• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

குளோபல் ஸ்டார் ராம் சரண் மற்றும் விக்ரம் ரெட்டியின் வி மெகா பிக்சர்ஸ் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இணைந்து, தங்களின் முதல் படமான ‘தி இந்தியா ஹவுஸ்’ படத்தின் அறிவிப்பை, மிரள வைக்கும் ஒரு மோஷன் வீடியோவுடன் அறிவித்துள்ளது!

by Tamil2daynews
May 29, 2023
in சினிமா செய்திகள்
0
குளோபல் ஸ்டார் ராம் சரண் மற்றும் விக்ரம் ரெட்டியின் வி மெகா பிக்சர்ஸ் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இணைந்து,   தங்களின் முதல் படமான ‘தி இந்தியா ஹவுஸ்’ படத்தின் அறிவிப்பை, மிரள வைக்கும் ஒரு மோஷன் வீடியோவுடன் அறிவித்துள்ளது!
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

குளோபல் ஸ்டார் ராம் சரண் மற்றும் விக்ரம் ரெட்டியின் வி மெகா பிக்சர்ஸ் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இணைந்து,   தங்களின் முதல் படமான ‘தி இந்தியா ஹவுஸ்’ படத்தின் அறிவிப்பை, மிரள வைக்கும் ஒரு மோஷன் வீடியோவுடன் அறிவித்துள்ளது!

 

குளோபல் ஸ்டார்  நடிகர் ராம் சரண், ‘வி மெகா பிக்சர்ஸ்’ என்ற தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் திரையுலகில் தனது அடுத்த பயணத்தை வெற்றிகரமாக துவங்கியுள்ளார்.  தனது நண்பரான விக்ரம் ரெட்டியின் UV கிரியேஷன்ஷுடன் இணைந்து ரசிகர்களுக்கு தனித்துவமான கதைகளை அளிப்பதுவும்,  அதே வேளையில், திரையுலகில் புதிய திறமைகளை உருவாக்குவது மற்றும் ஊக்குவிப்பதுவே இந்நிறுவனத்தின் நோக்கம் ஆகும். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் என்பது தி காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 போன்ற ப்ளாக்பஸ்டர் படைப்புகளை வழங்கிய  தனித்துவமான தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனங்கள் இணைந்து தங்களது முதல் பிரமாண்ட படைப்பை அதிரடியாக அறிவித்துள்ளனர்
‘வி மெகா பிக்சர்ஸ்’ மற்றும் ‘அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்’ ஆகிய நிறுவனங்கள்  தங்களது முதல் திரைப்படமான ‘தி இந்தியா ஹவுஸ்’ படத்தை இணைந்து  வழங்குவதில் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த கூட்டணியின் இந்த முதல் முயற்சியில், திறமையான நடிகர்கள் மற்றும் திறமையான  தொழில் நுட்ப குழுவினருடன் ஒரு சிறந்த நட்சத்திரக் குழுவாக இப்படம் இருக்கும் என ரசிகர்களிடம் உத்தரவாதம் அளிக்கும்  வகையில்,  இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராம் வம்சி கிருஷ்ணா  இயக்குவதாக அறிவித்துள்ளனர், மேலும் டைனமிக் ஹீரோ நிகில் சித்தார்த்தா மற்றும் மூத்த நடிகர் அனுபம் கெர் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
அனைவராலும் போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்த அறிவிப்பு, குளோபல் ஸ்டார் ராம் சரண் அவர்களின் வி மெகா பிக்சர்ஸ் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் ஆகியவற்றின் சமூக ஊடக கணக்குகள் வழியாக அழகான வீடியோவுடன் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய பார்வையாளர்களை மீண்டும் ஒரு பெரும் சகாப்தத்திற்கு அழைத்துச் சென்று அவர்களின் இதயத்தைத் தொடும் அளவிற்கு ஒரு அனுபவத்தை இப்படம் வழங்கும்.  லண்டனில் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டீசர் படத்தின் களத்தை சொல்வதாக அமைந்துள்ளது. தி இந்தியா ஹவுஸைச் சுற்றி அரசியல் கொந்தளிப்பு நிலவும் சூழலில்,  ஒரு காதல் கதையை இப்படம்  சொல்கிறது. எரியும் இந்தியா ஹவுஸின் பிரமாண்ட காட்சியுடன் இந்த டீசர் முடிவடைகிறது.
வி மெகா பிக்சர்ஸ் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இடையேயான கூட்டணி இந்திய திரையுலகில் மிக சக்திவாய்ந்த கூட்டணியின் துவக்கத்தை குறிக்கிறது.
குளோபல் ஸ்டாராக அறியப்படும் ராம் சரண் தேசத்தை பெருமைப்படுத்தி மற்றும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளடக்கம் கொண்ட சினிமாவை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையுடன்  சிறந்த தயாரிப்பாளராக இருப்பார் என்று அபிஷேக் அகர்வால் பாராட்டியுள்ளார்.
இந்திய சினிமாவை மட்டுமின்றி உலகையே அதிர வைக்கும் இந்த அற்புதமான திரைப்படம்  குறித்த கூடுதல் அறிவிப்புகளுக்கு  அனைவரும் காத்திருக்கவும். விரைவில் ஒவ்வொன்றாக அதிகாரப்பூர்வமாக அவை வெளியாகும்.
Previous Post

திருநெல்வேலியில் நடைபெற்ற ‘அறமுடைத்த கொம்பு’ இசை வெளியீடு.!

Next Post

ஒலிம்பியா பிக்சர்ஸ் எஸ் அம்பேத் குமார் வழங்கும், அருள்நிதி நடித்த ‘கழுவேத்தி மூர்க்கன்’ படம் தமிழகம் முழுவதும் 310 திரையரங்குகளில் வெளியானது

Next Post

ஒலிம்பியா பிக்சர்ஸ் எஸ் அம்பேத் குமார் வழங்கும், அருள்நிதி நடித்த 'கழுவேத்தி மூர்க்கன்' படம் தமிழகம் முழுவதும் 310 திரையரங்குகளில் வெளியானது

Popular News

  • இதயம் முரளி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்

    0 shares
    Share 0 Tweet 0
  • வில்லுப்பாட்டு மாதவியை சினிமாவிற்கு அழைத்துவந்த ‘வேட்ட சாமி’: ஜிப்ரான் இசையில் பாடகியாக அறிமுகம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவ் பஹதூர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மீண்டும் ஒரு பிரமாண்ட கூட்டணியில் சாம் சி எஸ்… ராம் பொதினேனியின் #RAPO23-க்கு இசையமைக்கிறார் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இதயம் முரளி – விமர்சனம்

July 12, 2026

வில்லுப்பாட்டு மாதவியை சினிமாவிற்கு அழைத்துவந்த ‘வேட்ட சாமி’: ஜிப்ரான் இசையில் பாடகியாக அறிமுகம்

July 12, 2026

‘டாக்ஸிக்’’ திரைப்படத்தின் ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு – ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது !

July 12, 2026

மீண்டும் ஒரு பிரமாண்ட கூட்டணியில் சாம் சி எஸ்… ராம் பொதினேனியின் #RAPO23-க்கு இசையமைக்கிறார் !

July 12, 2026

சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்

July 12, 2026

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

July 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.