• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

“மாறன்”-விமர்சனம்

by Tamil2daynews
March 12, 2022
in விமர்சனம்
0
பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்
0
SHARES
65
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ், மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, “ஆடுகளம் நரேன், ராம்கி, போஸ் வெங்கட், “மாஸ்டர்” மகேந்திரன், நடித்துள்ள படம் “மாறன்”.

இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இயக்கம் கார்த்திக் நரேன்.

தனுஷ் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான “கர்ணன்” திரைப்படத்திற்குப் பிறகு அவரது படங்கள் ஓடிடி  தளத்தை மட்டுமே நம்பி வெளிவருகின்றன.ஏனென்றால் அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு  முழு படத்தையும் பார்த்த பிறகு தியேட்டரில் ரிலீஸ் பண்ண தைரியம் வரலன்னுதான் சொல்லணும்.தனுஷ் நடிப்பில் வெளிவந்த அந்தரங்கி ரே,கலாட்டா கல்யாணம், ஜகமே தந்திரம், படங்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம் .

ஓடிடியில் பார்த்தால்கூட இந்தப் படங்களின் எதிர்பார்ப்பு மிகவும் ஏமாற்றம் என்றுதான் சொல்லணும்.சரி “மாறன்” படம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்.

நேர்மையான பத்திரிக்கையாளராக இருக்கும் ராம்கி ஒரு பள்ளியில் நடக்கும் ஊழல் பற்றிய உண்மையை கண்டுபிடித்து பத்திரிகையில் எழுதியதால் ரவுடிகளால் கொல்லப்படுகிறார் .அதே சமயத்தில் பிரசவத்தின்போது அவரது மனைவியும் உயிரிழக்கிறார்.

 இது ரெகுலரான தமிழ் சினிமால வர கதனாலும் ரவுடிகளால் கொல்லப்படும் ராம்கிக்கு ஒரு மகன் அவர் தான் நம்ம தனுஷ் அவங்க அம்மா இறக்கும் பொழுது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து விட்டு இறந்து விடுகிறார்.

 இப்ப அந்த குழந்தையை வளர்க்கிற பொறுப்பு தனுசுக்கு தான்.குழந்தை போல இருக்குற தனுசு கையில் ஒரு குழந்தையா..! அப்படின்னு படம் பார்பவர்கள்.ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும்,அவர்களின் மனதில் கேள்வி கேட்பது டைரக்டருக்கு தெரிஞ்சிருக்கணும்.

ஒருவழியாக 2000ல்  ஆரம்பிக்கும் கதை தனுஷ் தந்தை மறைவுக்குப்பின் 2021 என்று டைட்டில் போட்டு ஆரம்பிக்கிறார் இயக்குனர்.

படத்தின் அறிமுக காட்சியிலேயே தனுஷ்  மதுபான பாரில் போதையில்  ரவுடிகளுடன் சண்டையிட்டு   காவல்நிலையம் செல்கிறார்.அங்கு வந்த கதாநாயகி மாளவிகா மோகனன் விளக்கம் சொல்லி தனுசை அழைத்து செல்கிறார் .

 ஏன் காவல் நிலையம் செல்கிறார் ..!

தனுஷ் அவரது தந்தை போலவே ஒரு நேர்மையான பத்திரிகையாளராக இருந்து உண்மையை எழுதியதால் பலரின் பகைக்கு ஆளாகிறார்.ஒரு புதிய நிறுவனத்தில்  வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே பிரபலமான பத்திரிகையாளர் ஆகிறார் தனுஷ்.

தனது கல்லூரி போலீஸ் நண்பர்  கேட்டதால் அரசியல்வாதியான சமுத்திரக்கனி செய்யும் ஓட்டுப்பதிவு இயந்திரம் முறைகேட்டை ஆதாரங்களுடன் கண்டுபிடித்து தனது வேலை பார்க்கும் பத்திரிக்கையில் எழுதுகிறார் தனுஷ் இதனால் அரசியல் பகயை சம்பாதிக்கிறார் தனுஷ்.இதனால் தனது தங்கையை கடத்தி தீ வைத்து  எரிப்பது போல் ஒரு காட்சி வருகிறது.

இதுதான் படத்தோட முதல் பாதி படத்தோட இரண்டாம் பாதி தனது தங்கை கடத்தி உண்மையில் தீ வைத்து எரிக்கப்பட்டாரா,  இல்லையா என்பதுதான் இரண்டாம்பாதி.

“மாறன்”என்ற நேர்மையான பத்திரிக்கையாளராக தனுஷ்.

முதலில் நடிகர் தனுசுக்கு “இன்வஸ்டிகேடிவ்  ஜார்னலிஸ்ட்” என்ற கதாபாத்திரம் துளியும் ஒட்டவில்லை.அங்கேயே படம் பாதி படுத்திருச்சின்னுதான்  சொல்லணும்.

 அடுத்து கதாநாயகி மாளவிகா மோகனன் .

பேட்டை,மாஸ்டர், திரைப்படங்களில் மட்டும் மாளவிகா மோகனை  பேருக்கு இவரை யூஸ் பண்ணி இருப்பாங்க ன்னு பார்த்தா மாறன் படத்திலும் அதே மாதிரி தான் பண்ணி இருக்காங்க.இந்த படத்தில் பார்க்க சகிக்கல பெண் ஜார்னலிஸ்ட்  அப்படின்னா இந்த டல்  மேக்கப் போட்டுக்கிட்டு வாயில ஒரு சிவிங்கம் மென்னுகிட்டு இருக்கணும்னு இயக்குனர் நினைத்தாரோ என்னவோ.

ஒருவேளை இயக்குனர் கார்த்திக் நரேன் பார்த்த பெண் ஜார்னலிஸ்டில்  யாராவது  அப்படி இருந்து இருப்பாங்க போல.ஒரு நல்ல ஜார்னலிஸ்ட் பற்றிய கதையை இன்னும் கொஞ்சம் வலுவாக சொல்லியிருக்கலாம்.

மிகவும் சுமாரான திரைக்கதைய.
பேனாவை கத்தியாக பயன்படுத்தி ரவுடிகளுடன் தனுஷ் போடும் சண்டைக் காட்சிகள் ஹீரோயிசத்தை காட்டுவதாக உள்ளது.

அண்ணன் தங்கை பாசம் காதல் ஆகியவற்றை அங்கங்கே வேண்டும் என்று திணித்தது போல உள்ளது.பல காட்சிகளில் வேண்டா வெறுப்பாகவே தனுஷ் நடித்து இருக்கிறார் என்பது படம் பார்க்கும் பலரின் கருத்தாகவே இருக்கும்.

இந்த படத்தில் இயக்குனர் தவற விட்ட சில விஷயங்கள்.
  •  சமுத்திரகனியின் வில்லத்தனமான நடிப்ப இன்னும் கொஞ்சம் நல்லா காட்டி இருக்கலாம் .
  • இரண்டு மூன்று சீன்களில் மட்டுமே வந்த இயக்குனர், நடிகர் அமீரின் கதாபாத்திரமே தவறு என்றுதான் சொல்ல வேண்டும்.ஏனென்றால் தான் எந்த தவறு செய்தாலும் பணம் மட்டுமே குறிக்கோளாக இருந்து தனது பிள்ளையை மேல்படிப்பு படிக்க வைக்க நினைக்கும் தந்தையாக தான் வருகிறார் அமீர்.தனது குழந்தையின் படிப்பிற்காக என்ன தவறு வேணுனாலும் செய்யலாம் .அதுவும் படத்தில் அமீர் செய்திருக்கும் தவறு ஒரு தேசத் துரோக மான செயல் இத வந்து இயக்குனர் தவிர்த்திருக்கலாம் .ஆனால் பல பேர் வறுமையில் வாட கூடிய பெற்றோர்கள் இருக்கிறார்கள் அவர்கள் இதை பார்த்தா ஒரு தூண்டுகோலாக அமைய வாய்ப்பு இருக்கிறது.
  • ஜி.வி .பிரகாஷ்குமார் இசையில் “பொல்லாத உலகம்” பாடல் மட்டுமே கேட்கும்படி உள்ளது பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
  • “மாஸ்டர்” மகேந்திரன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அவருக்கு “தர்பார்” ரஜினி என்று நினைப்பு லைட்டான தாடியுடன் வருகிறார் என்னதான் மகேந்திரன் அப்படிங்கற பேர டைட்டில் கார்டில் போட்டாலும்   அந்த “மாஸ்டர்” பேரு தான் அவருக்கு கரெக்டா  இருக்கும்னு நினைக்கிறேன்.காக்கி சட்டை போட்டாலும் குழந்தைத்தனமான ரியாக்சன மாத்த முடியல.

தனுஷ் “மாறன்” என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒரு நல்ல பத்திரிக்கையாளராக ஜெயித்து இருக்கிறாரா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த “மாறன்” வெறும் சுமார் ரகமே.
                                                          விமர்சகர்
                                                             சரண்
Previous Post

செபஸ்தியான் தயாரிப்பில் “படைப்பாளன்”…

Next Post

சொந்த மண்ணுக்கு நல்லது செய்வதற்காக நடிகராக மாறிய சிதம்பரம்

Next Post
பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

சொந்த மண்ணுக்கு நல்லது செய்வதற்காக நடிகராக மாறிய சிதம்பரம்

Popular News

  • மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.*

    மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.*

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.