• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஸ்ரீகாந்த் ஒதேலா – “தி பாரடைஸ்” படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபுவை மீண்டும் வெள்ளித் திரைக்கு அழைத்து வருகிறார்!

by Tamil2daynews
September 27, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஸ்ரீகாந்த் ஒதேலா – “தி பாரடைஸ்” படத்திற்காக லெஜெண்ட்டரி  மோகன் பாபுவை மீண்டும் வெள்ளித் திரைக்கு அழைத்து வருகிறார்!

 

இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் தி பாரடைஸ், ஒவ்வொரு அப்டேட்டிலும் ரசிகர்களின் ஆவலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ‘ஜடால்’ வேடத்தில் நானியின் லுக் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதேலா படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் மிகுந்த நுணுக்கத்துடன் வடிவமைத்து வருகிறார், இதுவரை அவர் தந்து வரும்  ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களைப் பெரிய அளவில் உற்சாகப்படுத்தி வருகிறது.

இன்று, “தி பாரடைஸ்”  படக்குழு, சினிமா வரலாற்றில் தனித்துவமான இடம் பிடித்த மூத்த நட்சத்திரம் மோகன் பாபுவை ‘ஷிகன்ஜா மாலிக்’ என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்குத் திரும்பும் மோகன் பாபுவின் இந்த வேடம், அவர் பழைய “வின்டேஜ்” அழகை மீண்டும் உயிர்ப்பிக்கும்விதமாக அமைந்துள்ளது. கதாபாத்திரம் குறித்து இயக்குநர் சொன்னவுடன் மோகன் பாபு பெரும் உற்சாகத்துடன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அவர் நடித்துள்ள கதாப்பாத்திரத்தின் புதிய லுக், அவரது செல்லப்பெயரான  “டைலாக் கிங்” க்கு ஏற்ப தத்ரூபமாக உள்ளது.

அழுத்தமான, சக்திமிகுந்த மற்றும் ஸ்டைலான  இந்த வேடம், மோகன் பாபுவின் தனித்துவமான வசனங்களையும், தனித்துவமான நடிப்புத்திறமையையும்  வெளிப்படுத்தவிருக்கிறது. இந்தக் கதாபாத்திரம் படத்தின் முக்கிய ஈர்ப்பாக மாறி, ரசிகர்களுக்கு ஒரு புதிய அவதாரத்தைத் தரப்போகிறது.

சுதாகர் செருகுரி தயாரிப்பில், எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். “தி பாரடைஸ்”  படம் 2026 மார்ச் 26ஆம் தேதி உலகளவில் 8 மொழிகளில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம், மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் வெளியாகிறது. இந்திய சினிமாவை உலகளவில் கொண்டாடவிருக்கும் இந்த “பான்-வேர்ல்ட்”  பிரம்மாண்ட படத்திற்கு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

நடிகர்கள்: நானி, மோகன் பாபு, ராகவ் ஜுயால்
தொழில் நுட்ப குழு:
இயக்கம், கதை : ஸ்ரீகாந்த் ஒதேலா
தயாரிப்பு: சுதாகர் சேருகுரி
தயாரிப்பு நிறுவனம் : எஸ்எல்வி சினிமாஸ்
ஒளிப்பதிவு : சாய்
இசை : அனிருத் ரவிச்சந்தர்
எடிட்டிங் : நவீன் நூலி
புரொடக்ஷன் டிசைனர் : அவிநாஷ் கொல்லா
மக்கள் தொடர்பு : சதீஷ் S2 மீடியா
மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ
Previous Post

‘டிரான்: ஏரஸ்’ படத்தில் நடித்துள்ள ஜாரெட் லெட்டோ தனது ஹீரோ ஜெஃப் பிரிட்ஜஸ் பற்றி சிலாகிக்கிறார்!

Next Post

“மருதம்” திரைப்பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

Next Post

“மருதம்” திரைப்பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

Popular News

  • தமன்குமார் நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் இசை வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • டாப் ஸ்டார் பிரஷாந்த், இயக்குனர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ‘அன்னபூரணி’ படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்துள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • சஞ்சனா நடராஜன்: இந்தியத் திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் நட்சத்திரம்

    0 shares
    Share 0 Tweet 0
  • புலியும் பட்டாம்பூச்சியும்… வெளியானது புலிமடா திரைப்படத்தின் டீசர்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சசிகுமார்- ராஜு முருகன் கூட்டணியில் ‘ மை லார்ட் ( My Lord) திரைப்பட இசை வெளியீட்டு விழா

February 9, 2026

பிராகரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘HALF: The Chronicles of Two Half-Blooded Vampires’ திரைப்படத்தின் இரண்டாம் போஸ்டரை வெளியிட்டது!

February 9, 2026

“பூக்கி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

February 9, 2026

ரசிகர்களை நேரில் சந்தித்த “மை லார்ட்” படக்குழு !!

February 9, 2026

சரத்குமார் நடிக்கும் ‘ஆழி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

February 9, 2026

ரெட் லேபில் – விமர்சனம்

February 7, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.