• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

வீதியில் கேரம் போர்டு விளையாடிய அமைச்சர் ஜெயக்குமார்

by Tamil2daynews
October 24, 2020
in செய்திகள்
0
வீதியில் கேரம் போர்டு விளையாடிய அமைச்சர் ஜெயக்குமார்
0
SHARES
34
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அதிமுகவில் மிக உயர்ந்த பொறுப்பு, மூத்த அமைச்சர், முன்னாள் சபாநாயகர் என பல்வேறு அடையாளங்களுடன் இருப்பவர் திரு.ஜெயக்குமார்.
அரசியல்வாதிகள் என்றாலே வெள்ளை உடையும் கட்சி கொடி தாங்கிய காரும் தான் அடையாளமாய் இருக்கும். அவர்களை மக்கள் அணுகி தங்கள் குறைகளை சொல்வது என்பது சற்று சிரமமான விஷயம்.ஆனால் அந்த வகையில் எப்போதுமே தனக்கென ஒரு தனி பாணியில் வலம் வந்து கொண்டிருப்பவர் அமைச்சர் ஜெயக்குமார்.
செல்லும் வழியில் விலங்குகளை கண்டால் அவற்றுக்கு உணவு கொடுப்பது, சாலையில் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பது, கட்சி நிகழ்ச்சிகளில் கச்சேரிகள் நடந்தால் மேடையில் அவரே பாடுவது, நடனமாடுவது, இளைஞர்களோடு கிரிக்கெட் விளையாடுவது, ஆழ்கடலில் படகில் பயணித்து கடல் சார்ந்த ஆய்வு பணிகளை மேற்கொள்வது,எப்போதும் எந்த நேரத்திலும் மக்கள் குறை கேட்பது, ஏழ்மையில் இருக்கும் யாரேனும் குறித்து செய்தி தெரிந்தால் அவர்களுக்கு உடனே உதவுவது என்று ஒரு வித்தியாசமான  மனிதராகவே வாழ்ந்து வருகிறார்.
நேற்று தனது ராயபுரம் தொகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஜெயக்குமார் சென்றிருந்தார். காரிலிருந்து இறங்கி வீதியில் நடந்து செல்லும் போது சிறுவர்கள் சிலர் கேரம்போர்டு ஆடுவதை பார்த்தார். ஏற்கனவே கேரம் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அமைச்சர் உடனே சிறுவர்களோடு சென்று அவர்களுக்கு இணையாக அமர்ந்து கொண்டு கேரம் விளையாடத் தொடங்கினார்.
 நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கேரம் ஆடியதால் அவரால் எளிதாக காயினை போட முடியவில்லை. ஐந்தாவது முயற்சியில் நாணயத்தை கேரம் பாக்கெட்டில் போட்டார். இதைப்பார்த்த சிறுவர்கள் அமைச்சர் தங்களோடு விளையாடியதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது அவர்களைப் பார்த்து மூன்று நான்கு முறை முயற்சி செய்தும் என்னால் காயினை போடமுடியவில்லை, ஐந்தாவது முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறேன்.
இதே போல நீங்களும் எந்த விஷயத்திலும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். பின்னர் சிறுவர்கள் அமைச்சரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டனர். புகைப்படத்தை எடுத்துக் கொண்டு சிறுவர்களிடம் கைகுலுக்கி அங்கிருந்து விடைபெற்றார் அவர். எந்த நேரத்திலும் மக்களோடு மக்களாகவே பயணிக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்!
Previous Post

“அறிதுயில்” குலசேகரப்பட்டினம் தசரா பின்னனியில் படம் உருவானது.

Next Post

‘Thanthuvitten Ennai’ Web Series Trailer

Next Post
‘Thanthuvitten Ennai’ Web Series Trailer

'Thanthuvitten Ennai' Web Series Trailer

Popular News

  • ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து அதிரடியான புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு மனிதர் அனைவருக்கும் எதிராக: மனோஜ் பாஜ்பாய், திவ்யா தத்தா மற்றும் போமன் இரானி நடிப்பில் உருவாகியுள்ள ‘லாஸ்ட் மேன் இன் டவர்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி ஹிந்தி ZEE5-ல் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் பஸில் ஜோசப் (Basil Joseph) – எல். கே. அக்ஷய் குமார் (L. K. Akshay Kumar) இணைந்து நடித்திருக்கும் ‘ராவடி (Raawadi)’ படத்தின் ‘அட்ரா பரமா.. ’ – முதல் பாடல் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’!

November 4, 2026

ட்ரூ ஸ்டோரீஸ் தயாரிப்பில் ஷேன் நிகமின் அடுத்த திரைப்படம் ஏற்காட்டில் பூஜையுடன் தொடக்கம்!

November 4, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் 27 நவம்பர் 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராகிறது, படத்திலிருந்து பிரத்யேகமான “தேங்க்ஸ்” டீஸர் மூலமாக வெளியீட்டுத் தேதியை அறிவித்தது படத்தயாரிப்பு நிறுவனம்!

November 4, 2026

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து அதிரடியான புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

November 4, 2026

‘ஜான் டோ’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

November 4, 2026

‘தர்மன்’ திரைப்படத்தில் இணைந்த நட்சத்திரம் – நடிகை ஶ்ரீலீலா!

November 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.