• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வைரலாகும் புதிய கெட்டப்! – வாழ்த்து மழையில் நடிகர் வையாபுரி

by Tamil2daynews
January 4, 2021
in சினிமா செய்திகள்
0
வைரலாகும் புதிய கெட்டப்! – வாழ்த்து மழையில் நடிகர் வையாபுரி
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கும் வையாபுரி, தற்போதைய
இளையதலைமுறை நடிகர்களுடனும் நடித்து வருகிறார். காமெடி நடிகராக மட்டுமே பரிச்சையமான வையாபுரி, ‘பிக் பாஸ்’
நிகழ்ச்சிக்குப் பிறகு காமெடி வேடங்களுடன் குணச்சித்திர வேடங்களுக்கும் கச்சிதமாக பொருந்துவார், என்ற நம்பிக்கையை பல
இயக்குநர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில், புத்தாண்டில் புது முயற்சி மேற்கொள்ளும் விதமாக போட்டோ ஷூட் ஒன்றை நடிகர் வையாபுரி நடத்தியுள்ளார். மிக
வித்தியாசமான கெட்டப்போடு இருக்கும் வையாபுரியின் போட்டோ ஷூட் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி வைராகி
வருவதோடு, இளைஞர்கள் அந்த புகைப்படங்களை வைத்து பல மீம்ஸ்களை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.
“யாரு…ஹாலிவுட் நடிகரா இவரு, இல்லப்பா நம்ம ஊரு வையாபுரிப்பா…”, ”தினேஷ் கார்த்திக் செமயா இருக்காருல, யோவ் அது
வையாபுரி யா” இப்படி பல வகையில் வையாபுரியின் போட்டோ ஷூட் புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை உருவாக்கி
வெளியிட்டு வர, தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காகியுள்ளது வையாபுரியின் புகைப்படங்கள்.
ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என்று சோசியல் மீடியா முழுவதும் வையாபுரியின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வலம் வர,
இது பற்றி அவரிடமே கேட்ட போது, ”புத்தாண்டில் புதுஷாக எதாவது செய்ய வேண்டும் என்று ரொம்ப சாதாரணமாக எடுத்த போட்டோ
ஷூட் தான் இது. இதுவரை நான் போட்டோ ஷூட்டே எடுத்ததில்லை. இது தான் முதல் முறை. இந்த போட்டோக்களை என் திரையுலக
நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால், நானே எதிர்ப்பார்க்காத அளவுக்கு என் புதிய கெட்டப் புகைப்படங்களை மக்கள் வைரலாக்கி
வருகிறார்கள். சில மணி நேரங்களில் பல லட்சம் லைக்குகளை பெற்றிருப்பதாக கூறுகிறார்கள். எனது புதிய முயற்சிக்கு மக்கள்
இவ்வளவு பெரிய ஆதரவு கொடுத்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இயக்குநர்கள் பலர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து வருவதோடு, திரைப்படங்களிலும் உங்களை வேறு மாதிரி காட்டணும்,
என்று கூறுகிறார்கள். இது என் பல நாள் கனவு. காமெடி கதாப்பாத்திரங்களில் மட்டும் அல்லாமல், அனைத்து வேடங்களிலும் நடிக்க
நான் ரெடியாக இருக்கிறேன். எனது இந்த ஆசையை இந்த போட்டோ ஷூட் வெளியுலகிற்கு தெரியப்படுத்தியிருப்பது இரட்டிப்பு
மகிழ்ச்சியாக இருக்கிறது.
இயக்குநர்கள் ஆனந்த் சங்கர், பி.எஸ்.மித்ரன் உள்ளிட்டவர்கள் என்னை பார்க்கும் போதெல்லாம், “சார் உங்களை காமெடி நடிகராக
இல்லாமல், வேறு ஒரு வேடத்தில் காட்டணும் சார்” என்று சொல்வார்கள், இந்த புகைப்படங்கள் அதை நிஜமாக்கியுள்ளது. எனவே, இந்த
புத்தாண்டில் எனது சினிமா வாழ்க்கையில் புது திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
காமெடி வேடத்தில் மட்டும் இன்றி, எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க ரெடி. அப்பா, அண்ணன் உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களிலும் ஒரு கலக்கு கலக்கப் போகிறேன்.” என்று புத்துணர்ச்சியுடன் கூறினார்.
தற்போது எழில் சார் இயக்கத்தில் இரண்டு படங்கள், ட்ரீம் வாரியர் தயாரிப்பில் ஷர்வானந்த் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில்
உருவாகும் படம், ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ‘பேய் மாமா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் வையாபுரி, அறிமுக இயக்குநர் இயக்கத்தில் உருவாகும் படம் ஒன்றில் கதாநாயகியின் தந்தை வேடத்தில் நடித்து வருகிறார்.
புத்தாண்டில் புதிய முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றிருக்கும் நடிகர் வையாபுரியை காமெடி நடிகராக கொண்டாடிய கோலிவுட், நல்ல குணச்சித்திர நடிகராகவும் கொண்டாட வேண்டும், என்று வாழ்த்துவோம்.
Previous Post

*அமேசான் ஒரிஜினல் திரைப்படமான மாறா மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு தான் ஒரு காதல் படத்தில் நடிப்பது குறித்து ஆர்.மாதவன் பகிர்ந்துள்ளார்*

Next Post

மாயத்திரை இசை வெளியீட்டு விழா !

Next Post
மாயத்திரை இசை வெளியீட்டு விழா !

மாயத்திரை இசை வெளியீட்டு விழா !

Popular News

  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

    0 shares
    Share 0 Tweet 0
  • ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “An Ordinary Man” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – இயக்குநராக தன் புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.