மாஸ்டர் படத்தில் நடித்துள்ள விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் எந்த காலேஜில் பணிபுரிபவர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் விஜய் மாணவர்களுக்கு மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. தற்போது இப்படத்தின் விஜய், ஜான் துரைராஜ் என்ற கதாபாத்திரல் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய்யின் ஐ.டி.கார்டு ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதில் சென்ட் ஜெப்ரிஸ் என்ற காலேஜில் பணிபுரிபவராக அந்த ஐ.டி.கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.