• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நயன்தாரா அம்மனாக அசத்தும் “மூக்குத்தி அம்மன்” பட டிரெய்லரை வெளியிட்டது டிஸ்னி+ ஹாட், ஸ்டார் வி ஐ பி (Disney+ Hotstar VIP ) !

by Tamil2daynews
November 9, 2020
in சினிமா செய்திகள்
0
நயன்தாரா அம்மனாக அசத்தும் “மூக்குத்தி அம்மன்” பட டிரெய்லரை வெளியிட்டது டிஸ்னி+ ஹாட், ஸ்டார் வி ஐ பி (Disney+ Hotstar VIP ) !
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
டிஸ்னி+ , ஹாட் ஸ்டார் வி ஐ பி (Disney+ Hotstar VIP ) ! மிக சமீபத்தில், தமிழ் ரசிகர்களை மனதில் கொண்டு அவர்களுக்கென்றே, தமிழ் நாட்டின் புதிய திரை… உங்கள் சொந்த திரை  எனும் பெயரில் புதியதாக பல திட்டங்களை ஆரம்பித்துள்ளது. இதில் வெளியாகவுள்ள ஐந்து புதிய தலைப்புகளை சமீபத்தில் அறிவித்தது. இது தமிழ் ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சி அலைகளை  ஏற்படுத்தியுள்ளது.  அதில் முதலாவதாக “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் நேரிடையாக தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது.
“மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ஒரு ஆன்மீக டிராமா திரைப்படம். இப்படத்தில் அம்மனாக நயன்தாரா முன்ணனி பாத்திரத்தில் நடிக்க,  RJ பாலாஜி ஏஞ்சல்ஸ் ராமசாமி எனும் பாத்திரத்தில் நடிக்கிறார்.  குடும்ப பாரங்களையும் தன் பணியையும் கடிவாளாம் பூட்டப்பட்டது போல்  பார்த்து வரும், ஏஞ்சல்ஸ் ராமசாமி வாழ்விற்குள் மூக்குத்தி அம்மன் நிஜமாக வர, அடுத்து நடக்கும் களேபரங்களே, கதையாக அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் டிரெய்லர் லிங்க் : https://youtu.be/-5MvjjJfMkE
தெலுங்கு டிரெய்லர் லிங்க்  : https://youtu.be/hzyuaiEnbl0
இப்படத்தின் டிரெய்லர் ஞாயிறன்று நடைபெற்ற CSK vs RCB இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது வெளியிடப்பட்டது. டிரெய்லர் குறித்து RJ பாலாஜி கூறுகையில், “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் பண்டிகை நாளில் நாம் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து கொண்டாடும் வகையிலான படமாகும். தீபாவளியை விட ஒரு சிறந்த நாள்  இப்படத்தை வெளியிட கிடைக்காது, அதிலும் இணைய உலகை கலக்கும் டிஸ்னி+ ஹாட் ஸ்டார் வி ஐ பி (Disney+ Hotstar VIP ) தளத்தில் வெளியாவது எங்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. பண்டிகை நாளில் பெரும் மகிழ்ச்சியை உங்கள் அனைவர் மனதிலும் இப்படம் உண்டாக்கும் என உறுதி கூறுகிறேன்.
இப்படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. படத்தின் தெலுங்கு பதிப்பான அம்மொரு தல்லி (Ammoru Thalli)  டிரெய்லரை டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு வெளியிட்டார்.
RJ பாலாஜி NJ சரவணன் உடன் இணைந்து இயக்கும் “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் Dr.ஐசரி K கணேஷ் தயாரித்துள்ளார். நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் RJ பாலாஜி முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார்.
இசையமைப்பாளர்  கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான ஊர்வசி, மௌலி,அஜய் கோஷ், ஸ்ம்ருதி வெங்கட், மது, அபிநயா, மனோபாலா, மயில்சாமி ஆகியோரும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள்l
Previous Post

Sharwanand, Rashmika Mandanna, Tirumala Kishore, SLVC’s Aadaalloo Meeku Johaarlu Launched

Next Post

சென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6 வது கிளையை திறந்து வைத்தார் நடிகர் உதயநிதி ஸ்டாலின் !!

Next Post
சென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6 வது கிளையை திறந்து வைத்தார் நடிகர் உதயநிதி ஸ்டாலின் !!

சென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6 வது கிளையை திறந்து வைத்தார் நடிகர் உதயநிதி ஸ்டாலின் !!

Popular News

  • விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.