• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேண்டுகோள்…!

by Tamil2daynews
November 22, 2021
in சினிமா செய்திகள்
0
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேண்டுகோள்…!
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.
திரைத்துறை வெகுநாட்களாக நலிந்துவிட்டது. படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் முறை பிறந்ததிலிருந்து திரையரங்கங்கள் வெறிச்சோடத் துவங்கிவிட்டன.
அதிலிருந்து மீண்டுவர பெரிய படங்களே உதவுகின்றன. அண்ணாத்தே மக்களை திரையரங்கிற்கு வரவைத்தது. அம்பது விழுக்காடு இருக்கை ஆக்ரமிப்பு என்ற நிலையை மாற்றி நூறு சதவீத இருக்கை ஆக்ரமிப்பை தந்தது திரைத் துறையினருக்கு நெஞ்சில் பால் வார்த்தது. அனைவரும் தங்களின் அனுமதியை தொழில் செய்யும் வெகுமதியாகப் பார்த்தோம் நன்றியோடு!
ஆனால், இப்போது வேக்சினேசன் செலுத்தினால் மட்டுமே திரையரங்க அனுமதி என்பது அத்தனை திரைத்துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுக்க தடுப்பூசி இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை.
பதினெட்டு வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பூசியே கண்டுபிடிக்கவில்லை.
அவர்கள் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் சென்று வர அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
உங்கள் ஆட்சியில் வேக்சினேசன் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. நோய்த் தொற்றும் கட்டுக்குள் வந்துள்ளது.
முகக் கவசம், சானிடைசர் போன்றவற்றால் தங்களை பாதுகாத்தே வருகின்றனர் மக்கள்.
 தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்கங்களில் அனுமதிக்க வேண்டும் என்ற உத்திரவு திரைத்துறையை வெகுவாகப் பாதிக்கும்.
ஆன்டிராய்டு போன் இல்லாதவர்கள் கூட படத்திற்கு  வருவார்கள். அவர்களை சர்டிபிகேட் எடுத்துவரச் சொன்னால் திரையரங்கம் வருவதை அவர்கள் தவிர்ப்பார்கள்.
அதுவும் திரையரங்கம் வந்து திருப்பி அனுப்பினால் அவர்கள் மீண்டும் திரையரங்குகளின் பக்கமே வரமாட்டார்கள்.
தயைகூர்ந்து 18 வயதிற்கு கீழே உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவது போல விரைவில் தடுப்பூசி போட இருப்பவர்களையும் அனுமதித்து திரைத்துறையை வாழ வைக்க வேண்டுகிறோம்.
விரைந்து முடிவெடுத்து நம் திரையுலகையும்… திரையரங்க அதிபர்களையும் காக்க வேண்டுகிறேன்.
நன்றி.
இவண்
சுரேஷ் காமாட்சி
தயாரிப்பாளர்/இயக்குநர்
Previous Post

தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே திரையரங்கிற்குள் அனுமதி. நடிகர் உதயா முதல்வருக்கு கோரிக்கை…!

Next Post

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில் ‘சித்திரைச் செவ்வானம் ’ – பிரத்யேகமாக ஜீ5 OTT தளத்தில் டிசம்பர் 3 முதல்.

Next Post
ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில் ‘சித்திரைச் செவ்வானம் ’ – பிரத்யேகமாக ஜீ5 OTT தளத்தில் டிசம்பர் 3 முதல்.

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில் ‘சித்திரைச் செவ்வானம் ’ - பிரத்யேகமாக ஜீ5 OTT தளத்தில் டிசம்பர் 3 முதல்.

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • Mrs and Mr – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கைமேரா பட இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • Freedom – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

July 12, 2025

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் D54 பிரம்மாண்ட திரைப்படம் – பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பம்!

July 12, 2025

“டிரெண்டிங்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

July 12, 2025

சவுத் ஸ்டார்ஸ் x மார்வெல்: ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எந்தெந்த நடிகர்கள் நடிக்கலாம்?

July 12, 2025

“பறந்து போ” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்!

July 12, 2025

Freedom – விமர்சனம்

July 12, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.