடுவுல ரெண்டு ஊரில்  உள்ள இளைஞர்களால்  என்ன பிரச்சனை ஆகுது ஏன் ரெண்டு ஊருக்கும் விரோதம் வந்தது, ஒரு குறிப்பிட்ட ஊரு பெண்களை மட்டும் ஏன்  அசிங்கப்படுத்தனும். என்ற கேள்விக்கு எல்லாம் பதில் தான் படத்தோட கதை.

Suriyas Etharkum Thuninthavan movie first single Vaada thambi released! | மாஸாக வெளிவந்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் முதல் சிங்கிள்! Movies News in Tamil
முதல்ல இந்த படத்தோட இயக்குனர் பாண்டிராஜுக்கு ஒரு வாழ்த்து சொல்லணும் ஏன்னு கேட்டீங்கன்னா “கடைக்குட்டி சிங்கம்” “நம்ம வீட்டு பிள்ளை” ரெண்டுமே குடும்ப பின்னணியில் குடும்ப உறவுகளை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருப்பார்.

 இந்த படமும் அதே போல இருக்குமோ அப்டின்னு நினைச்சு தியேட்டருக்கு போனா ஒரு இன்ப அதிர்ச்சிதான் கொடுத்திருக்கிறார் என்று சொல்லணும் .பாண்டிராஜ் இயக்கத்தில் மிகவும் வித்தியாசமான படம் இந்த “எதற்கும் துணிந்தவன்”.

வயசு பொண்ணுங்க இந்த படத்தை பார்த்தா இனி எதற்கும் பயப்பட மாட்டார்கள்.

 எதற்கும் துணிந்து தான் இருப்பாங்க என்பது சந்தேகமே இல்லை.

பெண்ணைப் பெற்றவர்களுக்கும் இப்படம் நிச்சயமாக ஒரு தைரியத்தை கொடுக்கும் என்பது எள்ளளவும் சந்தேகமில்லை.மொத்தத்தில் இந்த “எதற்கும் துணிந்தவன்” எல்லோருக்கும்  பிடித்தவனே.

                              விமர்சகர்
                                 சரண்”
Previous Post

பெண் நிருபர்களை கவர்ந்த நடிகர் ஜெய்..!

Next Post

தர்மபுரியில் விருவிருப்பான சினிமா படப்பிடிப்பு..!

Next Post
பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

தர்மபுரியில் விருவிருப்பான சினிமா படப்பிடிப்பு..!

Popular News

  • மீண்டும் இணைந்த “பிளாக்” வெற்றிப்படக்கூட்டணி, “ஜீவா 46” கோலாகலத் துவக்கம்!!

    0 shares
    Share 0 Tweet 0
  • திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜென்ம நட்சத்திரம்’ வெளியீட்டுக்கு முன்பே ஹிட்! ஊடக விமர்சனங்களும் முன்னோட்டக் காட்சிகளும் வரவேற்பை பெற்றுள்ளன!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்க , Passion ஸ்டூடியோஸ், ஜி ஸ்க்வாட், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் யூட்யூப் சென்சேஷனல் ஐகான்கள் பாரத் & நிரஞ்சனின் “Mr. பாரத்” படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • *மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில், அமேசான் தயாரிப்பில் உருவாகியிருக்கும்  மாறா ட்ரெய்லர்,

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சட்டமும் நீதியும் – விமர்சனம்

July 19, 2025
திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

July 19, 2025

கெவி – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 19, 2025

ஜென்ம நட்சத்திரம் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

July 19, 2025

நடிகர் உன்னி முகுந்தனின் UMF மற்றும் ஐன்ஸ்டீன் மீடியாவுடன் இணைந்து லெஜெண்ட்ரி இயக்குநர் ஜோஷி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!

July 19, 2025

திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் முத்திரை பதித்துவரும் நடிகை பவ்யா த்ரிகா

July 19, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.