

ரஜினிகாந்த் தனியாக தான் கட்சி ஆரம்பிப்பார், நவம்பர் மாதத்திற்குள் கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
காமராஜரின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைக்கு கராத்தே தியாகராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காமராஜர் பிறந்தநாளொல் காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை செலுத்துவது வழக்கம் ஆனால் கே.எஸ். அழகிரி இன்று காணவில்லை, ஓடி ஒளிந்துவிட்டார், விரைவில் அவரை மாற்றப்போவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிப்பதாக கூறினார்.
மேலும், ரஜினி ஆகஸ்ட் மாதம் கட்சி ஆரம்பிப்பதாக தகவல் வந்ததாக கூறிய அவர்,கொரோனா காரணமாக அது தள்ளிப்போவதாகவும், நவம்பர் மாதத்தில் அவர் கட்சி ஆரம்பிப்பார் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நாவலரை அசிங்கப்படுத்தியவர் ஸ்டாலின் ஆனால் அவர் அறிவாலயத்தில் படம் திறப்பது எந்த விதத்தில் நியாயம் ? என கேள்வி எழுப்பிய அவர், முதல்வரின் வெளிநாட்டுப்பயணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்டும் அவர், ஸ்டாலின் பேங்காங்க் போனது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அனைத்து கட்சிகளும் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து மீளமுடியும் என்றும், ஸ்டாலின் முதலில் சரியாக இருந்துவிட்டு தமிழக அரசை சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் திட்டவட்டமாக கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் குளறுபடிகளுக்கு நிர்வாகிகள் தான் காரணம் என்றும் ,
கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவராக வருவார் என்ற தகவல் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பேட்டி : கராத்தே தியாகராஜன்
( முன்னாள் துணை மேயர்)








