• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஓ மணப்பெண்ணே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

by Tamil2daynews
October 19, 2021
in சினிமா செய்திகள்
0
ஓ மணப்பெண்ணே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

A Studios சார்பில் தயாரிப்பாளர் கொனேரு சத்யநாராயணா, ரமேஷ் வர்மா பென்மட்ஷா மற்றும் A Havish Pictures தயாரிப்பில்,  ஹரீஷ் கல்யாண் மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள ரொமான்டிக் காமெடி படம் “ஓ மணப்பெண்ணே”. தெலுங்கில் மிகப்பெரும் வெற்றிபெற்ற “பெல்லி சூப்புலு” படத்தின்  அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகியுள்ள இப்படம் மிக விரைவில் Disney Hotstar ல் வெளியாகிறது. படத்தின்  வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர்  இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

                                  
இந்நிகழ்வில்
தயாரிப்பாளர் பாலாஜி கப்பா பேசியதாவது…
இயக்குநர் கார்த்தி தன் உயிரை கொடுத்து இந்த படத்தில் உழைத்திருக்கிறார். ஹரீஷ் மற்றும் பவானி ஆகியோரின் அர்ப்பணிப்பு அபாரமாக இருந்தது. அவர்கள் மாதிரி ஆர்டிஸ்ட் இருந்தால் எந்த ஒரு தயாரிப்பாளரும் கவலைப்பட தேவையில்லை. விஷால் நேரம் எடுத்து கொண்டாலும் அவர் தந்த பாடல்கள் அருமையாக இருந்தது. இது தனி ஒருவரின் உழைப்பு அல்ல.  இப்படம் இந்த மொத்த குழுவினராலும் தான் உருவானது. இந்த டீமோடு மீண்டும் வேலை செய்ய ஆசை. ஹரீஷ் வைத்து மீண்டும் ஒரு புராஜக்ட் விரைவில் அறிவிப்போம் நன்றி.

knack studios சார்பில் உதய்குமார் பேசியதாவது….
இந்தப்படத்தில் ஆடியோ வித்தியாசமாக இருக்கும் மிகச்சிறப்பாக, கடினமாக உழைத்து செய்திருக்கிறோம்.  எல்லோரும் கண்டிப்பாக ரசிப்பார்கள் நன்றி தயாரிப்பாளர் தேவா பேசியதாவது…
ஹரீஷ் எனக்கு நெருங்கிய நண்பர். அவருடன் படம் செய்வது, மிக ஈஸியாக  இருக்கும்  அவருடன் மீண்டும், மீண்டும் படம் செய்ய ஆசை. இன்னும்  நிறைய படங்கள் இணைந்து  செய்வோம் நன்றி.

                                             

ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன்  வசந்த் பேசியதாவது…
நிறைய படங்களில் அறிமுக இயக்குநர்களிடம் வேலை செய்துள்ளேன். எல்லாமே நல்ல புராஜக்ட்கள் தான். இந்தப்படம் பற்றி கேள்விப்பட்டவுடனே இதில் வேலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். இந்தப்படத்தில்  ஹரீஷ் மற்றும் ப்ரியா இருவரும் சூப்பராக நடித்துள்ளார்கள். படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள்,  படம் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பேசியதாவது..
இந்தப்படத்தில் வேலை செய்தது மிக சந்தோஷமாக இருந்தது. இயக்குநர் கார்த்திக் உடன் வேலை பார்த்தது, மிக மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு பாடலும் கேட்டவுடனே அவருக்கு பிடித்து விடும். எல்லாப்பாடலுமே சூப்பர் ஹிட்டாகும் என்று தான் இசையமைக்கிறோம், ஆனால் போதை கனவே பாடல் எனக்கே மிகவும் பிடித்திருந்தது. அனிருத் அதை வித்தியாசமாக பாடியிருந்தார். ரசிகர்களுக்கும் பாடல்கள்  பிடிக்கும் நன்றி.

                                  

இயக்குநர் கார்த்திக் சுந்தர் கூறியதாவது…
பெல்லி சூப்புலு ரொம்ப ஸ்பெஷலான படம் அதை ரீமேக் செய்கிறோம் என்றபோதே பெரிய பொறுப்பு வந்து விட்டது. பெல்லி சூப்புலு படத்திலேயே நிறைய உணர்வுபூர்வமான தருணங்கள் இருக்கிறது அதை கெடுத்து விடாமல், தமிழுக்கு  ரிமேக் ஏற்ற சின்ன சின்ன மாற்றங்கள் மட்டுமே செய்திருக்கிறோம். ப்ரியா,  ஹரீஷ் போன்ற சிறந்த நடிகர்கள் வந்த பிறகு படத்திற்கு பெரும் பலம் வந்து விட்டது, புதிதாக நான் எதுவும் செய்ய  தேவையிருக்கவில்லை. படத்தை அனைவரும் இணைந்து சிறப்பாக செய்துள்ளோம், பாருங்கள் பிடிக்கும் நன்றி.

நடிகை ப்ரியா பவானி சங்கர் பேசியதாவது…
ஒரு படத்தை சந்தோஷமாக திருப்தியாக செய்தாலே,  அது நல்ல படமாக வந்து விடும் அந்த வகையில் இந்தப்படம் அனைவருக்கும் திருப்தி தந்த படம். இன்னும் நான்கு நாட்களில் படம் உங்கள் பார்வைக்கு வந்து விடும். இயக்குநர் கார்த்தியின் முதல் படத்தில் பங்குகொண்டதில் மகிழ்ச்சி. இப்படத்தில் அனைவருமே சிறப்பாக செய்துள்ளார்கள். ஹரீஷ் மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்தார். இந்தப்படத்தில் என் பாத்திரம் நீங்கள் எளிதில்  உணரக்கூடிய கேரக்டர். இந்தக்கேரக்டர்  செய்ததில் நிறைய மகிழ்ச்சி. மற்ற படங்களில் ஹீரோவுக்கு ஜோடியாக தான் பாத்திரம் இருக்கும்,  ஆனால் இப்படத்தை தைரியமாக என் படம் என சொல்வேன். அந்தளவு என் கதாப்பாத்திரம் அழுத்தமாக இருக்கும். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும்.

                                  

நடிகர் ஹரீஷ் கல்யாண் பேசியதாவது…
கசடதபற பார்த்து பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. பெல்லி சூப்புலு படம் பார்த்தபோது இந்த மாதிரி படம் செய்தால் நால்லாருக்குமே என நினைத்தேன் அப்போது என்னை படம் வைத்து படம் செய்ய ஆள் இல்லை,  பிக்பாஸ் போய் விட்டு வந்த பிறகு இந்தப்பட வாய்ப்பு வந்தது. மீண்டும் கை நழுவி,  மீண்டும் வந்தது. இதில் ஏதோ ஸ்பெஷ்ல் இருக்கிறது அதனால் தான் நம்மை தேடி வருகிறது என தோன்றியது.  இயக்குநரும் நானும் நெடுநாள் நண்பர்கள் முன்பே படம் செய்ய வேண்டும் என பேசியுள்ளோம், இப்போது அவருடன் படம் செய்தது மகிழ்ச்சி.  இப்படத்தில் அனைத்து கதாப்பாத்திரங்களுமே நீங்கள் எளிதில் உணர்ந்துகொள்ளக்கூடிய பாத்திரங்களாக இருக்கும்.  டிஸ்னி மாதிரி ஓடிடியில் வருவதால் அனைவரையும் பெரிய அளவில் சென்று சேரும் என நம்புகிறோம். இந்தப்படத்தில் போதை கனவே பாடல் எனக்கும் பிடிக்கும். இசை அருமையாக இருந்தது. 18 படங்கள் நடிக்கும் பிஸியான நேரத்திலும்,  எங்கள் படத்திற்கு வந்து, நடித்து கொடுத்த ப்ரியா பவானி சங்கருக்கு நன்றி. மிக சிறந்த ஒத்துழைப்பு தந்து நடித்து கொடுத்தார். அவருடன் மிகச்சிறந்த நட்பு உள்ளது.  எல்லோருமே கடுமையாக உழைத்து, இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். உங்கள் அனைவருக்கும் படம்  பிடிக்கும் . படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வருகிறது பார்த்து ரசியுங்கள் நன்றி.

                                                                          

                                                   

Previous Post

Angelina Jolie, Salma Hayek, Richard Madden, Kit Harington and ETERNALS cast dazzle at the exciting Premiere! Twitter is flooded with Positive social media reactions

Next Post

தனிகட்சி மூலம் அரசியல் களம் வகித்த குமரி. டிக்சன் தற்பொழுது சினிமா துறையில் கால்பதித்திருக்கிறார்

Next Post
தனிகட்சி மூலம் அரசியல் களம் வகித்த குமரி. டிக்சன் தற்பொழுது சினிமா துறையில் கால்பதித்திருக்கிறார்

தனிகட்சி மூலம் அரசியல் களம் வகித்த குமரி. டிக்சன் தற்பொழுது சினிமா துறையில் கால்பதித்திருக்கிறார்

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • Mrs and Mr – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கைமேரா பட இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • Freedom – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

July 12, 2025

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் D54 பிரம்மாண்ட திரைப்படம் – பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பம்!

July 12, 2025

“டிரெண்டிங்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

July 12, 2025

சவுத் ஸ்டார்ஸ் x மார்வெல்: ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எந்தெந்த நடிகர்கள் நடிக்கலாம்?

July 12, 2025

“பறந்து போ” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்!

July 12, 2025

Freedom – விமர்சனம்

July 12, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.