• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நமீதா தியேட்டர்ஸ் – உண்மை சம்பவங்களின் அடிப்படியில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும் முதல் OTT தளம் !

by Tamil2daynews
May 7, 2021
in சினிமா செய்திகள்
0
நமீதா தியேட்டர்ஸ் – உண்மை சம்பவங்களின் அடிப்படியில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும் முதல் OTT தளம் !
0
SHARES
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கடந்த சில வருடங்களாக கணக்கற்ற வகையில் OTT தளங்கள் துவங்கப்பட்டுவருகின்றன. இவை ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமல்லாது உலகம் முழுதும் பரந்து விரிந்து ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது. எண்ணற்ற OTT தளங்களில் வெகு சில தளங்கள் மட்டுமே புதுமையான  தரமான கதைகளை ஒளிபரப்பும்  தளங்களாக இருந்து வருகின்றன.

 

தரமான OTT தளங்களின் வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது “நமீதா தியேட்டர்ஸ்” தளம். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும் முதல் OTT தளமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தின் முதன்மை தூதுவராக ( Brand Partner ) நடிகை நமீதா அவர்களும் நிர்வாக இயக்குநராக  திரு. ரவி வர்மா அவர்களும் உள்ளனர்.

இது குறித்து நடிகை நமீதா கூறியதாவது…

திரை உலக நண்பர்களும்  மக்களும்  கடந்த வருடங்களில் எனக்கு மிகுந்த பிரபலத்தையும் பெரும் அன்பையும் அளித்து வந்துள்ளார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் அதை திருப்பி அளிக்க நினைத்தேன். பல விதமான ஐடியாக்களை நினைத்து வந்தபோது தான்  திரு. ரவி வர்மா அவர்களை சந்தித்தேன். திரைப்பட தொழில்நுட்ப டிப்ளமோ படிப்பு முடித்து,  பல வித கார்பரேட் வணிகங்களை செய்து வந்துள்ளார். அவர் தான் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் கதைகளுக்கென்று பிரத்யேகமாக ஒரு OTT தளத்தை ஆரம்பிக்கும் ஐடியாவை தந்தார். புதிதாக திரைத்துறைக்கு வரும் இளம் திறமைகளுக்கு   தேவையான உதவியை அளிக்கும் எண்ணம் எப்போதுமே என்னிடம் இருந்து வந்தது. புதிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவருக்கும் இது ஒரு நல் வாய்ப்பாக அமையும். மேலும் சிறு பட தயாரிப்பாளர்களும்  இத்தளம் மூலம் தங்கள் திரைப்படங்களை திரையிடலாம். நாங்கள் இத்தளத்தை துவங்க ஆரம்பித்த கணமே, நாங்கள் நினைத்தே பார்த்திராத அளவு, இத்தளத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது.
முதல் பகுதி கதைகள் திரைப்படங்களை  நமீதா தியேட்டர்ஸ் தளத்தில் வெளியிட  அடுத்த மாதத்தில்  ஒரு நல்ல நாளை எதிர்பார்த்துள்ளோம். இந்த இனிய பயணத்தில் என்னையும் பங்கேற்க வைத்ததற்கு இந்நேரத்தில் திரு. ரவி வர்மா அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

திரு. ரவி வர்மா கூறியதாவது..,

“நமீதா தியேட்டர்ஸ்” எனும் இந்த கனவு பயணத்தை அறிவிப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். முற்றிலும் தனித்த வகையிலான தராமான கதைகள் எந்த மீடியா அல்லது சினிமாவில் வெளியானாலும் நல்ல வரவேற்பை பெறும். அந்த வகையில் நான் ஒரு தனித்த ஐடியாவை உருவாக்கினேன் அதற்கு ஆதரவளித்து முதன்மை தூதுவராக  நமீதா சம்மதித்தது மிகவும் மகிழ்ச்சி. ஆனால் இந்த வாய்ப்பு கடந்த 27 வருடங்களாக Sunshine Casting Agency நடத்தி வரும் எனது நண்பர், நடிகர், நடிகர்கள் தேர்வாளர் திரு. மனோஜ்கிருஷ்ணா  அவர்கள் மூலம் தான் இது அனைத்தும் சாத்தியமானது. அவரும் நானும் 30  வருட கால நண்பர்கள். நடிகை நமீதா அவர்களின்  பங்களிப்பும்,  ஒத்துழைப்பும்,  நமீதா தியேட்டர்ஸ் தளம் குறித்து அவர் தந்த ஐடியாக்கள் மிகவும் மதிப்பு மிகுந்ததாகவும் இருந்தது. அவருக்கு எல்லா வயதிலும் பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. திரு.மனோஜ்குமார் அவர்கள் நமீதா தியேட்டர்ஸ் தளத்தில் Chief Administrative Officer  ஆக நியமிக்கப்பட்டுள்ளார். சினிமா மீதான  தீவிரமான காதல்  ஈடுபாடு எங்களுக்குள் ஒரே அளவில் இருந்தது. இருவருக்கும் 40 வருட கால அனுபவம் சினிமா துறையிலும், வணிக துறையிலும் உள்ளது. எங்கள் இருவரது பங்களிப்பும் நமீதா தியேட்டர்ஸ் தளத்தை மிக சிறப்பாக வழிநடத்தும் என நம்புகிறேன்.   அடுத்த மாதத்தில்  முதல் பகுதி கதைகள், திரைப்படங்களை  நமீதா தியேட்டர்ஸ் தளத்தில்  வெளியிடுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி.

 
Previous Post

பூர்னேஷ் மற்றும் ஷிவானி நாராயணன் இணைந்து கலக்கும் “போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் !

Next Post

மு.க.ஸ்டாலின் தான் முதல்வர் ஆவார் ; அன்றே கணித்த ஜோதிடர் பாலாஜி ஹாசன்

Next Post
மு.க.ஸ்டாலின் தான் முதல்வர் ஆவார் ; அன்றே கணித்த ஜோதிடர் பாலாஜி ஹாசன்

மு.க.ஸ்டாலின் தான் முதல்வர் ஆவார் ; அன்றே கணித்த ஜோதிடர் பாலாஜி ஹாசன்

Popular News

  • கல்லூரி மாணவிகள் பார்த்து பாராட்டிய ‘பரிசு’ திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “காக்கும் வடிவேல்” ஒரு புதிய இசை மைல்கல்லைப் பதிவு செய்கிறது.

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபுடி, பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி சீரிஸ் வழங்கும் பான் இந்தியா படம் – “ஃபௌசி” டைட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியானது !

    0 shares
    Share 0 Tweet 0
  • விவசாயத்தை விட சினிமா எடுப்பது தான் கஷ்டமாக இருக்கிறது ” தடை அதை உடை ” படத்தின் இயக்குனர் அறிவழகன் முருகேசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும், “ஆர்யன்” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“ஆதாயத்துக்காகவும் நடிக்கணும்.. ஆத்ம திருப்திக்காகவும் நடிக்கணும்” ; கசிவு திரைப்படம் குறித்து நெகிழ்ந்த எம்.எஸ்.பாஸ்கர்

October 25, 2025

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர் இணையும் “பெத்தி” (peddi) பட பாடல் படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பம்!

October 25, 2025

“காக்கும் வடிவேல்” ஒரு புதிய இசை மைல்கல்லைப் பதிவு செய்கிறது.

October 25, 2025

டாக்டர் சிவராஜ்குமார் நடிக்கும், அன்புக்குரிய தலைவர் கும்மடி நரசைய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & கான்சப்ட் வீடியோ வெளியானது !!

October 25, 2025

சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நாயகனாக நடிக்கும் கலகலப்பான காதல் கதை ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ பொங்கல் வெளியீடாக ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது

October 25, 2025

கென் கருணாஸ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

October 25, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.