• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இயக்குநர் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படம்!

by Tamil2daynews
February 25, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இயக்குநர் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படம்!

 

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதை வணிக ரீதியாகவும் வெற்றி படங்களாக தயாரித்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் அடுத்து நம்பிக்கைக்குரிய ஒரு படத்துடன் வந்திருக்கிறார். இயக்குநர் மீரா கதிரவன் இயக்கிய ‘ஹபீபி’ திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடவுள்ளதாக தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் ராகுல் அறிவித்துள்ளார்.

இயக்குநர் மீரா கதிரவன் இயக்கியுள்ள ‘ஹபீபி’ திரைப்படம் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் உணர்வுகளை உண்மைக்கு நெருக்கமாக பதிவு செய்கிறது. உண்மையான அன்பு, உறவுகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்ட இந்தப் படத்தின் தலைப்பின் அர்த்தம் ‘என் அன்பே’ என்பதாகும்.

‘அவள் பெயர் தமிழரசி’ மற்றும் ‘விழித்திரு’ போன்ற படங்களில் சமூக அக்கறையுள்ள கருத்துகள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மீரா கதிரவன் ‘ஹபீபி’ படத்தில் மீண்டும் அழுத்தமான கதைக்களத்தோடு வருகிறார். புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உணர்வுப்பூர்வமான இந்த கதைக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.படம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ வெறும் திரைப்படமாக மட்டுமல்லாது, நான் வாழ்ந்த நெருக்கமாக பார்த்த உலகத்தின் பிரதிபலிப்பாக இருக்கும். நன்றி, உண்மை மற்றும் அன்பின் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. தவறான புரிதல்கள் அதிகரிக்கும் இந்த காலத்தில் மனிதத்தன்மை மற்றும் பாசம் நிறைந்த வாழ்க்கையை அதன் இயல்பிலேயே பதிவு செய்ய விரும்பினேன். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த படத்தில் ஆர்வம் காட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் உள்ளே வந்ததும் நாங்கள் கற்பனை செய்ததைவிட படம் பெரிய அளவில் வளர்ந்தது” என்றார்.

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கூறுகையில், “மக்களின் வாழ்க்கையை உண்மைக்கு நெருக்கமாகக் காட்டும் சக்தி சினிமாவுக்கு உண்டு. அர்த்தமுள்ள கதையை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் சின்சியராக எடுக்கப்பட்ட படம்தான் ‘ஹபீபி’. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் இந்த முக்கியமான படைப்பை கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் நீண்டநாள் தாக்கத்தை ஏற்படுத்தும். ‘ஹபீபி’ அப்படியான ஒரு திரைப்படம். நிச்சயம் பார்வையாளர்களும் அதை உணர்வார்கள்.    படத்திற்கான வலுவான மார்க்கெட்டிங் திட்டங்கள் வைத்துள்ளோம். படத்தின் டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் திரையரங்க வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.

இப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரும் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய ’வல்லோனே’ பாடல் மறைந்த புகழ்பெற்ற பாடகர் நாகூர் ஈ.எம். ஹனிபா  அவர்களின் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் பாடவைத்தது பாராட்டை பெற்றது.

Previous Post

நாயகனாக அறிமுகமாகும் ஹர்ஷவர்தன்

Next Post

தமிழ்நாட்டிலிருந்து சியோல் வரை: நெட்ஃபிலிக்ஸின் ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது!

Next Post

தமிழ்நாட்டிலிருந்து சியோல் வரை: நெட்ஃபிலிக்ஸின் ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது!

Popular News

  • ‘அந்தோனி’ பட விழாவில் நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் சீனு ராமசாமி!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரசாந்த் வர்மா இயக்கத்தில், ரிஷப் ஷெட்டி நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி-சீரிஸ் வழங்கும் ’ஜெய் ஹனுமான்’ திரைப்படம், ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரியில் பாரம்பரிய பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • படவாய்ப்பு தருகிறேன் என கூறி என்னை நாசம் செய்த இயக்குனர்கள்! அதையும் சலிக்காமல் செய்தேன்.. டிக்டாக் இலக்கியா பகீர் தகவல்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மலையாள நடன இயக்குனர் ராபின் இயக்குனராக அறிமுகமாகும் வருத்துப் போக்கு

February 25, 2026

தடயம் (வெப் சீரிஸ்) – விமர்சனம்

February 25, 2026

பிரசாந்த் வர்மா இயக்கத்தில், ரிஷப் ஷெட்டி நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி-சீரிஸ் வழங்கும் ’ஜெய் ஹனுமான்’ திரைப்படம், ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரியில் பாரம்பரிய பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது!

February 25, 2026

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

February 25, 2026

நவீன இந்திய திரையுலகில் பெரிய இயக்குநராக உருவெடுப்பார் – ராஜுமுருகன்..

February 25, 2026

தமிழ்நாட்டிலிருந்து சியோல் வரை: நெட்ஃபிலிக்ஸின் ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது!

February 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.