• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

*மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘மாறா’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது அமேசான் ப்ரைம் வீடியோ* 

by Tamil2daynews
December 30, 2020
in சினிமா செய்திகள்
0
*மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘மாறா’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது அமேசான் ப்ரைம் வீடியோ* 
0
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
காதலும் நம்பிக்கையும் நிறைந்ததோர் உலகத்தினுள் நம்மை அழைத்துச்செல்லும் இத்திரைப்படமானது காண்போரின் முகத்தில் புன்னகையைப் பூக்கச்செய்து இதயங்களைக் கவரும்.
ட்ரைலர் : http://amzn.to/MaaraTrailer
திலீப் குமார் இயக்கத்தில், ப்ரமோத் பில்ம்ஸின் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா ஆகியோர் தயாரித்த இத்திரைப்படமானது மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஶ்ரீநாத் ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களில் கொண்டுள்ளது
இந்தியா மற்றும் 200 நாடுகளில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் ‘மாறா’ படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் ஜனவரி 8 முதல் தமிழில் காணலாம்
அமேசான் ப்ரைம் புத்தம்புதிய திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் ப்ரைம் ம்யூஸிக்கின் வாயிலாக விளம்பரமில்லா இசை சேவை, இந்தியாவின் மிகப்பெரும் விலைபொருள்களின் தேர்வில் இலவசமான துரித டெலிவரி, அதிகபட்ச தள்ளுபடிகளுக்கு முற்கால அனுமதி, ப்ரைம் ரீடிங்கின் வழியாக அளவில்லா ப்ரைம் புத்தகங்களை வாசித்தல் மற்றும் மொபைல் கேமிங்க் சேவைகளையும் அளிக்கிறது, மாதம் ரூ. 129 க்கு மட்டுமே
மும்பை, இந்தியா, டிசம்பர் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்த் திரைப்படமான ‘மாறா’ படத்தின் ட்ரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ இன்று வெளியிட்டது. மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஶ்ரீநாத் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தை திலீப் குமார் இயக்க ப்ரமோத் பில்ம்ஸின் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா ஆகியோர் தயாரித்துள்ளனர். இவர்களுடன் அலெக்ஸாண்டர் பாபு, ஷிவதா நாயர், மௌலி, பத்மாவதி ராவ் மற்றும் அபிராமி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது ஜனவரி 8, 2021 அன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளில் வெளியிடப்படுகிறது.
பார்வையாளர்களை வண்ணமயமானதோர் உலகத்திற்கு அழைத்துச்செல்லும் இந்த ட்ரெய்லரானது பாருவின் (ஷ்ரத்தா ஶ்ரீநாத்) வாழ்க்கையை காட்டுவதோடு மட்டுமில்லாமல், அவளின் புதிய வீட்டில் அவளுக்குக் கிடைக்கும் ஓவியங்கள் நிறைந்ததோர் புத்தகத்தையும் விவரிக்கிறது. அந்த ஓவியங்களால் ஈர்க்கப்பட்ட அவள் அவற்றை வரைந்த ஓவியனான மாறாவை (மாதவன்) தேடிச்செல்கிறாள். அவளின் பயணமானது வண்ணங்கள், இசை, காதல், நம்பிக்கை, மற்றும் பல உணர்வுகள் இழைந்தோட ஓர் பரிபூரண அனுபவமாய் அமைகிறது.
‘மாறா’ படத்தில் அவரது கதாபாத்திரத்தைப் பற்றிப் பேசுகையில் நடிகர் மாதவன் கூறியது: “மாறா எனும் சொல் ஓரு தனி மனிதனை மட்டும் குறிக்காமல் பல இனிமையான மனிதர்களைக்கொண்ட ஓர் சிறு உலகத்தையே குறிக்கிறது. அம்மனிதர்களின் தினசரி வாழ்வுகளும் அவர்களின் உரையாடல்களும் மிகவும் இயல்பானவை, ஆனால் அவர்களின் அனுபவங்களோ பார்வையாளர்கள் தங்களை அவர்களில் ஒருவராய் உணர வைக்குமளவு அலாதியானவை. என்னுடைய கதாபாத்திரமானது தன்னை சுற்றியுள்ள மனிதர்களிடம் பழகுவதில் அவன் காட்டும் மையமான அன்பை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த அன்பே அவனைப் பார்வையாளர்களுக்கு மிகவும் விரும்பத்தக்கதோர் கதாபாத்திரமாக உருவாக்குகிறது. பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் பலர் வாழ்வுகளில் அவன் மாற்றங்களை உருவாக்குகிறவனாவான். கதாபாத்திரத்தின் அந்த குணாதிசயமே என்னை வெகுவாய் ஈர்த்தது. இத்திரைப்படமானது அந்த உறவுகளையும் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்ளும் அழகான தருணங்களையும் மையமாகக் கொண்டுள்ளது. ஒரு இனிய உலகமது. அவ்வுலகை உயிர்ப்பிக்கப் பல முன்னணி நடிகர்களின் அபாரமான நடிப்பு உதவியுள்ளது.
அவர்களில் பலர் மீது நான் திரையிலும் திரைக்கு அப்பாலும் கொண்டுள்ள அபிமானமானது அவர்களுடன் நான் நடித்த காட்சிகளுக்கு மெருகூட்டியது மட்டுமில்லாமல் எனக்கு என்றும் நீங்க நினைவுகளாகவும் அமையக் காரணமாயிருந்தது. இத்திரைப்படத்தைக் காணும் பார்வையாளர்களும் இதனை நாங்கள் படைக்கும் போது பெற்ற முழுமையானதோர் அனுபவத்தைப் பெறுவார்கள் என நம்புகிறேன். மாறா என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதோர் படைப்பு. உங்களுக்கும் அவ்வாறே அமையுமென நம்புகிறேன்.”
‘மாறா’ படத்தில் உள்ள அவரது கதாபாத்திரத்தைப் பற்றிப் பேசுகையில் நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் கூறியது: “பாரு என்பவள் தனக்கு என்ன வேண்டுமெனத் தானே அறியாதவள். ஆனால் தனக்கு என்ன தேவை இல்லை என்பதை அறிவாள். அவளிடமுள்ள தீர்க்கமும் மனிதத்தின் மீது அவள் கொண்டுள்ள நம்பிக்கையும் அவளை சக மனிதர்களிடம் ஈர்க்கிறது. அவளிடம் பழகிய சிறிது நேரத்திலேயே அவளுடன் பல காலம் பழகியதோர் உணர்வைக் கொடுக்கக்கூடிய குணமானது அவளின் சிறப்பம்சமாகும். அவள் இந்த கதையின் உலகினை சுற்றித்திரியும் போதும் அவ்வுலகினில் உள்ள புதிர்களில் தொலைந்து பல ஆச்சரியமூட்டும் கதைகளையும் மனிதர்களையும் சந்திக்கும்போதும் அவள் தன்னை ஒரு சிறுமியாகவே உணர்கிறாள் என்பது என்னை வெகுவாக ஈர்த்தது.”
கதைச்சுருக்கம்
ஓர் கடற்கரையோர ஊரின் சுவர்களில் தான் சிறுமியாய் இருந்த போது கேட்ட கதையை ஓவிய வடிவத்தில் கண்ட பாரு அதனை வரைந்த ஓவியனான மாறனைத் தேடிச்செல்கிறாள்.
Previous Post

தன்னுடைய தனித்திறமையால் அடுக்கடுக்கான வெற்றிகளை குவித்து வரும் இளம் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்

Next Post

*அமேசான் பிரைம் வீடியோ அமேசான் ஒரிஜினல், தி ஃபேமிலி மேனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய சீசன் பற்றி ஒரு குறிப்பைக் கொடுக்கும் போது ஆர்வத்தைத் தூண்டுகிறது*

Next Post
*அமேசான் பிரைம் வீடியோ அமேசான் ஒரிஜினல், தி ஃபேமிலி மேனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய சீசன் பற்றி ஒரு குறிப்பைக் கொடுக்கும் போது ஆர்வத்தைத் தூண்டுகிறது*

*அமேசான் பிரைம் வீடியோ அமேசான் ஒரிஜினல், தி ஃபேமிலி மேனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய சீசன் பற்றி ஒரு குறிப்பைக் கொடுக்கும் போது ஆர்வத்தைத் தூண்டுகிறது*

Popular News

  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.