• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Rowdy Pictures சார்பில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வழங்கும், அறிமுக இயக்குநர் அருண் இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் “ஊர்குருவி” திரைப்படம் ! 

by Tamil2daynews
October 15, 2021
in சினிமா செய்திகள்
0
Rowdy Pictures சார்பில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வழங்கும், அறிமுக இயக்குநர் அருண் இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் “ஊர்குருவி” திரைப்படம் ! 
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Rowdy pictures சார்பில் நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன்  தமிழ் சினிமாவுலகில்  அடுத்தடுத்து பல ஆச்சர்யமான படைப்புகளை  அறிவித்து வருகின்றனர். உலகமெங்கும் விருதுகளை அள்ளி குவித்து வரும் “கூழாங்கல்” மற்றும் இரத்தமும் சதையுமாக, அதிர்ச்சி மிகுந்த படைப்பாக உருவாகியுள்ள “ராக்கி” ஆகிய படங்கள் Rowdy pictures சார்பில் வெளியீட்டுக்கு தயராகி வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் தனது புதிய படைப்பாக “ஊர்குருவி” படத்தினை அறிவித்துள்ளது. ஒரு புறம் மெலோ டிராமாவாக உருவாகியுள்ள ‘கூழாங்கல்’ இன்னொரு புறம் க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் ‘ராக்கி’ என இரு வித்தியாசமான படைப்புகளை வெளியிடும் இந்நிறுவனம் முழுக்க முழுக்க காமெடி டிராமாவாக “ஊர்குருவி” படத்தினை உருவாக்கவுள்ளது. சமீபத்திய வெளியீடான “லிப்ட்” படம் மூலம் மிகச்சிறந்த நடிகர் என பாரட்டுக்களை குவித்து, வெற்றி பெற்றிருக்கும், நடிகர் கவின் இப்படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவனின் உதவியாளராக ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திலும், இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் ‘டிமாண்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள்’ படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய அருண் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியதாவது…
அருண் என்னிடம் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அவரது ஐடியாக்களும் அவரின் தெளிவான சிந்தனையும் என்னை எப்போதும் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கும். Rowdy pictures சார்பில், “ஊர்குருவி” படம் மூலம் அவரை இயக்குநராக அறிமுகம் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தில் நடிக்க தமிழின் முக்கியமான பெரிய நட்சத்திரங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும். இப்படம் முழுமையாக தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. நேர்த்தியான, தரமான கதைகளின் மீது Rowdy pictures எப்போதும் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கிறது. ஊர்குருவி ரசிகர்களுக்கு இன்பயமான ஒரு அனுபவத்தை தரும் என்றார்.
Previous Post

Nivin Pauly starrer Kanakam Kaamini Kalaham to be the first Malayalam movie to World Premiere on Disney + Hotstar

Next Post

பன்மொழிகளில் உருவாகும், பிரமாண்ட இந்திய திரைப்படத்தில் நடிக்கிறார் நடிகர் ராணா டகுபதி !

Next Post
பன்மொழிகளில் உருவாகும், பிரமாண்ட இந்திய திரைப்படத்தில் நடிக்கிறார் நடிகர் ராணா டகுபதி  !

பன்மொழிகளில் உருவாகும், பிரமாண்ட இந்திய திரைப்படத்தில் நடிக்கிறார் நடிகர் ராணா டகுபதி !

Popular News

  • ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

August 4, 2026

சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!

August 4, 2026

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ‘தி ஒன் ரூல்’ பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா

August 4, 2026

விஜய் ஆண்டனியின் உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.