• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் சொல் அகராதி : குறுஞ்செயலி

by Tamil2daynews
November 9, 2020
in சினிமா செய்திகள்
0
கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் சொல் அகராதி : குறுஞ்செயலி
0
SHARES
45
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
4.25 இலட்சம் சொற்களுடன் தமிழ் – ஆங்கில அகராதி
தமிழ்க் கணினி தொடர்பான ஆராய்ச்சிகளைக் கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்திவரும் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ‘சொல் அகராதி’ (chol agaraadhi) எனும் ஆண்டிராய்ட் ஆப்பிள் கருவிகளுக்கான குறுஞ்செயலியை இன்று வெளியிடுகிறது.
சங்ககால இலக்கியச் சொற்கள், வட்டார வழக்குச் சொற்கள், நிகழ்காலக் கலைச்சொற்கள் என்று 4.25 இலட்சம் சொற்களைச் சேகரித்து உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறுஞ்செயலி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொற்களைத் தேடும் வசதியோடு வெளியிடப்படுகிறது.
தமிழ்ச் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல், சொல்லுக்கான பொருள் விளக்கம், எளிய முறையில் பயன்படுத்தும் எடுத்துக்காட்டு, அச்சொல்லுக்கு இணையான பிற சொற்கள், தொடர்புடைய சொற்கள், உயர் பயன்பாட்டுச் சொற்களுக்கான ஒலி மற்றும் படங்கள், பதினாறு இலக்க எண்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலச் சொல் வடிவம் என்று பல்வேறு உள்ளடக்கங்களோடு இந்த அகராதி வெளியிடப்படுகிறது.
சட்டம், வேளாண்மை, அரசியல், கணினியியல், கணிதம், வேதியியல், புவியியல், உயிரியல் போன்ற 40 துறைகளின் சொற்கள் சொல் அகராதியில் துறைவாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் புதிய கலைச் சொற்கள் இந்த அகராதியில் சேர்க்கப்படுகின்றன.
விலையில்லா விளம்பரமில்லா குறுஞ்செயலியாக இது உலகத் தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. www.karky.in/apps என்ற தளத்தின் மூலம் இந்தக் குறுஞ்செயலியை ஆண்டிராய்ட் மற்றும் ஆப்பிள் கருவிகளில் தரவிறக்கலாம்.
Previous Post

விரைவில் வெளிவர இருக்கும் சிம்ஹாவின் ‘வசந்த முல்லை’

Next Post

ராஜா ஶ்ரீபத்மநாபன் இயக்கத்தில் மனித உரிமைகள் ஆணையத்தைப் பற்றி முழுநீளத் திரைப்படம் 

Next Post
ராஜா ஶ்ரீபத்மநாபன் இயக்கத்தில் மனித உரிமைகள் ஆணையத்தைப் பற்றி முழுநீளத் திரைப்படம் 

ராஜா ஶ்ரீபத்மநாபன் இயக்கத்தில் மனித உரிமைகள் ஆணையத்தைப் பற்றி முழுநீளத் திரைப்படம் 

Popular News

  • நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • FARISHTON – First song by Khatija Rahman (daughter of AR Rahman) Music composed by AR Rahman

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

August 10, 2026

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

August 10, 2026

மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”

August 10, 2026

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

August 10, 2026

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

August 10, 2026

டி சி (DC) – விமர்சனம்

August 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.