• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சுகா இயக்கத்தில் “சைலப்பன் சைக்கிள் மார்ட்” – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

by Tamil2daynews
February 12, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சுகா இயக்கத்தில் “சைலப்பன் சைக்கிள் மார்ட்” – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Lakshmi Creations சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில், சுகா இயக்கத்தில் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள ஃபேமிலி எண்டர்டெய்னர் திரைப்படமான “சைலப்பன் சைக்கிள் மார்ட்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் வெற்றிமாறன் இன்று வெளியிட்டார்.

தினசரி வாழ்க்கையில் எளிய மனிதர்கள் வாழும் உண்மையான உலகத்தை அசலாக திரையில் பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது. ஒரு சைக்கிள் சக்கரத்தை மையமாக வைத்து, ஒரு கிராமத்தின் முகம், அதன் மக்கள், கோவில் உள்ளிட்ட அம்சங்களை புதுமையான காட்சியமைப்பில் வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஒரு தென் தமிழகத்து கிராமம், அங்கு வாழும் மனிதர்கள் மற்றும் அவர்களது வாழ்வில் நிகழும் சம்பவங்களை மையமாகக் கொண்டு, நகைச்சுவை கலந்து, குடும்பத்துடன் அனைவரும் ரசித்து மகிழும் வகையில் ஒரு குடும்பச் சித்திரமாக இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுகா.

இந்த படத்தில் இசக்கி கார்வண்ணன், எம். எஸ். பாஸ்கர், இளவரசு, மூணார் ரமேஷ், இயக்குநர் சுப்ரமணிய சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பூஜா மோகன்ராஜ், கதா நந்தி, சுர்ஜித் கோபிநாத், வித்யா விஜயகுமார், யஷ்வந்த், சந்தான லட்சுமி மற்றும் மீனாட்சி ஐயர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அவரது கிராமத்து வாசனைமிக்க இசையில், பாடல்கள் மக்களை மகிழ்விக்கும் வகையில் உருவாகியுள்ளன.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில் நுட்ப குழு
கதை& இயக்கம் : சுகா
தயாரிப்பு : இசக்கி கார்வண்ணன்
இசை : இளையராஜா
படத்தொகுப்பு (Editor) : சுரேஷ் அர்ஸ்
ஒளிப்பதிவு (DOP) : மார்ட்டின் டான்ராஜ்
கலை இயக்கம் : A. N. இளங்கோவன்
சண்டை இயக்கம் : கனல் கண்ணன்
PRO – சதீஷ் (AIM)
Previous Post

Phars Film நிறுவனம் ‘டாக்ஸிக்’ படத்தின் இந்திய மொழி பதிப்புகளுக்காக வரலாற்றுச் சாதனை மிக்க வெளிநாட்டு ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளது – !

Next Post

ZEE5, அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் ‘கென்னடி’ பட டிரெய்லரை வெளியிட்டது !!

Next Post

ZEE5, அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் ‘கென்னடி’ பட டிரெய்லரை வெளியிட்டது !!

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.