• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் வழங்கும் ‘வெள்ளகுதிர’ பட புகழ் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் கோமலி பிரசாத் நடிக்கும் ’மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

by Tamil2daynews
January 30, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் வழங்கும் ‘வெள்ளகுதிர’ பட புகழ் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் கோமலி பிரசாத் நடிக்கும் ’மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

 

பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி இதற்கு முன்பு வெளியான புதுமையான மற்றும் தரமான படங்கள் எல்லைகள், மொழிகள் தாண்டி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அனுஷ்கா ஷெட்டியின் ‘அருந்ததி’, கல்யாணி பிரியதர்ஷனின் ’லோகா: சாப்டர்1’ போன்ற படங்கள் இந்திய சினிமாவில்  முத்திரை பதித்தவை. அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக உருவாகிறது ’வெள்ளகுதிர’ படப்புகழ் இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமாரின் ’மண்டவெட்டி’ திரைப்படம்.

கோமலி பிரசாத் நடிக்கும் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜனவரி 28) பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக துவங்கியது. டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் நிறுவனத்தில், சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி, தயாரிக்கும் இந்த படம் காட்சியமைப்பிலும் கதை சொல்லலிலும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும்.

’மண்டவெட்டி’ திரைப்படம் டார்க், சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் படமாக உருவாகிறது.  இழப்பு, அடையாளம் மற்றும் சர்வைவல் ஆகியவற்றைப் பற்றி ஒரு பெண்ணின் உளவியல் மற்றும் உணர்வுப்பூர்வமான பயணத்தையும் மனித உணர்வுகளின் ஆழத்தையும் அதற்கு பின்னால் உள்ள மர்மத்தையும் பரபரப்பான களத்தில் இந்தப் படம் பேசும்.வித்தியாசமான கதாபாத்திரங்களில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை கோமலி பிரசாத் இந்த படத்தில் சவால் மிகுந்த முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் தேனப்பன், கஜராஜ், அம்ரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அனுபவமும் ஆர்வமும் மிக்க பலர் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். கண்கவர் காட்சியமைப்பு, வலுவான பின்னணி இசை, இயல்பான ஆக்ஷன் காட்சிகள் ஆகியவை இணைந்து படத்தின் டார்க் மற்றும் சூப்பர்நேச்சுரல் கதைக்களத்திற்கு பொருந்தும் வகையில் சிறந்த திரை அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும்.
இயக்குநரும் தயாரிப்பாளருமான சரண்ராஜ் செந்தில்குமார் ‘மண்டவெட்டி’ படம் குறித்து பகிர்ந்து கொண்டதாவது, “உணர்வுகள், தீவிரம் மற்றும் துணிச்சலான கதை சொல்லலுடன் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை இந்தப் படம் திரையில் கொடுக்கும்” என்றார்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் கலந்து கொள்ள படத்தின் பூஜை பாரம்பரிய முறைப்படி நடந்தது. படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற இறைவன் அருள் வேண்டினர். படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ள நிலையில், சூப்பர் நேச்சுரல் மற்றும் ஆழமான மனித உணர்வுகளுடன் ‘மண்டவெட்டி’ திரைப்படம்  தொழில்நுட்ப ரீதியாகவும் கதையாகவும் வலுவான திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷூட்டிங் ஷெட்யூல் மற்றும் படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும்.

தொழில்நுட்பக் குழு விவரம்:

பேனர்: டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ்,
தயாரிப்பு: சரண்ராஜ் செந்தில்குமார்,
இயக்கம்: சரண்ராஜ் செந்தில்குமார்,
ஒளிப்பதிவு: பிரகாஷ்,
படத்தொகுப்பு: குணா,
இசை: தீபக் வேணுகோபால்,
சண்டை பயிற்சி: கவுதம்,
ஆடை வடிவமைப்பு: சங்கீதா,
ஒப்பனை: நர்மதா,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்.

Previous Post

“ஆகாசம்லோ ஒக தாரா” (Aakasamlo Oka Tara) படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

Next Post

“ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருநங்கையும் உள்ளே மறைத்து வைத்திருக்கும் திறமையையும் ஆசையையும் தங்களுடன் இணைத்து பார்க்கும்படியான திரைப்படம் தான் ‘மெல்லிசை’” – இயக்குநர் திரவ்!

Next Post

“ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருநங்கையும் உள்ளே மறைத்து வைத்திருக்கும் திறமையையும் ஆசையையும் தங்களுடன் இணைத்து பார்க்கும்படியான திரைப்படம் தான் ‘மெல்லிசை’” – இயக்குநர் திரவ்!

Popular News

  • பள்ளிக் குழந்தைகள் கொண்டாடிய Children of Heaven

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருநங்கையும் உள்ளே மறைத்து வைத்திருக்கும் திறமையையும் ஆசையையும் தங்களுடன் இணைத்து பார்க்கும்படியான திரைப்படம் தான் ‘மெல்லிசை’” – இயக்குநர் திரவ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் வழங்கும் ‘வெள்ளகுதிர’ பட புகழ் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் கோமலி பிரசாத் நடிக்கும் ’மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ”பராசக்தி” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • “மூன்வாக்” படக்குழுவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் கொண்டாட்டம் !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருநங்கையும் உள்ளே மறைத்து வைத்திருக்கும் திறமையையும் ஆசையையும் தங்களுடன் இணைத்து பார்க்கும்படியான திரைப்படம் தான் ‘மெல்லிசை’” – இயக்குநர் திரவ்!

January 30, 2026

டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் வழங்கும் ‘வெள்ளகுதிர’ பட புகழ் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் கோமலி பிரசாத் நடிக்கும் ’மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

January 30, 2026

“ஆகாசம்லோ ஒக தாரா” (Aakasamlo Oka Tara) படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

January 30, 2026

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 மச் ‘படத்தின் வெற்றி விழா

January 30, 2026

ரோட்டர்டாம், 29 ஜனவரி 2026 — நியூட்டன் சினிமா தனது முழுநீள திரைப்படமான மயிலா திரைப்படம் 55வது சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழா (IFFR)வின் Bright Future பிரிவில் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு, உலகம் முழுவதிலும் இருந்து புதிய (சிந்தனைக்)குரல்களை கண்டறியும் நோக்கத்தின் விளைவாக அமைந்ததாக கூறப்படுகிறது.

January 30, 2026

லாக் டவுன் – விமர்சனம்

January 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.