

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் ‘கபடதாரி’யை, கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் சார்பில் லலிதா தனஞ்சயன் தயாரிக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் கதையின் நாயகனாக சிபிராஜ் இதுவரை நடித்திராத முற்றிலும் வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக நந்திதா ஒப்பந்தமாகியிருந்தார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி, சிறிதும் சிதையாமல் நடிக்கும் திறமை வாய்ந்த நந்திதா, ஒரே கட்டமாக முழுவீச்சில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் படக்குழுவினருடன் இணைந்தார்.

இவர்களுடன் விஸ்வரூபம் புகழ் பூஜா குமார், நாசர், ஜெயபிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் மற்றும் இன்னும் சில பிரபலங்களும் நடிக்கிறார்கள்.


இவர்களுடன் விஸ்வரூபம் புகழ் பூஜா குமார், நாசர், ஜெயபிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் மற்றும் இன்னும் சில பிரபலங்களும் நடிக்கிறார்கள்.
தொழில்நுட்பக் கலைஞர்கள் :-
கதையை எம். ஹேமந்த் ராவ் எழுத, திரைக்கதை & வசனத்தை ஜான் மகேந்திரன் & டாக்டர்.ஜி. தனஞ்சயன் கவனிக்கிறார்கள். ஒளிப்பதிவை ராசமதியும், கலை இயக்குநராக விதேஷும் பணியாற்றுகிறர்கள்.

சைமன் கே கிங் இசையமைக்கும் இப்படத்திற்கு, பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்கிறார். வணிகத் தலைமையை எஸ். சரவணன் ஏற்க, நிர்வாக தயாரிப்பை என்.சுப்ரமணியன் ஏற்கிறார். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்க, தயாரிப்பு உருவாக்கம் டாக்டர்.ஜி. தனஞ்சயனும், தயாரிப்பை லலிதா தனஞ்சயனும் செய்கிறார்கள்.