• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தீபாவளி ரேஸில் கவனம் ஈர்த்த “மரிஜீவானா” திரைப்படம் !

by Tamil2daynews
November 18, 2020
in சினிமா செய்திகள்
0
தீபாவளி ரேஸில் கவனம் ஈர்த்த “மரிஜீவானா” திரைப்படம் !
0
SHARES
39
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தீபாவளி என்பது தமிழர்கள் வாழ்வில் கொண்டாட்ட திருநாள். புத்தாடை, மத்தாப்பு, இனிப்பு, விருந்து இவையனைத்தையும் தாண்டி நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் தியேட்டரில் புது சினிமா பார்ப்பதென்பது காலந்தோறும் மாறாத பழக்கம். இந்த வருடம் பண்டிகை திருநாளில் குறைந்த படங்களே திரையரங்கில் வெளியாகியுள்ளது. அதில் அனைவர் கவனத்தையும் ஈர்த்து ரசிகர்களின் பேராதரவில் வெற்றி பெற்றுள்ளது “மரிஜீவானா” திரைப்படம்.

 

“அட்டு” திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த ரிஷி ரித்விக் நடிப்பில் இயக்குநர் M D ஆனந்த் இந்த “மரிஜீவானா”  படத்தை  இயக்கியுள்ளார். Third Eye  Creations சார்பில் M D விஜய் இப்படத்தினை தயாரித்துள்ளார்.

நடிகர் ரிஷி இது குறித்து கூறியதாவது…

இந்த தீபாவளிக்கு என்னுடைய படம் “மரிஜீவானா”  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. “அட்டு” திரைப்படத்தின்போது  ரசிகர்கள் எனக்கு பெரும் வரவேற்பு தந்தார்கள். ஒரு புதுமுக நடிகனாக இல்லாமல் அவர்களில் ஒருவனாக என்னை கொண்டாடினார்கள். “அட்டு” திரைப்படத்தில் முழு ரௌடியாக நடித்திருந்தேன். “மரிஜீவானா”  படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன். “அட்டு” போலவே ரசிகர்கள் இப்படத்திலும் எனக்கு பெரும் வரவேற்பு தந்திருக்கிறார்கள். தீபாவளிக்கு வெளியான படங்களில் எங்கள் படம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்பதே பெரு மகிழ்ச்சியாக உள்ளது. கண்டிப்பாக இப்படம் அனைவரையும் கவரும் அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.

இயக்குநர் M D ஆனந்த் கூறியதாவது….

இந்த தீபாவளிக்கு எங்கள் படம் வெளியாகிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படம் போதைப்பொருள் சம்பந்தமாக இதுவரையிலும் தமிழ் சினிமாவில்  இல்லாத கோணத்தில் புதுவிதமாக, சமூக நோக்கோடு ஒரு கதையை கூறியுள்ளோம். அனைவருக்கும் பிடிக்கும் படியான வகையில் இப்படம் இருக்கும். தீபாவளி திருநாளில்  ரசிகர்கள் தியேட்டர்களில் எங்கள் படத்திற்கு பெரிய வரவேற்பு தந்துள்ளார்கள். விமர்சகர்களும் தரமான மதிப்பீடு தந்துள்ளார்கள். எங்கள் படம் ரசிகர்கள் மனதையும் விமர்சகர்கள் பாராட்டையும் பெற்றது பெரு மகிழ்ச்சி. இந்த “மரிஜீவானா”  உங்களை கண்டிப்பாக திருப்தி படுத்தும் அனைவரும் பாருங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.

இந்த “மரிஜீவானா”  திரைப்படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாக நடித்துள்ளார் ஆஷா பார்த்தலோம்
நாயகியாக நடித்துள்ளார். பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். கார்த்திக் குரு இசையமைக்க பால ரோசைய்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். M D விஜய்  படத்தொகுப்பு செய்துள்ளார்.  Third Eye  Creations இப்படத்தினை தயாரித்துள்ளார்கள். தமிழ்த்தாய் கலைக்கூடம் நிறுவனத்தார் தமிழகம் முழுவதும் இப்படத்தினை வெளியிட்டுள்ளார்கள்

Previous Post

எங்கள் அணியின் பலம் தயாரிப்பாளர் “சிவசக்தி”பாண்டியன் பதில்..!

Next Post

தயாரிப்பாளர் சிங்காரவேலன் – தேர்தல் செய்தி..!

Next Post
தயாரிப்பாளர் சிங்காரவேலன் – தேர்தல் செய்தி..!

தயாரிப்பாளர் சிங்காரவேலன் - தேர்தல் செய்தி..!

Popular News

  • நடிகர் ரஞ்சித் நடிக்கும் ‘இறுதி முயற்சி’ படத்தின் இசை வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • கண்ணன் ரவி குரூப், கண்ணன் ரவி தயாரிப்பில் தீபக் ரவி இணை தயாரிப்பில், ஜீவா நடிக்கும் புதிய படம் “தலைவர் தம்பி தலைமையில்”

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீகாந்த் ஒதேலா – “தி பாரடைஸ்” படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபுவை மீண்டும் வெள்ளித் திரைக்கு அழைத்து வருகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • வெற்றிமாறனின் திரைப்பட கல்லூரியில் 2-வது பேட்ச் மாணவர் சேர்க்கை ஆரம்பம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Actress Ramya Pandian latest stills

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

காந்தாரா சாப்டர் -1 – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

October 2, 2025

பதற்றமான தென்தமிழகத்து இளைஞர்களில் தப்பிப்பிழைத்த இளைஞர்களின் கதைதான் “பைசன்”– இயக்குனர் மாரி செல்வராஜ்

October 2, 2025

ஆனந்த் எல் ராயின் தேரே இஷ்க் மேயின் டீசரில் தனுஷ் – க்ரிதி சனோன்: ஒரு காவிய காதல் கதை!

October 2, 2025

இட்லி கடை – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

October 2, 2025

மிகுந்த நெகிழ்ச்சியுடன் நடிகர் ஷபீர் கல்லரக்கல்;

October 2, 2025

கண்ணன் ரவி குரூப், கண்ணன் ரவி தயாரிப்பில் தீபக் ரவி இணை தயாரிப்பில், ஜீவா நடிக்கும் புதிய படம் “தலைவர் தம்பி தலைமையில்”

October 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.