• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ரசிகர்களை நேரில் சந்தித்த “மை லார்ட்” படக்குழு !!

by Tamil2daynews
February 9, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ரசிகர்களை நேரில் சந்தித்த “மை லார்ட்” படக்குழு !!

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) எனும் திரைப்படம் – பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

நேற்று ஆயிரக்கணகான ரசிகர்கள் முன்னிலையில்,  பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர்  ரசிகர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, பாடல் பாடி, பட வசனங்கள் பேசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் மை லார்ட் படம் குறித்த தகவல்களை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,
மை லார்ட் ரசிகர்களுக்கு  ஒரு முழுமையை கொடுக்கும் படமாக இருக்கும்.
ஒரு சாப்பாடு சாப்பிட்டால் நமக்கு  என்ன ஒரு திருப்தி, ஒரு நிறைவு கிடைக்குமோ, அதுபோல தான் இந்த மை லார்ட் திரைப்படம்.சாப்பாட்டில் சுவை முக்கியம் தான், ஆனால் உடம்புக்கு கெடுதல் என்றால் சுவையாக இருந்தாலும் அதை சாப்பிடக் கூடாது.

“மை லார்ட்”  படம், எல்லாருமே ரசித்து, சந்தோஷமாக, ரொம்ப என்ஜாய் பண்ணி, எண்டர்டெயின் ஆகி பார்க்குற சுவையுடன் கூடிய  படமாக இருக்கும். ஆனால்  அதே நேரத்தில்,  மனிதர்களாக நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதையும் நமக்கு உணர்த்தும்  படமாகவும் இருக்கும்.

சசி சாருக்கு  “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்திற்கு பிறகு “மை லார்ட்”  மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும். ராஜுமுருகனுக்கு இது பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன் நன்றி.இயக்குநர் ராஜுமுருகன் பேசியதாவது..,
மை லார்ட்  பிப்ரவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதாவது வேலண்டைன்ஸ் டே சமயத்தில் ரிலீஸ் ஆகிறது. இதனால் பலர், “வேலண்டைன்ஸ் டேக்கும் ‘மை லார்ட்’ என்ற டைட்டிலுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டார்கள். உண்மையில் இந்த படத்துக்கும் வேலண்டைன்ஸ் டேவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஏனென்றால் மை லார்ட் என்பது சசிகுமார் மற்றும் சைத்ரா (முத்துசிற்பி, சுசீலா) ஆகியோரின் காதல் நிறைந்த ஒரு தம்பதியரை மையமாக கொண்ட படம்.

ஒரு அழகான கணவன்–மனைவி.அவர்களுக்கிடையிலான அன்புதான் இந்த படத்தின் மையம். கணவன்–மனைவிக்கிடையில் இருக்கும் ஆழமான அன்புதான், உலகத்திலேயே மிகப் பெரிய காதல். அதனால் மை லார்ட்  வேலண்டைன்ஸ் டே சமயத்தில் வெளியாகிறது.  இதைவிட பொருத்தமான நேரம் இருக்க முடியாது. என்னுடைய படங்களில் பொதுவாகவே காதலுக்கு நான் மிக முக்கியத்துவம் கொடுப்பேன். காதல் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு மட்டுமல்ல.

நம்மைச் சுற்றியுள்ள சக மனிதர்களை நேசிக்கும் மனநிலையே காதல் என்று நான் நம்புகிறேன். அந்த வகையில், இந்த படம் கணவன்–மனைவிக்கிடையிலான காதலை பேசுகிறது. அதே நேரத்தில், உலகம் முழுவதும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் எப்படி நேசிக்க வேண்டும் என்பதையும் சொல்லும் படமாக இருக்கும்.

இப்படியான அன்பையும் மனிதநேயத்தையும் பேசும் படத்தை சசிகுமார் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும் — சசிகுமார் என்றாலே அன்பும் மனிதநேயமும் கொண்டவர் அது சினிமாவில் மட்டுமல்ல; சினிமாவுக்கு வெளியிலும் அவர் அப்படியே வாழும் மனிதர். அதனால் முத்துசிற்பி கதாபாத்திரத்திற்கு அவரைவிட சிறந்த ஆள் யாரும் இல்லை.

அதேபோல் சைத்ரா இந்த படத்தில் மிக அழகாக நடித்துள்ளார். மை லார்ட்  மூலமாக அவரை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்.கர்நாடகாவிலிருந்து ஒரு சிறந்த நடிப்புத் திறன் கொண்ட நடிகை நமக்கு கிடைத்துள்ளார். தமிழ்நாடு எப்போதுமே வந்தாரை வாழவைக்கும் பூமி. அந்த வகையில், அவரையும் தமிழ்நாடு வாழ வைக்கும்.
என்னுடைய ஆத்மார்த்தமான இசை நண்பர் ஷானுக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அற்புதமான இசையைத் தந்துள்ளார்.

பெரும் உழைப்புடன், முழுக்க முழுக்க மக்களுக்கான படமாக மை லார்ட்  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு நீங்கள் தரும் அன்புதான் எங்களைப் போன்ற கலைஞர்களை வாழ வைக்கும். அனைவருக்கும் நன்றி.  பிப்ரவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் ‘மை லார்ட்’ கண்டிப்பாக பாருங்கள்.

நடிகை சைத்ரா பேசியதாவது..,
இந்தப்படம் மிக மிக இனிமையான அனுபவம், இந்திய சினிமாவின் முக்கியமான ஆளுமைகள் பங்குபெற்ற படத்தில் நானும் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஷான் ரோல்டன் இசை அனைவருக்கும் பிடிக்கும். இப்பட பாடல்களும் அனைவருக்கும் பிடிக்கும். இந்தப்படத்தில் காதல் இருக்கிறது. சசிகுமார் மிக ஜாலியானவர். அவர் இயக்குநர் என்பதால்,  அவருடன் நடித்தது நல்ல அனுபவம். அவருடன் இன்னும் நிறைய படம் நடிக்க ஆசை. பொலிடிகல் டிராமாவும் இருக்கிறது. நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு பயனுள்ள படமாக இருக்கும்.

எல்லோரும் கண்டிப்பாக பிப்ரவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் ‘மை லார்ட்’ கண்டிப்பாக பார்த்து ஆதரவு தாருங்கள்.

நடிகர் சசிக்குமார் பேசியதாவது…,
டூரிஸ்ட் ஃபேமிலியில் மனிதநேயத்தைப் பற்றி சொன்ன மாதிரி, இந்த படமும் உங்களுக்கு அன்பையும், மனிதநேயத்தையும் போதிக்கும் படம். என்னுடைய படங்கள் எப்போதுமே ஃபேமிலிக்கான படங்கள். உங்கள் குடும்பத்தோட, குழந்தைகளோட நிச்சயமாக வந்து பார்க்கலாம். இளம் தலைமுறைக்கும் ஏற்ற ஒரு படம். இப்போ உள்ள ஜெனரேஷன், வேகமா கோபப்படுற சூழ்நிலைக்கு நடுவில்,“பொறுமையா இருங்க, மனிதநேயமா இருங்க” என்று சொல்கிற படம். ராஜுமுருகன் சார் ஸ்டைலில், கலகலப்பான காமெடியோட படம் நகரும். உங்களை சோகப்படுத்த மாட்டோம். அழ வைக்க மாட்டோம். சிரிக்க வைப்போம்… சிந்திக்க வைப்போம்.
நாயகி சைத்ரா, கர்நாடகாவிலிருந்து வந்து தமிழில் சிறப்பாக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். “கன்னடத்தில் சிறந்த நடிகையாக இருப்பதுபோல, தமிழிலும் அவர் ஒரு முக்கிய நடிகையாக வளர்வார். மை லார்ட் அவருக்கான சிறந்த அறிமுகமாக இருக்கும்.

படத்தில் குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எதிர்பாராத சூழ்நிலையில் படக்குழுவில் இணைந்த அவர், எந்த தயக்கமும் இன்றி வந்து கதாபாத்திரத்திற்கு முழுமையான உயிர் கொடுத்தார்.

இசையமைப்பாளர் ஷான் குரல் எல்லோரையும் கவரும் தன்மை கொண்டது. காதல், சோகம், சந்தோஷம் – எந்த உணர்வாக இருந்தாலும் அவரது குரல் மனதில் நிற்கும். டூரிஸ்ட்  ஃபேமிலிக்குப்  பிறகு மீண்டும் இணைவது மிகுந்த சந்தோஷம்.  பிப்ரவரி 13-ஆம் தேதி, சமயத்தில் மை லார்ட் படம் வருகிறது அனைவரும் பார்த்து கொண்டாடுங்கள்.

ஏழை எளிய மக்கள் மீது நடைபெறும் அதிகார அத்துமீறல் தொடர்பான காட்சிகள் அரசியல் நையாண்டியுடன்,  அன்பான குடும்ப உறவுகள் குறித்த விசயங்களை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ராஜுமுருகன்.

இப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத,  ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை  எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள். அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சுரண்டலை சட்டயர் (Satire) பாணியில் விவரிப்பதுடன் ஃபேமிலி என்டர்டெய்னராகவும் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார் . இதனை தமிழகம் முழுவதும் ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது.

“மை லார்ட்” திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

Previous Post

சரத்குமார் நடிக்கும் ‘ஆழி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

Next Post

“பூக்கி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Next Post

“பூக்கி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Popular News

  • மை லார்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Actor Aari Arujunan Latest HD Photos

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE5, அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் ‘கென்னடி’ பட டிரெய்லரை வெளியிட்டது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • சுகா இயக்கத்தில் “சைலப்பன் சைக்கிள் மார்ட்” – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • Phars Film நிறுவனம் ‘டாக்ஸிக்’ படத்தின் இந்திய மொழி பதிப்புகளுக்காக வரலாற்றுச் சாதனை மிக்க வெளிநாட்டு ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளது – !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ZEE5, அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் ‘கென்னடி’ பட டிரெய்லரை வெளியிட்டது !!

February 12, 2026

சுகா இயக்கத்தில் “சைலப்பன் சைக்கிள் மார்ட்” – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

February 12, 2026

Phars Film நிறுவனம் ‘டாக்ஸிக்’ படத்தின் இந்திய மொழி பதிப்புகளுக்காக வரலாற்றுச் சாதனை மிக்க வெளிநாட்டு ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளது – !

February 12, 2026

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரியாக ‘8 தோட்டாக்கள்’ வெற்றி நடிக்கும் ‘பரீட்’

February 12, 2026

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் வழங்கும் “மை லார்ட்”

February 12, 2026

மை லார்ட் – விமர்சனம்

February 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.