• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

செகண்ட் கேஸ் ஆப் ‘சீதாராம்’ – விமர்சனம்

by Tamil2daynews
February 22, 2026
in விமர்சனம்
0
செகண்ட் கேஸ் ஆப் ‘சீதாராம்’ – விமர்சனம்
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
செகண்ட் கேஸ் ஆப் ‘சீதாராம்’ – விமர்சனம் 

தேவிபிரசாத் ஷெட்டி & சாத்விக் ஹெப்பார் தயாரிப்பில் அரவிந்த் ஷெட்டி இணை தயாரிப்பில் தேவிபிரசாத் ஷெட்டி எழுதி இயக்கி உள்ள படம் தான் செகண்ட் கேஸ் ஆப் சீதாராம். போலீஸ் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் வடிவில் உருவாகி உள்ள இந்த படத்தில் விஜய ராகவேந்திரா, கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, உஷா பண்டாரி ஆகியோர் நடித்துள்ளனர். கன்னட மொழியில் உருவான இந்த படத்தின் தமிழ் வெர்சனை பவன் வடேயருடன் இணைந்து “ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்” வெளியிட்டுள்ளது. செகண்ட் கேஸ் ஆப் சீதாராம் படத்திற்கு ஹேமந்த் ஒளிப்பதிவு செய்ய, நவனீத் ஷாம் இசையமைத்துள்ளார். ஷஷாங்க் நாராயணா எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் ராகவேந்திரா நடிப்பில் வெளியான சீதாராம் பினாய் கேஸ் நோ.18 என்ற படத்தின் தொடர்ச்சியாக செகண்ட் கேஸ் ஆப் ‘சீதாராம்’ வெளியாகி உள்ளது. ஆனெகுட்டா காவல் நிலையத்தில் பணிபுரியும் விஜய் ராகவேந்திரா ஒரு சிக்கலான வழக்கை விசாரிக்கிறார். மலேனாடு பகுதியில் இரண்டு ஒரே மாதிரியான கொடூரமான கொலைகள் நடக்கின்றன. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டின் படி, இது ஒரு சைக்கோபேத் செயல் என்பது தெரிய வருகிறது. கொலை செய்யப்பட்டவர்கள் அதிக சித்திரவதை செய்யப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது. இந்த நேரத்தில் அவரின் சகோதரி தனது குடும்பத்துடன் அதே ஊரில் குடிபெயர்கிறார். Sebastian என்ற மனநலம் பாதிக்கப்பட்டவர் ஹீரோவிடம் உதவி கேட்கிறார். இவை அனைத்தும் ஒரு இடத்தில் சேர்க்கிறது. உண்மையில் இந்த கொலையை செய்தது யார்? எதற்காக இப்படி நடக்கிறது? என்பதை திரில்லர் வடிவில் சொல்லி இருக்கும் படம் தான் செகண்ட் கேஸ் ஆப் ‘சீதாராம்’.
விஜய் ராகவேந்திரா சீதாராமாக மிக சிறப்பாக நடித்துள்ளார். வழக்கமான ஒரு போலீஸ் கதாபாத்திரம் போல் இல்லாமல், ஒரு சாதாரண மனிதராக தவறுகள் செய்யும், தோல்வியடையும் ஒரு ஆழமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே Sebastian கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார். போலீஸ் இன்வெஸ்டிகேஷன் காட்சிகள் சில இடங்களில் சற்று நீளமாக உள்ளது. இருப்பினும் அதனை விஜய் ராகவேந்திரா தனது நடிப்பின் மூலம் சரி செய்கிறார். சைக்கோ த்ரில்லர் படமாக இருந்தாலும் பெண்கள் பாதுகாப்பு, அதிகார அழுத்தம், குடும்ப உறவுகள் போன்ற பற்றி படம் பேசுகிறது.

சீதாராம் பினாய் கேஸ் நோ.18 மற்றும் கொண்டானா வழக்கு படங்களை இயக்கிய தேவிபிரசாத் சேட்டி மீண்டும் அதே ஸ்டைலில் செகண்ட் கேஸ் ஆப் ‘சீதாராம்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். படம் முழுவதும் ஒரு ஸ்லோ பர்ன் த்ரில்லர் வடிவில் நகர்கிறது. இது சில இடங்களில் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது. ஆனாலும் இடண்டாம் பாதியில் அதனை சரி செய்து ட்விஸ்ட்கள் மூலம் ரசிக்க வைக்கிறார் இயக்குனர். படத்தில் மனிதர்களின் மனநிலை எப்படி எல்லாம் மாறும் என்பதை சிறப்பாக காட்டி உள்ளனர். ஆனாலும் இதே போல பல்வேறு படங்கள் ஏற்கனவே வந்துள்ளதால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடிகிறது.

நவனீத் ஷாம் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் கூடுதல் பலம். போலீஸ் இன்வெஸ்டிகேஷன் படங்கள் பிடிக்கும் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கலாம். மெதுவான ஸ்க்ரீன்ப்ளே மட்டும் சில சோதனைகளை தந்தாலும், விஜய் ராகவேந்திராவின் நடிப்பு மற்றும் தேவிபிரசாத் ஷெட்டி இயக்கத்திற்காக நிச்சயம் தியேட்டரில் பார்க்கலாம்.

விறு விறு, அதிரடி ,சரவெடி
Previous Post

மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரிப்பில் உருவாகியுள்ள ஏ படம் பிப்ரவரி 27 அன்று திரைக்கு வருகிறது…

Next Post

ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார், ”இது என்னுடைய முதல் மேடை. கனவு போல உள்ளது. வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ‘தாய் கிழவி’ படம் உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும்”.

Next Post

ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார், ”இது என்னுடைய முதல் மேடை. கனவு போல உள்ளது. வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ‘தாய் கிழவி’ படம் உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும்”.

Popular News

  • ‘அந்தோனி’ பட விழாவில் நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் சீனு ராமசாமி!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரசாந்த் வர்மா இயக்கத்தில், ரிஷப் ஷெட்டி நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி-சீரிஸ் வழங்கும் ’ஜெய் ஹனுமான்’ திரைப்படம், ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரியில் பாரம்பரிய பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • படவாய்ப்பு தருகிறேன் என கூறி என்னை நாசம் செய்த இயக்குனர்கள்! அதையும் சலிக்காமல் செய்தேன்.. டிக்டாக் இலக்கியா பகீர் தகவல்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மலையாள நடன இயக்குனர் ராபின் இயக்குனராக அறிமுகமாகும் வருத்துப் போக்கு

February 25, 2026

தடயம் (வெப் சீரிஸ்) – விமர்சனம்

February 25, 2026

பிரசாந்த் வர்மா இயக்கத்தில், ரிஷப் ஷெட்டி நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி-சீரிஸ் வழங்கும் ’ஜெய் ஹனுமான்’ திரைப்படம், ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரியில் பாரம்பரிய பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது!

February 25, 2026

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

February 25, 2026

நவீன இந்திய திரையுலகில் பெரிய இயக்குநராக உருவெடுப்பார் – ராஜுமுருகன்..

February 25, 2026

தமிழ்நாட்டிலிருந்து சியோல் வரை: நெட்ஃபிலிக்ஸின் ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது!

February 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.