• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஏழை ரசிகர்கள் தர்ற பணம் தான் உங்களை கோடிஸ்வரர்கள் ஆக்குகிறது ” சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை ” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கதாநாயகர்களை சரமாரியாக கேள்விகேட்ட தயாரிப்பாளர் K.ராஜன்

by Tamil2daynews
December 17, 2021
in சினிமா செய்திகள்
0
ஏழை ரசிகர்கள் தர்ற பணம் தான் உங்களை கோடிஸ்வரர்கள் ஆக்குகிறது ” சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை ” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கதாநாயகர்களை சரமாரியாக கேள்விகேட்ட தயாரிப்பாளர் K.ராஜன்
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஏழை ரசிகர்கள் தர்ற பணம் தான் உங்களை கோடிஸ்வரர்கள் ஆக்குகிறது ” சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை ” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கதாநாயகர்களை சரமாரியாக கேள்விகேட்ட தயாரிப்பாளர் K.ராஜன்
நபீஹா  மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படத்திற்கு கவித்துவமாக ” சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை ”  என்று பெயர் வைத்துள்ளனர்
நடிகர் ருத்ரா நடிப்பில் மகேஷ் பத்மநாபன் இயக்கியுள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. படக்குழு உள்பட விழாவில் பல்வேறு திரை பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் கலந்துகொண்டு தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் பேசியதாவது,
“இப்படியொரு அருமையான விழாவில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஆர்.வி உதயகுமார், பேரரசு போன்றோர் கலந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் அவர்கள் துறையில் வெற்றிபெற்றவர்கள்.இந்தப்படம் நிச்சயமாக பெரிய வெற்றியைப் பெறும். ஏன் என்றால் உழைத்து வெற்றிபெற்றவர்கள் எல்லாம் உங்களை வாழ்த்த வந்திருக்கிறார்கள். ஒரு படம் எடுப்பது மிகவும் சிரமமான வேலை. நிறைய சிரமங்களைத் தாண்டி இப்படியொரு அருமையான படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். ஒரு படத்தின் ரிலீஸுக்கு முன்னாடியே அந்தப்படத்தின் வெற்றியை நாம் சொல்லிடலாம். இந்தப்படம் நிறைய விருதுகள் வாங்கியிருக்கிறது. படம் எடுப்பது சாதாரணமானதில்ல. படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் இனி படத்தின் கதாநாயகி பட ப்ரமோஷனுக்கு வரவேண்டும் என்று அக்ரிமெண்ட் போடுங்கள். ” என்றார்
நடிகர் ரவிமரியா பேசியதாவது,
“சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். நம் சகோதரர் ருத்ரா அவர்கள் மிகப்பெரிய ஹீரோவாக வருவதற்கு இறைவனை வேண்டுகிறேன். சக்கரை தூக்கலாய் புன்னகை படம் பெரிதாக வெற்றிபெறவேண்டும். ஏன் வெற்றிபெற வேண்டும் என்றால் இந்த மாதிரியான சின்னப்படங்கள் வெற்றிபெற்றால் தான் சிறுபட தயாரிப்பாளர்கள் நிறைய வருவார்கள். அதற்காகவே இப்படம் வெற்றிபெற வேண்டும்” என்றார்
இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசியதாவது, “இந்தப்படத்தின் தலைப்பை யார் வைத்தார்கள் என்று தெரியாது. மிக அருமையான தலைப்பு. இன்று சினிமாவில் கன்டென்ட் தான் ட்ரெண்ட். பெரிய ஹீரோ படமாக இருந்தாலும் படத்தில் என்ன விசயம் இருக்கு என்பதை தான் ரசிகன் பார்க்கிறான். நல்ல கதையை அழகாச் சொன்னா போதும். அது ஜனங்களுக்குப் பிடிச்சிதுன்னா ஹீரோ பெரியாள். விமர்சனங்களைப் பற்றி கவலையே படக்கூடாது. ப்ளுசட்டை மாறன் படத்தை நான் இன்னும் பார்க்கல. அவர் நிறைய படத்தை கழுவி கழுவி ஊத்திருக்கிறார். இப்ப அவர் படத்தை வேறு யாரோ விமர்சிக்கிறாங்க. ஆனா நாம யாரையும் விமர்சிக்கக்கூடாது. நாம கிரியேட்டர்ஸ். படைப்புகள் தோற்றாலும் படைப்பாளிகள் தோற்க  மாட்டார்கள். வெளிவரும் முன்பே இப்படம் ஏழெட்டு விருதுகள் வாங்கியிருக்கிறதென்றால் அது மிகப்பெரிய விசயம் அல்லவா? இந்தப்படம் மீண்டும் மீண்டும் விருது பெறட்டும். பெரிய வெற்றிப்பெறட்டும்” என்றார்
படத்தின் கதாநாயகன் ருத்ரா பேசியதாவது,
“அனைவருக்கும் வணக்கம். முதலில் என் அம்மா அப்பா டீச்சர்ஸ், இப்படியொரு நல்ல சந்தப்பர்த்தைக் கொடுத்த கடவுள் எல்லாருக்கும் நன்றி. என்னோட அம்மா  ரொம்ப ஆசைப்பட்டார் நான் நடிகன் ஆகணும்னு. இப்ப என்  அம்மா இல்லை.  மிஸ் யூ அம்மா. சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை இதுவந்து எனது இரண்டாவது திரைப்படம். இந்தப் பிஸி செட்டியூலிலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. ஒரு படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மீடியாதான்.  மீடியா நண்பர்களுக்கு நன்றி. இன்றைய ஹீரோ மியூசிக் டைரக்டர். படத்தில் மூன்று பாட்டு பண்ணிருக்கார். அவர் எனக்குச் சகோதரர். பாடலாசிரியர் கட்டளை ஜெயா அவர்கள், கொரியாகிராபர் இவர்கள் எல்லாரின் டெடிகேசனும் ரொம்ப முக்கியம். இந்தப்படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கோம். லொக்கேசன்கள் எல்லாமே காடுதான். காட்டு மிருகங்கள் உள்ள இடங்கள் தான். வண்டிபோக வசதி கிடையாது. ரொம்ப கஷ்டப்பட்டோம். So படத்தில் பங்குபெற்ற எல்லாருக்கும் மிக்க நன்றி” என்றார்
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது,
“இப்படத்தின் நாயகன் ருத்ராவின் தந்தையை வாழ்த்தி வரவேற்கிறேன். நான் இந்தப் பதினைந்து நாட்களில் மூன்று வித்தியாசமான படங்களின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். சிறுபடங்கள் வெற்றிபெறணும் என்பதற்காக ஆத்மார்த்தமான மனதோடு வாழ்த்த வர்றோம்.  நாங்க கஷ்டப்பட்டதெல்லாம் வேற. நான் கஷ்டப்பட்டது எல்லாமே சினிமா நல்லாருக்கணும் என்று தான். வ.உ.சிக்கு சிலை வைத்தது முதல் அவருடைய புத்தகங்களை நூலகத்தில் வைப்பது வரை தமிழக முதல்வர் ஸ்டாலின் அற்புதமான விசயங்களை செய்திருக்கிறார். இந்தப்படம் வெற்றிபெற்று அசல் தேறினாலே போதும். தயாரிப்பாளர் ரகுமான் அண்ணன் உடனே ரெண்டு படத்தை அறிவிச்சுடுவார். 50 கோடி 100 கோடி வாங்குற ஹீரோக்களை கேட்கிறேன். நீங்க வாங்குற காசு எல்லாம் சினிமாவுக்கு வந்திருக்குதா. உங்களால இந்த தமிழ்நாட்டுக்கு என்ன பயன்? ஏழை ரசிகர்கள் தர்ற பணம் தான் உங்களை கோடிஸ்வரர்கள் ஆக்குகிறது. இங்கே ஒரு தமிழ்நடிகை அழகாக சேலை கட்டி வந்திருக்கிறார். இதே ஒரு நார்த் பொண்ணு என்றால் எப்படி வருவார்கள்? நம் படங்களில் தமிழ் பெண்களையே நடிக்க வையுங்கள். நாம் எல்லாரையும் சிரிக்க வைக்கவேண்டும். சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை இலக்கிய நயமிக்க ஒரு டைட்டில். நடிகர் ருத்ரா மலையாளி தான். ஆனால் துணிச்சலாக தமிழ்படம் எடுத்திருக்கிறார். உலகத்தொழில் அமைப்புகளை எல்லாம் நம் தமிழக  முதல்வர் இங்கு அழைத்து வருவதைப் போல மற்றவர்கள் படம் எடுக்க வருவதற்கான அனுமதி பிரச்சனைகளையும் சரி செய்ய வேண்டும்.  சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை பெரிய வெற்றிபெற வேண்டும்” என்றார்.
விழாவில் கலந்துகொண்ட  சிறப்பித்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பத்திரிகை, ஊடக, இணையதள நண்பர்களுக்கு மக்கள் தொடர்பாளர் மணவை புவன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
Previous Post

ஆறு விருதுகளை அள்ளிக்குவித்த படம் ருத்ரா – சுபிக்ஷா நடித்துள்ள ” சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை “

Next Post

சாய் தன்ஷிகா வின் புத்தாண்டு புதிய துவக்கம் !

Next Post
சாய் தன்ஷிகா வின் புத்தாண்டு புதிய துவக்கம் !

சாய் தன்ஷிகா வின் புத்தாண்டு புதிய துவக்கம் !

Popular News

  • மீண்டும் இணைந்த “பிளாக்” வெற்றிப்படக்கூட்டணி, “ஜீவா 46” கோலாகலத் துவக்கம்!!

    0 shares
    Share 0 Tweet 0
  • திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜென்ம நட்சத்திரம்’ வெளியீட்டுக்கு முன்பே ஹிட்! ஊடக விமர்சனங்களும் முன்னோட்டக் காட்சிகளும் வரவேற்பை பெற்றுள்ளன!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்க , Passion ஸ்டூடியோஸ், ஜி ஸ்க்வாட், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் யூட்யூப் சென்சேஷனல் ஐகான்கள் பாரத் & நிரஞ்சனின் “Mr. பாரத்” படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • பான் இந்தியா படமாக இருந்தால், தளபதி விஜயை முதல்வராக அல்லாமல் பிரதமராகவே காட்டியிருப்பேன் – ‘யாதும் அறியான்’ இயக்குநர் அதிரடி பேச்சு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சட்டமும் நீதியும் – விமர்சனம்

July 19, 2025
திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

July 19, 2025

கெவி – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 19, 2025

ஜென்ம நட்சத்திரம் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

July 19, 2025

நடிகர் உன்னி முகுந்தனின் UMF மற்றும் ஐன்ஸ்டீன் மீடியாவுடன் இணைந்து லெஜெண்ட்ரி இயக்குநர் ஜோஷி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!

July 19, 2025

திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் முத்திரை பதித்துவரும் நடிகை பவ்யா த்ரிகா

July 19, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.