• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

புத்தகத்திருவிழாவில் வரவேற்பைப்பெறும்  இயக்குனர்  பா. இரஞ்சித்தின் நீலம் பதிப்பகம் . 

by Tamil2daynews
January 13, 2020
in சினிமா செய்திகள்
0
புத்தகத்திருவிழாவில் வரவேற்பைப்பெறும்  இயக்குனர்  பா. இரஞ்சித்தின் நீலம் பதிப்பகம் . 
0
SHARES
67
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நீலம் பதிப்பகத்தின் தொடக்க விழா மற்றும் நீலம் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நூல்கள் அறிமுக விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் உள்ள பக்ஸ் தியேட்டரில் நேற்று (12/01/2020) நடைபெற்றது.
தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரையில் இயக்குனர் பா.இரஞ்சித் முற்றிலும் மாறுபட்டவர். கலை மக்களுக்கானது எனும் மாவோ கூற்றுக்கு ஏற்ப, சமூகத்தில் உள்ள அடுக்குகளையும், முரண்களையும் தன் படைப்புகளின் மைய உரையாடலாக எப்போதும் கையாள்பவர்.
நீலம் புரொடக்சன்ஸ், நீலம் பண்பாட்டு மையம், தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ், கூகை திரைப்பட இயக்கம் என சமூக சமத்துவத்தை நோக்கமாக கொண்டு அவர் உருவாக்கிய அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் அவர் தயாரித்த பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படங்கள் வணிக ரீதியிலும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவின் குரல்கள் சமூகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான கலகக்குரல்களாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
தனது கலைப் படைப்புகளின் மூலம் சமூகத்திற்கு பங்காற்றி வரும் பா.ரஞ்சித் தற்போது, அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகி உள்ளார். தனது கனவிலிருந்து உருவான நீலம் பண்பாட்டு மையம், நீலம் புரொடக்சன்ஸ் போன்றவற்றை தொடர்ந்து “நீலம் பதிப்பகம்” ஒன்றை ஆரம்பித்துள்ளார். நீலம் பதிப்பகம் இளம் எழுத்தாளர்களை அடையாளம் காண்பதும், மூத்த எழுத்தாளர்கள் & சிந்தனையாளர்களின் படைப்புகளை மறுபதிப்பு செய்வதையும் இலக்காகக் கொண்டுள்ளது.
சென்னைப் புத்தகக் காட்சியையொட்டி நீலம் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக அண்ணல் அம்பேத்

கர் முன்னுரைகள் (தொகுப்பு வாசுகி பாஸ்கர்), எம்.சி.ராஜா சிந்தனைகள் (தொகுப்பு வே. அலெக்ஸ்), பௌத்த வரலாற்றில் காஞ்சீவரம் (ஏழுமலை. கலைக்கோவன்), எண்பதுகளின் தமிழ் சினிமா (எழுத்தாளார் ஸ்டாலின் ராஜாங்கம்), பீஃப் கவிதைகள் (கவிஞர் பச்சோந்தி) என்ற ஐந்து புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.
நீலம் பதிப்பகத்தின் தொடக்க விழா மற்றும் நீலம் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நூல்கள் அறிமுக விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் உள்ள பக்ஸ் தியேட்டரில் நேற்று (12/01/2020) நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பேராசிரியர் பா. கல்யாணி, எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, ம. மதிவண்ணன், அழகிய பெரியவன், வெண்மதி வே. அலெக்ஸ், சுகிர்தராணி, பிரேமா ரேவதி, க. ஜெயபாலன் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசியதாவது, “எழுத்தாளர்களை உருவாக்குவதற்கும், அவர்கள் யோசிக்கும் கருத்துக்களை எந்த வித தடையும் இன்றி பதிவு செய்வதற்காகவும், மனித சமுதாயத்திற்கான தேவையான புத்தகங்களை வெளியிடும் நோக்கத்திலும் நீலம் பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
சென்னைப் புத்தகக் காட்சியையொட்டி வெளியிடப்பட்ட நீலம் பதிப்பகத்தின் புத்தகங்கள், வெளியான முதல் நாளிலேயே மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post

கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தாக அவதாரமெடுக்கும் நடிகர் ஜீவா ! 

Next Post

தர்பார்’ படத்துடன் போட்டி போட விரும்பாத ‘வாழ்க விவசாயி’

Next Post
தர்பார்’ படத்துடன் போட்டி போட விரும்பாத ‘வாழ்க விவசாயி’

தர்பார்' படத்துடன் போட்டி போட விரும்பாத 'வாழ்க விவசாயி'

Popular News

  • “இதயம் முரளி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!*

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் திரு வீர் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் ‘ஓ ! சுகுமாரி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படத்தை டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் கொண்டாடத் தயாராகுங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ரசிகர்களை மகிழ்விக்க வரும் “லைகர்” நடிகர் விஷ் ..!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு திரையரங்கில் ஒரு நாளில் நடக்கும் கதையாக உருவாகி வரும் படம் ‘MMOF’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

July 20, 2026

ஜீவா லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் – ‘தகப்பன்’ பூஜையுடன் இனிதே தொடக்கம்!

July 20, 2026

பிறந்தநாளில் 5 ஆண்டுகால கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நடிகை சாக்ஷி அகர்வால்!

July 20, 2026

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’

July 20, 2026

உலகளாவிய டிரெய்லர் வெளியீட்டிற்கு முன்னதாக, புது டெல்லியில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் முதல் அறிமுகம்

July 20, 2026

“இதயம் முரளி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!*

July 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.