• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் படுகொலைக்கு சீமான் கண்டனம்…

by Tamil2daynews
November 13, 2021
in செய்திகள்
0
கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் படுகொலைக்கு சீமான் கண்டனம்…
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச்செயலாளர் படுகொலை – சீமான் கண்டனம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச்செயலாளர் ஐயா நடேச. தமிழார்வன் அவர்கள் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். அரசியல் கட்சியின் முதன்மை நிர்வாகியைப் பட்டப்பகலில் கொடூரமாகக் கொலை செய்திட்ட இக்கொடுஞ்செயலுக்கு வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். எதன்பொருட்டும் ஈடுசெய்ய முடியாப் பேரிழப்பில் சிக்கித் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அத்துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தேனி உத்தமபாளையத்தில் வயதான தம்பதிகள் கழுத்து அறுத்து கொலை, கடலூரில் முந்திரி ஆலை தொழிலாளி கொலை, மதுரையில் உணவக உரிமையாளர் கொலை, மயிலாடுதுறையில் கோயில் காவலாளி கொலை, திண்டுக்கலில் 4 வயது சிறுவன் கொலை, வாணியம்பாடியில் மஜக பொறுப்பாளர் கொலை, சென்னையில் விசிகவை சேர்ந்தவர் கொலை, கன்னியாகுமரியில் ஆதித்தமிழர் ஆணவப் படுகொலை என மாநிலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் நடைபெறும் படுகொலைகள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்குச் சீரழிந்துள்ளது என்பதையே வெளிக்காட்டுகிறது. ஆளுங்கட்சியான திமுகவின் கூட்டணிக்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியைப் பகல் பொழுதில் சாலையில் வைத்து சர்வ சாதாரணமாகப் படுகொலை செய்ய முடிகிறதென்றால், எளிய அடித்தட்டு மக்களின் பாதுகாப்பின் நிலையென்ன என்பது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
ஆகவே, காவல்துறையைத் தனது நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இனியும் இதுபோன்ற படுகொலைகள் தொடராவண்ணம் தடுத்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, கடும் நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமெனவும், இப்படுகொலையில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Previous Post

மாயோன் டிசம்பர் 3 வெளியீடு🔥🔥💐

Next Post

*ஓசன் டிலைட் சர்ப்ஸ்கூலுடன் கைகோர்த்து நகரில் உணவு பிரச்சனையை எளிதாக்கும் கார்மெட் கார்டன்*

Next Post
*ஓசன் டிலைட் சர்ப்ஸ்கூலுடன் கைகோர்த்து நகரில் உணவு பிரச்சனையை எளிதாக்கும் கார்மெட் கார்டன்*

*ஓசன் டிலைட் சர்ப்ஸ்கூலுடன் கைகோர்த்து நகரில் உணவு பிரச்சனையை எளிதாக்கும் கார்மெட் கார்டன்*

Popular News

  • 25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

    0 shares
    Share 0 Tweet 0
  • 100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

    0 shares
    Share 0 Tweet 0
  • இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

September 27, 2026

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

September 27, 2026

மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!

September 27, 2026

காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

September 27, 2026

இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

September 27, 2026

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

September 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.