ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

வேளாண் பட்ஜெட்; கோரிக்கைகளை முன்வைத்த காங்கிரஸ் தலைவர் பவன்குமார்!!

by tamil2daynews
August 10, 2021
in செய்திகள், தமிழ் நாடு
0
வேளாண் பட்ஜெட்; கோரிக்கைகளை முன்வைத்த காங்கிரஸ் தலைவர் பவன்குமார்!!
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழக சட்டசபையில் விரைவில் வேளாண் தொடர்பாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அது தொடர்பாக அனைத்து கட்சி வேளாண் பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில விவசாய அணி தலைவர் திரு. பவன் குமார் பன்சால் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன் வைத்தார்.

அவர் வெளியிட்ட கோரிக்கைகள்:

தமிழகத்தில் சிறப்பான நிர்வாகத்தை தொடங்கி இருக்கும் தமிழக அரசுக்கு தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு தனது வாழ்த்துகளையும், பாராட்டுதலையும் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் நலன் கருதியும், விவசாயத்தை மேம்படுத்தவும் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு சில கோரிக்கைகளை முன் வைக்கிறது.
கோரிக்கைகள்

# காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை வீணாகாமல் பாதுகாத்து வைக்க மண்டல வாரியாக அனைத்து வட்டங்களிலும் குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்கப்பட வேண்டும்.
# விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை சேமித்து வைக்க உலர்த்தும் வசதியுடன் கூடிய பிரம்மாண்டக் கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும்.

# கொள்முதல் நிலையங்களில் குறைந்தபட்சம் 5,000 நெல் மூட்டைகளை சேமிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். இனி மழையால் நெல் மூட்டைகள் சேதம் என்ற நிலை ஏற்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
# உற்பத்தி செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் வாங்கப்படாமல் காத்திருக்கும் நிலையால், குறைந்த விலைக்கு இடைத்தரகர்களிடம் நெல் மூட்டைகளை விற்பனை செய்யும் அவலம் ஏற்படுகிறது. அந்த நிலையை மாற்றி ஈரப்பதத்தை காரணம் காட்டி தாமத்ப்படுத்தும் நிலையைமாற்ற வேண்டும்.
# அனைத்து மாவட்டங்களிலும் உணவுப் பதனத் தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.
# விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை மதிப்புக் கூட்டுவதற்கு வசதியாக ஒவ்வொரு பகுதியிலும் விளையும் பொருட்களுக்கு ஏற்ப மதிப்புக் கூட்டுவதற்கான தொழில்நுட்பம் மற்றும் கட்டமைப்பு ஏற்படுத்தித் தரப்பட வேண்டும்.
# விவசாய வேளாண் கல்வியை அதிகரிக்க புதிய பல்கலைக்கழகங்கள் அமைக்க வேண்டும். கோவையில் ஏற்கெனவே கோவையில் வேளாண் பல்கலைக்கழகம் இருப்பதை போல விவசாய மண்டலமான தஞ்சாவூரிலும், திருநெல்வேலியிலும், விழுப்புரத்திலும் புதிய விவசாய வேளாண் பல்கலைக்கழகங்கள் அமைத்து விவசாயத்தை இளைய சமுதாயத்தினரும் மேற்கொள்ள வழி செய்ய வேண்டும்.
# விவசாயிகளுக்கு நல்ல தரமான விதைகள் கிடைப்பதற்கு வசதியாக மாவட்டம் தோறும் விதைப்பண்ணைகள் அமைக்கபபட வேண்டும்.

 

# கால் நடைகளுக்கான தீவன வினியோகமும், தீவனங்களுக்கான விலையும் சாமானியர் வாங்கும் நிலையில் இல்லை. கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ளது. எனவே இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தி மண்டல வாரியாக நல்ல தரமான கால் நடைத்தீவனங்கள் மானிய விலையில் கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
# தமிழகம் முழுதும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
# .பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியை மேலும் அதிகரித்து இயற்கை சீற்றங்களால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.
# தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் அதிகபட்சமாக ரூ.30,000 மூலதன மானியம் வழங்கப்படுகிறது. அதோடு, மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் ரூ.6 ஆயிரத்தையும் சேர்த்து அதிகபட்சமாக ரூ.36,000 வழங்கப்படுகிறது. இந்த தொகையைஇன்னும் உயர்த்தி வழங்க வேண்டும்.
#இயற்கை சீற்றங்களால் பயிர்களை இழந்த விவசாயிகளின் விவசாய கடன் தொகைகளை எந்த நிபந்த்னையும் இல்லாமல் தள்ளுபடி செய்ய வேண்டும்.
# விவசாய நிலங்களின் குறுக்கே உயர் மின் அழுத்த கம்பிகள் செல்லும் பட்சத்தில், அந்த விவசாயிக்கு பாதிப்பு தொகையாக ஒரு மானியத்தை மாதந்தோறும் வழங்க வேண்டும்.
# நீலகிரி தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வன விலங்குகளால் பாதிப்பு ஏற்படா வகையில் காப்பீடு அறிவிக்கப்பட வேண்டும். அதே நேரம் பறிக்கப்படும் தேயிலைக்கும் உரிய நியாயமான விலையும் வழங்கப்பட வேண்டும்.

# கிராமப்புரத்தை ஒட்டி இருக்கும் நெடுஞ்சாலைகளில் தினசரி சந்தை அமைக்க ஆவன செய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலையும் கிடைக்கும், விளைபொருட்கள் வீணாவதும் தவிர்க்கப்படும்.
# விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த 3 தீர்மானங்களையும் ஏற்கமாட்டோம் என கூட்டத்தொடரில் அரசு அறிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
# மழைகாலத்தை சமாளிக்கவும், கோடை காலத்தில் குடி நீர் தட்டுப்பாட்டை போக்கவும் நீர் நிலைகளை தூர் வாரி ஆக்ரமிப்புகளை அகற்றி நீரை சேமிக்க ஆவன செய்ய வேண்டும்.
# மண்டலங்கள் தாண்டி மாவட்ட, வட்ட தாலுகா வாரியாக விவசாய சந்தைகளை ஏற்படுத்தி விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

என்று கூறியுள்ளார்.

Previous Post

சென்னையில், இந்தியா – நமீபியா வர்த்தக உச்சி மாநாட்டை, நமீபிய வர்த்தக ஆணையர் டாக்டர் பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

Next Post

வேளாண் பட்ஜெட்டை ஆதரித்து ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர்!!

Next Post
வேளாண் பட்ஜெட்டை ஆதரித்து ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர்!!

வேளாண் பட்ஜெட்டை ஆதரித்து ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர்!!

Popular News

  • சமுத்திரக்கனி நடிக்கும்   “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

    சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ‘அவ்வையாரும், அதியமானும் சேர்ந்து சரக்கு அடித்தார்கள்’ என்கிறார் நாஞ்சில் சம்பத்!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு

    0 shares
    Share 0 Tweet 0
  • நாகேஷ் எனும் மகா கலைஞன்..!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சர்வதேச அளவில் பார்வையாளர்களை கவரும் வகையில் உருவாகிவரும் கார்த்தியின் 25வது படம் ‘ஜப்பான்’

September 21, 2023

பான்-இந்தியா கதையம்சம் கொண்ட திரைப்படத்திற்காக செல்வராகவனுடன் இணையும் தெலுங்கு, மலையாள முன்னணி நட்சத்திரங்கள்

September 21, 2023

அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்கும் #NC23 படத்தில் இணைந்தார் நடிகை சாய் பல்லவி

September 21, 2023

உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ஷாருக்கானின் ‘ஜவான்’

September 21, 2023

மானிட்டரில் பார்க்கும்போதே அழுதுவிட்டார் இயக்குநர்

September 21, 2023
சமுத்திரக்கனி நடிக்கும்   “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

September 22, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!