• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

அன்பே டயானா – விமர்சனம்

by Tamil2daynews
July 16, 2026
in விமர்சனம்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அன்பே டயானா – விமர்சனம் 

 

ஜமா எனும் ரசிகர்களால் போற்றப்பட்ட படத்தை எடுத்த பாரி இளவழகன் நடித்து இயக்கம் இருக்கும் படம்.

தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர் கிருஷ்ணா  (பாரி இளவழகன் ). இவரது தந்தை ஜாலி டைப். தாயார் சரளா தனது சாதியில் தான் மகனுக்கு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர். இந்நிலையில் கிருஷ்ணா ஆங்கிலோ இந்திய பெண் மேஜிக்கை (ரம்யா ரங்கநாதன்) காதலிக்கிறார். இந்த விவகாரம் சரளாவுக்கு தெரியவர  குடும்பமே அதகளம் ஆகிறது. தனது அண்ணன் மகளுக்கு கிருஷ்ணாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். இந்த விவகாரம் எங்கு போய் முடிகிறது என்பதுதான் கலாட்டா கிளைமாக்ஸ் ஆக அமைகிறது

ஜமா என்ற தெருக்கூத்து படத்தை இயக்கி நடித்து ஓரளவுக்கு மக்கள் மத்தியில் அறிமுகமானவர்தான் பாரிஇளவழகன்.. தெருக்கூத்து ஆட்டத்திலேயே பெண் வேடம் போட்டு படம் முழுக்க நடித்து அசத்திய பாரி நடிப்பு பற்றி குறை காண்பது கடினம் தான்.

அன்பே டயானா படத்தில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் அவர் அம்மாவுக்கு அடங்கிய பிள்ளையாக நடித்திருக்கிறார் இந்த காலத்தில் இப்படி கூட பிள்ளைகள் இருக்கிறார்களா என்று கேட்கும் அளவுக்கு நல்ல பிள்ளையாக நடித்திருக்கிறார்.

ஆங்கிலோ இந்திய கிறிஸ்துவ பெண்ணாக வரும் ரம்யாவை பாரி இளழகன் தனது அப்பாவித்தனமான நடவடிக்கைகள் மூலம் கவர்வதும் காதல் கொள்வதும்  அந்த காதலை அழகு ரம்யா ஏற்றுக்கொள்வதெல்லாம் நடைமுறை சாத்தியமா என்று கேட்டால் சாத்தியமாகத்தான் இருக்கிறது. கருப்பு மாப்பிள்ளை ஒருவருக்கு இங்கிலாந்து சிவப்பு பெண் கிடைப்பது போலத்தான் இந்த காதல் கதை..

ரம்யாவின் தந்தையை பார்த்து சற்று பயப்படும் பாரி ஒரு கட்டத்தில் அவரை பளார் என்று கன்னத்தில் அறைகிறார். இது எப்படி நடக்கிறது என்று கேட்டால் படத்தில் அது ஒரு குட்டி கதையாக வருகிறது.

இதற்கிடையில் பாரிக்கு ரோஜா தனது அண்ணன் மகளை பார்த்து திருமணம் செய்து வைக்க செய்யும் ஏற்பாடுகள் லேசான பரபரப்பை திரைக்கதையில் ஏற்படுத்துகிறது. அதையும் ஒரு டிவிஸ்ட்டாக கிளைமாக்சில் இயக்குனர் மாற்றியிருப்பது புத்திசாலித்தனம்.

பரிதாபங்கள் கோபி எப்போதோ ஒருமுறை படங்களில் நடித்தாலும் தனது பாத்திரத்தை நிற்கும்படி செய்து விடுவார். அந்த வேலையை தான் இதிலும் செய்திருக்கிறார். இனி நிறைய படங்களில் இவரை பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

ஆந்திரா அரசியலில் ஈடுபட்டிருக்கும் ரோஜா சினிமாவில் நடிப்பதிலிருந்து விலகி இருந்தார்  தற்போது மீண்டும் அவர் சினிமாவுக்கு வந்திருப்பது ஆரோக்கியமான விஷயம் இளமையான  அம்மா தமிழ் சினிமாவுக்கு கிடைத்தி ருக்கிறார். தனது மகன், மகள், கணவன் எல்லோரையுமே தனது கட்டுப்பாட்டில் வைக்கும் அளவுக்கு கோபத்தை வெளிப்படுத்தி அந்தர் செய்கிறார் ரோஜா. இவரது கணவராக வரும் சேத்தன் ஜாலியாக பேசினாலும் அவ்வப்போது ஒரு குண்டை போடுகிறார். நிகிலா சங்கர், இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் ஆகியோரின்  நடிப்பு இயல்பு.

சத்யா கரிகாலன், ஈரா சரவணன் & யுவராஜ் கணேசன் படத்தை தயாரித்திருக்கின்றனர்.பரத் சங்கர் இசை போதுமானதாக இருக்கிறது. ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு  எதார்த்தம்

இரண்டு மத சம்பந்தப்பட்ட காதலை சொன்னாலும் அதை நடைமுறைக்கு சாத்தியமான வழியில் சொல்லி இருக்கும் இயக்குனர் பாரி இளவழகன் ஜாதி சமரசத்தையும் வசனத்தால் கைதட்டல் பெருமளவுக்கு அமைத்திருக்கிறார்.

படத்தின் ஆரம்பம் மூன்று நிமிடங்களும் இறுதி பத்து நிமிடங்களும் மட்டுமே டிக்கெட் காசுக்கு கேரண்டி.

இளம் காதலர்களை மயக்கும் விதமாக பிடிக்கும் விதமாக திரைக்கதை அமைத்து இது போல் படங்கள் இன்றைய காலகட்டத்தில் நிறைய வருகின்றது.

இந்த டயானாவை எல்லாம் சார்லஸ் களுக்கும் பிடிக்குமா என்றால், இதற்கு விடை தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்களிடமே விட்டுவிடலாம்.

எங்களைப் பொருத்தவரை ‘டயானா’ பேரழகி அல்ல.
Previous Post

ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி – Fauzi டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது

Next Post

ஜே.பி சினிமாஸ் தயாரிப்பில் முனீஸ்காந்த் மற்றும் பாலாஜி சக்திவேல் இணைந்து நடிக்கும் காமெடி பேண்டஸி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

Next Post

ஜே.பி சினிமாஸ் தயாரிப்பில் முனீஸ்காந்த் மற்றும் பாலாஜி சக்திவேல் இணைந்து நடிக்கும் காமெடி பேண்டஸி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • கல்விக்காக ஒரு பெண் மேற்கொள்ளும் பயணத்தை சொல்லும் படம்  “கமலி From நடுக்காவேரி” !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில், சுங்கத்துறை விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜே.பி சினிமாஸ் தயாரிப்பில் முனீஸ்காந்த் மற்றும் பாலாஜி சக்திவேல் இணைந்து நடிக்கும் காமெடி பேண்டஸி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

    0 shares
    Share 0 Tweet 0
  • அன்பே டயானா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில், சுங்கத்துறை விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’

July 16, 2026

ஜே.பி சினிமாஸ் தயாரிப்பில் முனீஸ்காந்த் மற்றும் பாலாஜி சக்திவேல் இணைந்து நடிக்கும் காமெடி பேண்டஸி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

July 16, 2026

அன்பே டயானா – விமர்சனம்

July 16, 2026

ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி – Fauzi டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது

July 16, 2026

நடிகர் வைபவ் நடிப்பில் இருக்கை நுனியில் அமர வைக்கும் பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது!

July 16, 2026

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

July 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.