• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நாயகனாக அறிமுகமாகும் ஹர்ஷவர்தன்

by Tamil2daynews
February 25, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நாயகனாக அறிமுகமாகும் ஹர்ஷவர்தன்

 

பாடகரும், இசைக் கலைஞருமான ஹர்ஷவர்தன் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார் என உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

திரையிசை பாடலுக்கு நிகராக தற்போது திறமை வாய்ந்த இசை கலைஞர்கள் உருவாக்கும் இன்டிபென்டன்ட் மியூசிக் வீடியோ ஆல்பத்திற்கும் கிடைத்து வருகிறது. ஜென் ஸீ தலைமுறையினரின் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருவதால் திறமைசாலியான இசை கலைஞர்கள் புது சிந்தனையுடன் உருவாக்கும் மியூசிக் ஆல்பங்களுக்கான வரவேற்பு உயர்ந்து வருகிறது. இதனை உணர்ந்த பாடகர் – நடிகர் – இசை கலைஞர் ஹர்ஷவர்தன் ‘ மாயம் நீயடி’ எனும் மியூசிக் வீடியோ ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார்.

ஹர்ஷவர்தன் இந்த மியூசிக் வீடியோ ஆல்பத்திற்கான பாடலுக்கு இசையமைத்து, பாடி, ஆடி நடித்திருக்கிறார். இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத பின்னணி பாடகி சுப்லாஷினியுடன் இணைந்து ஹர்ஷவர்தன் பாடி இருக்கிறார்.

இந்த பாடலுக்கான வீடியோவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹர்ஷவர்தன் மற்றும் நடிகை சஞ்சனா திவாரி ஆகியோர் இணைந்து பாடலில் தோன்றி காதல் கெமிஸ்ட்ரியை கச்சிதமாக மாண்டேஜஸ் காட்சியில் வெளிபடுத்தி ரசிகர்களை மாயம் செய்து மயக்குகிறார்கள். இதன் மூலம் இந்தப் பாடல் வழக்கமான சுயாதீன இசை பாடலுக்கான காணொலியாக இல்லாமல்.. கமர்சியல் திரைப்படங்களில் இடம்பெறும் மெலோடி பாடலாக உருவாகி இருக்கிறது என்பது உறுதியாகிறது.

ஃபோட்டோகிராபருக்கும், ஓவியருக்கும் இடையேயான அறிமுகம் – நட்பு – காதல் – புரிதல் – தனித்திறன்- காத்திருப்பு – சந்தோஷம் – ஏக்கம் – தவிப்பு – என ஒவ்வொரு உணர்வும் மென்மையான இதமான இனிமையான இசையுடன் காட்சியாக ஒளிரும் போது ரசிகர்களுக்கு அற்புதமான இசை அனுபவமும், திரை அனுபவமும் கிடைக்கிறது. இதற்கு காரணமாக இருந்த ஹர்ஷவர்தனை கை வலிக்க கரம் குலுக்கி பெரிய பூங்கொத்து கொடுத்து பாராட்டு தெரிவிக்கலாம்.

ஹர்ஷவர்தன் – இசையை  சுவாசமாக நேசிக்கும் இசை கலைஞர் மட்டுமல்ல… இசையனுபவத்தை சுவை மிக்க அமிர்தமாக வழங்கும் அற்புதமான ஆற்றலையும் பெற்றவர். இவருடைய மேலதிக முயற்சியில் உருவாக்கி இருக்கும் மாயம் நீயடி’ மியூசிக் வீடியோ ஆல்பம் சிறந்த சான்று.

இவர் ஏற்கனவே இரண்டு சுயாதீன இசை ஆல்பத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறார். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ்கள் பின் தொடர்கிறார்கள். இவருடைய ஒரு மியூசிக்கல் போஸ்ட்டுக்கு லட்சக்கணக்கான லைக்குகளும், லட்சக்கணக்கான வ்யூஸ்களும் கிடைப்பதால் சமூக வலைதளவாசிகளின் ஃபேவரைட் ஸ்டாராகவும் வலம் வருகிறார்.

காதலர் தின வாரமாக கொண்டாடும் வேளையில் இந்த ‘மாயம் நீயடி’ மியூசிக் வீடியோ ஆல்பம் இன்று வெளியாகி இருக்கிறது. அனைத்து மியூசிக் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியாகி இருக்கும் இந்த ஆல்பத்திற்கு இசை ரசிகர்களிடத்தில் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதனிடையே ஹர்ஷவர்தன் விரைவில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக‌ இருக்கிறார் என்பதும் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Previous Post

ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார், ”இது என்னுடைய முதல் மேடை. கனவு போல உள்ளது. வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ‘தாய் கிழவி’ படம் உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும்”.

Next Post

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இயக்குநர் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படம்!

Next Post

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இயக்குநர் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படம்!

Popular News

  • ‘அந்தோனி’ பட விழாவில் நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் சீனு ராமசாமி!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரசாந்த் வர்மா இயக்கத்தில், ரிஷப் ஷெட்டி நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி-சீரிஸ் வழங்கும் ’ஜெய் ஹனுமான்’ திரைப்படம், ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரியில் பாரம்பரிய பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • படவாய்ப்பு தருகிறேன் என கூறி என்னை நாசம் செய்த இயக்குனர்கள்! அதையும் சலிக்காமல் செய்தேன்.. டிக்டாக் இலக்கியா பகீர் தகவல்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மலையாள நடன இயக்குனர் ராபின் இயக்குனராக அறிமுகமாகும் வருத்துப் போக்கு

February 25, 2026

தடயம் (வெப் சீரிஸ்) – விமர்சனம்

February 25, 2026

பிரசாந்த் வர்மா இயக்கத்தில், ரிஷப் ஷெட்டி நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி-சீரிஸ் வழங்கும் ’ஜெய் ஹனுமான்’ திரைப்படம், ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரியில் பாரம்பரிய பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது!

February 25, 2026

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

February 25, 2026

நவீன இந்திய திரையுலகில் பெரிய இயக்குநராக உருவெடுப்பார் – ராஜுமுருகன்..

February 25, 2026

தமிழ்நாட்டிலிருந்து சியோல் வரை: நெட்ஃபிலிக்ஸின் ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது!

February 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.