• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ரம்யா நம்பீசனின் ‘சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள்’!

by Tamil2daynews
July 18, 2020
in சினிமா செய்திகள்
0
ரம்யா நம்பீசனின் ‘சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள்’!
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
வெற்றிகரமான நடிகையாக வலம் வரும் ரம்யா நம்பீசன் சைபர் வெளியில்  துவக்கியிருக்கும் ‘ரம்யா நம்பீசன் என்கோர்’ என்ற இணையதள நிகழ்ச்சி பரவலான கவனத்தை ஈர்த்து பலரது பாராட்டுக்களை தொடர்ந்து பெற்று வருகிறது. தன் திறமைகளை கலை வடிவத்தின் பல்வேறு தளங்களிலும் வெளிப்படுத்திவரும் ரம்யா, இன்னும் பல புதிய முயற்சிகளிலும் முனைப்புடன் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார். தற்போது இயக்குநர் பத்ரி வெங்கடேஷுடன் இணைந்து ரம்யா நம்பீசனின் சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள் (Sunset Diary of Ramya Nambessan) என்ற சிறிய தொடர் நிகழ்ச்சி ஒன்றை வழங்குகிறார். எல்லோரும் விரும்பிப் பார்க்கும் வகையில், மாறுபட்ட உள்ளடக்கம் கொண்ட இவ்வகை நிகழ்ச்சி எதுவும் இணையத்தில் இதுவரை வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமூக ஊடகங்களின் இரைச்சல்களில் நம்மைத் தொலைத்திருப்பதை மறுபரிசீலனை செய்வதுடன், மகத்தான தருணங்களை நமக்கு வழங்கும் மனிதர்கள்பால்  நமது கவனத்தை திருப்புவது பற்றிய நிகழ்ச்சி இது.
இந்த சிறிய தொடர் நிகழ்ச்சியை எழுதியிருக்கும் பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது…
“நம் மனதை  செப்பனிடும் விஷயங்களை நாம் கற்றுக் கொள்கிறோம், அல்லது கற்றுக் கொள்ளத் தவறி விடுகிறோம். ஒவ்வொரு நிகழ்வின் மூலமும் வாழ்க்கை நமக்கு ஆழமான பாடத்தைக் கற்றுத் தருகிறது. சுற்றுச் சூழலை நான் புரிந்து கொண்ட விதத்தை,
 இந்த சிறிய தொடர் பதிவு செய்கிறது. என்னால் எழுதப்பட்டு ரம்யா நம்பீசனால் வழங்கப்படும் இந்த எளிய நிகழ்ச்சியில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள்”
மேலும் நிகழ்ச்சி குறித்து விவரித்து வழங்கும் ரம்யா நம்பீசன்
தெரிவித்ததாவது…
“நம்மைச் சுற்றியுள்ள அற்புதமான மனிதர்களால் உருவாக்கப்பட்ட அழகான தருணங்களை, நாம் பல்வேறு அன்றாடப் பணிகளுக்கிடையே கவனிக்காமல் இருந்து வருகிறோம். இணைய உலகின் பக்கம் திரும்பி நமது பெரும்பாலான நேரத்தை அதில் செலவிடுகிறோம். இதை நாம் வருங்காலத்தில்தான் உணர்வோம். இணையங்களின் நம்பகத் தன்மையையும் முன்பு இருந்ததைப்போல் இல்லை. இந்த அடிப்படையில் உருவாக்கப்படுவதுதான் இந்த சிறிய தொடர். இந்தத் தொடரைப் பார்ப்பவர்கள் இதில் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு, தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன். என்னுடைய யூ ட்யூப் சேனலில் அழகியலுடன் கூடிய இதுபோன்ற சுவையான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தருவேன்” என்றார் ரம்யா நம்பீசன்.
ரியோ ராஜ் பிரதான வேடத்தில் நடிக்கும் ‘பிளான் பண்ணிப் பண்ணனும்’ படத்தில் தற்போது ரம்யா நம்பீசனும் இயக்குநர் பத்ரி வெங்கடேஷும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.  இப்படம் இந்த ஆண்டு திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத் தக்கது.
Previous Post

‘ஜோஷ்வா – இமைபோல் காக்க’ படத்தின் இரண்டாவது பாடல்

Next Post

ஜூலை 24ல் விஜய் ஆன்டனியின் அடுத்த பட அறிவி்ப்பு!

Next Post
ஜூலை 24ல் விஜய் ஆன்டனியின் அடுத்த பட அறிவி்ப்பு!

ஜூலை 24ல் விஜய் ஆன்டனியின் அடுத்த பட அறிவி்ப்பு!

Popular News

  • ஆட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சாருகேசி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0
  • RS இன்ஃபோடெயின்மெண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் திரைப்படமான ‘மண்டாடி’ 2026 செப்டம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோஹாட்ஸ்டார் வழங்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லிங்கம்’ தொடரின் பரபரப்பான டிரெய்லர் வெளியீடு – ஜூன் 26 முதல் ஸ்ட்ரீமிங்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

June 14, 2026

RS இன்ஃபோடெயின்மெண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் திரைப்படமான ‘மண்டாடி’ 2026 செப்டம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

June 14, 2026

ஜியோஹாட்ஸ்டார் வழங்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லிங்கம்’ தொடரின் பரபரப்பான டிரெய்லர் வெளியீடு – ஜூன் 26 முதல் ஸ்ட்ரீமிங்!

June 14, 2026

விஷால் அறிமுக இயக்குனராகவும்,நடிப்பில் சிகரமாகவும்.. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பெரும் மகுடங்களை சூடும் மகுடம் டீசர்

June 14, 2026

மதுரையிலிருந்து வெள்ளித்திரை வரை — “ஹபீபி” மூலம் கிடைத்த நாயகன் ஈசா!

June 14, 2026

ஆட்டி – விமர்சனம்

June 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.