• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

 திமுகவின் அடிமடியிலேயே கை வைக்கும் ரஜினி.

by Tamil2daynews
February 29, 2020
in சினிமா செய்திகள்
0
 திமுகவின் அடிமடியிலேயே கை வைக்கும் ரஜினி.
0
SHARES
43
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
 திமுகவின் அடிமடியிலேயே கை வைக்கும் ரஜினி.. ஆனால் நினைப்பது நடக்குமா.. அதிகரிக்கும் சஸ்பென்ஸ்!
சென்னை: இஸ்லாமிய மதகுருமார்களை ரஜினிகாந்த் சந்திக்க போகிறார் என்றதுமே அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாகி உள்ளன. இது என்ன சமாச்சாரம்? எதற்சான சந்திப்பு? சமாதானமா? சர்ச்சையா? என்ற பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
சிஏஏ சட்டத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பல அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர்களும் போராட்டம் செய்து வருகின்றனர்
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிஏஏ சட்டத்தால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்தவித பிரச்சனையும் வராது, அப்படி ஒருவேளை பிரச்சனை வந்தால் நான் முதல் ஆளாக குரல் தருவேன் என்றார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் இப்படி சொன்னதுமே பல்வேறு தரப்பில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. சிஏஏ சம்பந்தமான கருத்து முழுக்க முழுக்க பாஜகவின் கருத்தாகவும் பார்க்கப்பட்டது.. இந்த அதிர்வலை இஸ்லாமிய அமைப்பினரிடையே அதிகமாகவே ஏற்பட்டதை காண முடிந்தது. இந்த சட்டத்தை பற்றி எதுவுமே தெரியாமல் ரஜினிகாந்த் பேசுவதாகத்தான் அவர்கள் முதலில் இதனை பார்த்தார்கள்.
இந்நிலையில் நேற்று, இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதிகளுடன் ரஜினிகாந்த் போனில் பேசியதாகவும் அதன் பின்னர் நேரில் சந்தித்து சிஏஏ சட்டம் குறித்து ஆலோசிக்க தயார் என்று கூறியதாகவும் செய்தி வெளியானது. . ஆனால்.. உண்மையிலேயே எதற்கான சந்திப்பு இது என்பதை முழுவதுமாக உறுதியாக சொல்ல முடியவில்லை.
மொத்தம் 3 காரணங்கள் பரபரக்கின்றன.. முதலாவதாக, சிஏஏ சட்டத்தால் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து இஸ்லாமியர்கள் ரஜினியிடம் விளக்குவார்கள் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அவர்கள் விளக்கம் அளிக்க முயலும்போது, ரஜினியும் தனது தரப்பு விளக்கத்தை அவர்களுக்கு அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.
மற்றொன்று ரஜினிகாந்த் படம் ஓடுவதற்கான வர்த்தக ரீதியான சந்திப்பாக பார்க்கப்படுகிறது… சரியாக சொல்ல வேண்டுமானால் 10 வருடமாகவே ரஜினிகாந்த் படம் எதுவும் பிளாக் பஸ்டர் ரேஞ்சுக்கு ஓடவில்லை.. அதனால் இவர்களின் ஆதரவு ரஜினிக்கு தேவை என்றே கருதுவதாக கூறப்படுகிறது… சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இனி வரும் அடுத்தடுத்த படங்களை வெற்றிப்படமாக இஸ்லாமிய குடிமக்களின் ஆதரவினை பெறுவதற்காகவே இந்த சந்திப்பு என்றும் சொல்லப்படுகிறது.. இனி எந்த படம் வெளிவந்தாலும் ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் புறக்கணித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. இது வர்த்தக ரீதியாக ரஜினியை பாதிக்கவே செய்யும் என்பதால் கிட்டத்தட்ட கூல் நடவடிக்கை என்றே கருதப்படுகிறது.
3வதாக ஒரு காரணம் சொல்லப்படுகிறது.. அதுதான் திமுக… தமிழகத்தில் திமுகவின் அசைக்க முடியாத ஓட்டு வங்கியாக இருப்பது இஸ்லாமியர்களின் வாக்குகள்தான்… இதற்கு அஸ்திவாரமே கருணாநிதிதான்.. பெரும்பாலான இஸ்லாமிய பிரதிநிதிகளை, முக்கிய தலைவர்களை தன் பக்கத்திலேயே வைத்திருந்தார்.. அவர்களுக்கான முக்கியத்துவத்தை சரியான நேரத்தில் வழங்கி கவுரவப்படுத்தியே வந்துள்ளார். அன்று போட்ட அச்சாணிதான் இன்றும் உழல்கிறது.. அவ்வளவு ஏன், போன எம்பி தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகள் மொத்தமாக திமுக கூட்டணிக்கு வந்ததால்தான் 38 தொகுதிகளில் வெற்றியை பெற முடிந்தது.
இப்போது ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதாக சொல்லி கொண்டுள்ளார்.. இதற்கான வேலைகளும் மும்முரமாகி வருகின்றன.. மறைமுக பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடந்து வருகிறது.. இந்த சமயத்தில்தான் சாதி ரீதியான ஓட்டுக்களை ரஜினிகாந்த் குறி வைத்து வருகிறார் என்றும் செய்திகள் வெளியாயின… சாதி ஓட்டுக்களை தன் பக்கம் எடுக்கவே மண்டல வாரியாக வேலை நடந்து வருவதாக சொல்லப்பட்ட நிலையில், இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை என்ற தகவல் வெளியானது. இது சிஏஏ சட்டம் சம்பந்தமானது என்று மேலோட்டமாக பார்த்தாலும் ஓட்டு வங்கிக்கான தேடலாகவே தெரிகிறது.. திமுகவின் இஸ்லாமிய ஓட்டு வங்கிக்கு வேட்டு வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒருவேளை இஸ்லாமிய பிரதிநிதிகளை திருப்தி செய்து விட்டால் ஒட்டுமொத்தமாக இஸ்லாமியர்களை தன் பக்கம் இழுக்கலாம் என்பது ரஜினி தரப்பின் பலே பிளானாக இருக்கலாம் என்கிறார்கள். ஆக மொத்தம் ரஜினி, திமுகவின் அடிவயிற்றிலேயே கையை வைப்பதுபோலதான் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்!
Tags: DMKRajinikanthStalin
Previous Post

மாபெரும் வெற்றி பெற்ற நானி படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளிவரவுள்ள படம் தான் “சிவகாமி”.

Next Post

மரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் ‘உன் காதல் இருந்தால்’ என்ற படத்தை தயாரிக்கிறார்கள்.

Next Post
மரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் ‘உன் காதல் இருந்தால்’ என்ற படத்தை தயாரிக்கிறார்கள்.

மரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள்.

Popular News

  • தளபதி விஜய் உடன் பிறந்த தங்கையை  இதுவரை யாரும் பார்த்திராத அவரின் அறிய புகைப்படம்..!

    தளபதி விஜய் உடன் பிறந்த தங்கையை  இதுவரை யாரும் பார்த்திராத அவரின் அறிய புகைப்படம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • “துடிக்கும் கரங்களுக்கு முன்.. துடிக்கும் கரங்களுக்கு பின்..” ; உண்மையை உடைத்து பேசிய விமல்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • Pushkar Films Pushkara Mallikarjunaiah Presents Avane Srimannarayana Press Meet

    0 shares
    Share 0 Tweet 0
  • உலக மகளிர் தின கொண்டாட்டம்…!!!

    32 shares
    Share 32 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.