• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“LIGER”படத்தின் பாடல் காட்சி மும்பையில் படமாகிறது…

by Tamil2daynews
October 26, 2021
in சினிமா செய்திகள்
0
“LIGER”படத்தின் பாடல் காட்சி மும்பையில் படமாகிறது…
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அவர்களின் பன்மொழி இந்திய திரைப்படமான
LIGER ( saala Crossbreed ) படத்தின் புதிய மாஸ் டான்ஸ் பாடல் காட்சி, மும்பையில் படமாகிறது!
தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் LIGER ( saala Crossbreed ) படத்தை கமர்ஷியல் கிங் இயக்குநராக புகழப்படும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இப்படம் மார்ஷியல் ஆர்ட்ஸ் ஆக்சன் படமாக மட்டுமல்லாமல், கமர்ஷியல் படத்திற்கான அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக உருவாகிவருகிறது.
விஜய் தேவரகொண்டா தனது முந்தைய படங்களில், பாடல்களில் பெரிதாக நடனமாடவில்லை. அவரது நடன திறமையை வெளிப்படுத்தும் வகையிலான கதைகள் அப்படங்களில் இல்லை. ஆனால் இந்த Liger திரைப்படத்தில், உங்களையெல்லாம் ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும்படி, அட்டகாசமான நடனத்தை வெளிப்படுத்தவுள்ளார்.
படக்குழு இந்த அதிரடி  மாஸான டான்ஸ் பாடலை, மும்பையில் மிகப்பெரும் பட்ஜெட்டில் அமைக்கப்பட்ட  அரங்கில் படமாக்க ஆரம்பித்துள்ளது. விஜய்தேவரகொண்டா, சார்மி இருவரும் இதில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். சமூக வலைதளத்தில் வெளியான புகைப்படத்தில் விஜய் தேவரகொண்டா டான்ஸ் ஆடுவதில், மிக மகிழ்ச்சியாக காணப்படுகிறார். இப்புகைப்படத்தை சார்மி கவுர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பெரும் உற்சாகத்துடன் வெளியிட்டு, அதிரடி மாஸான மசாலா நடனம் கொண்ட, கொண்டாட்டம் மிகுந்த பாடலை, ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
அவர் டிவிட்டில் குறிப்பிட்டுள்ளதாவது..
#liger நடன பாடல் மும்பையில் படமாகிறது. நம்புங்கள் @TheDeverakonda முன்னெப்போதும் கண்டிராத வகையில் நடனமாடியுள்ளார்.  அதிரடி மாஸான மசாலா நடனம் கொண்ட, கொண்டாட்டம் மிகுந்த பாடலை, ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் 😉 பின்குறிப்பு – இந்த ஆணழகனின் நடனத்தை கண்டு,  எனது அடிவயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சி உணர்வால், பாடல் தந்த உற்சாகத்தால் இந்த டிவிட் பகிரப்பட்டது 😍 @PuriConnects @DharmaMovies ,”
என்று பகிர்ந்துள்ளார்.
இப்படத்தினை Puri connects  நிறுவனம், பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.
இந்தியளவில் பன்மொழி திரைப்படமாகும் உருவாகும் இப்படத்தை Puri connects  மற்றும் Dharma Productions நிறுவனங்கள் மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது.
மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர்.
பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவரது காதலியாக நடிக்கிறார். உலக குத்துசண்டை பிரபலம் மைக் டைசன் அவர்கள் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் மிக முக்கிய அகதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். லைகர் (Liger) படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகிறது.
நடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு.
இயக்கம் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா
தயாரிப்பு நிறுவனங்கள் : Puri connects and Dharma Productions
ஒளிப்பதிவாளர்- விஷ்ணு சர்மா
கலை இயக்கம்- ஜானி சையிக் பாட்ஷா
படதொகுப்பாளர்- ஜுனைத் சித்திக்
சண்டை காட்சிகள் இயக்குனர்- Kecha
Previous Post

“தாதா சாகேப் பால்கே” விருது சூப்பர்ஸ்டாருக்கு குவியும் பாராட்டுகள்…

Next Post

Eternals – புதிய வீடியோவில்,  இந்திய திருமண காட்சிகள்,  ஏஞ்சலினா ஜோலி, ரிச்சர்ட் மேடன் மற்றும் பலர் நடிப்பில்,  இணையத்தில் வைரலாகி வருகிறது !

Next Post
Eternals – புதிய வீடியோவில்,  இந்திய திருமண காட்சிகள்,  ஏஞ்சலினா ஜோலி, ரிச்சர்ட் மேடன் மற்றும் பலர் நடிப்பில்,  இணையத்தில் வைரலாகி வருகிறது !

Eternals - புதிய வீடியோவில்,  இந்திய திருமண காட்சிகள்,  ஏஞ்சலினா ஜோலி, ரிச்சர்ட் மேடன் மற்றும் பலர் நடிப்பில்,  இணையத்தில் வைரலாகி வருகிறது !

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.