• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பா. இரஞ்சித்துக்கு வாழ்த்துகள்-பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங்

by Tamil2daynews
December 27, 2020
in சினிமா செய்திகள்
0
ஆரி அர்ஜுனன் நடிக்கும் ‘பகவான்’..!
0
SHARES
44
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
”மார்கழியில் மக்களிசை 2020”  நிகழ்ச்சியின் 2-ஆம் நாளான நேற்று(25/12/2020), சிறப்பு விருந்தினாராக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டு இசை கலைஞர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
கடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதியில், புத்தாண்டை சமத்துவ புத்தாண்டாக கொண்டாட வானம் கலைவிழா எனும் நிகழ்ச்சியை இயக்குனர் பா. இரஞ்சித் ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்ச்சி பல்வேறு தரப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் நீட்சியாக தற்போது 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 2021-ஆம் ஆண்டின் புத்தாண்டை கொண்டாடும் விதமாக நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று முன்தினம் தொடங்கியது தொடங்கியது. தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் 2-ஆம் நாளான நேற்று(25/12/2020) பாடகர்கள் தலித் சுப்பையா, ரோஜா ஆதித்யா, காஞ்சி பா.ராஜேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு சமூக  சமூகப்பிரச்சனை பற்றிய பாடல்களை பாடினர். திண்டுக்கல் பறை இசை குழுவினரின் பறை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டு இசை கலைஞர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் பேசியதாவது, “ நாட்டுப்புற இசைக்கலைஞர்களை ஒருங்கிணைத்து மார்கழியில் மக்களிசை எனும் நிகழ்ச்சியின் மூலம் அந்த கலைஞர்களுக்கு இந்த மேடையை ஏற்படுத்திக் கொடுத்த நீலம் பண்பாட்டு மையம் மற்றும் இயக்குனர் பா.இரஞ்சித்திக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் கல்வி, பொருளாதாரம், அடிப்படை உரிமைகள், புகழ் என அனைத்தும் இந்தியாவிலுள்ள அனைத்து மக்களுக்கு சென்று சேரவேண்டும் என்று கூறினார். அந்த கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக இயக்குனர் பா. இரஞ்சித் தனது கலை மூலமாக செய்துக்கொண்டிருக்கிறார். பாபாசாகேப் அம்பேத்கர் கூறியதில் மிக முக்கியமானது கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய் என்ற கூற்றுகள் தான். ஒரு மனிதனுக்கு அரசியல் நியதி குறித்து கற்பித்தாலே அவன் கிளர்ந்தெழுவான். அந்த கற்பிக்கும் வேலையை தான் நீலம் பண்பாட்டு மையம் தொடர்ந்து செய்து வருகிறது, அவர்களுக்கு எனது வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
Previous Post

சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும்

Next Post

ஆரி அர்ஜுனன் நடிக்கும் ‘பகவான்’..!

Next Post
ஆரி அர்ஜுனன் நடிக்கும் ‘பகவான்’..!

ஆரி அர்ஜுனன் நடிக்கும் 'பகவான்'..!

Popular News

  • டார்க் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்திற்கு U/A 13+ சான்றிதழ்; ஜூலை 10 அன்று உலகமெங்கும் பிரம்மாண்ட ரிலீஸ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE5-ல் ஜூலை 10 முதல் ஐந்து மொழிகளில் வெளியாகும் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ‘பரிமளா & கோ’

    0 shares
    Share 0 Tweet 0
  • விஷ்ணு விஷால் – சூரி நட்பை கொண்டாடும் வைரல் வீடியோ… மதுரையில் ‘அம்மன்’ உணவகத்தில் படக்குழுவுக்கு சூரி சர்ப்ரைஸ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டார்க் – விமர்சனம்

July 6, 2026

‘லவ் ஓ லவ்’ திரைப்படத்திற்கு U/A 13+ சான்றிதழ்; ஜூலை 10 அன்று உலகமெங்கும் பிரம்மாண்ட ரிலீஸ்!

July 6, 2026

ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

July 6, 2026

ZEE5-ல் ஜூலை 10 முதல் ஐந்து மொழிகளில் வெளியாகும் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ‘பரிமளா & கோ’

July 6, 2026

விஷ்ணு விஷால் – சூரி நட்பை கொண்டாடும் வைரல் வீடியோ… மதுரையில் ‘அம்மன்’ உணவகத்தில் படக்குழுவுக்கு சூரி சர்ப்ரைஸ்!

July 6, 2026

இளையராஜாவின் மூத்த அண்ணனும், முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கரின் மகன் ‘ஜெயன்’ அறிமுகம் – நட்பிற்காக இணைந்த முன்னணி திரைபிரபலங்கள்!

July 6, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.