• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

தலைசிறந்த முதல்வர் என்று  மு க ஸ்டாலின் தம்பட்டம் அடித்துக் கொள்வதா ? சீமான் கண்டனம்..!

by Tamil2daynews
November 24, 2021
in செய்திகள்
0
தலைசிறந்த முதல்வர் என்று  மு க ஸ்டாலின் தம்பட்டம் அடித்துக் கொள்வதா ? சீமான் கண்டனம்..!
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தன்வசமிருக்கும் காவல்துறை அமைச்சகத்தையே சரிவர நிர்வகிக்காத முதல்வர் ஸ்டாலின் , தலைசிறந்த ஆட்சியைத் தருவதாகக்கூறி, முதன்மை முதல்வரென தம்பட்டம் அடித்துக்கொள்வதா?
– சீமான் கேள்வி
தலைசிறந்த ஆட்சியைத் தருவதாகத் தனக்குத் தானே மணிமகுடம் சூட்டிக்கொண்டு, தற்பெருமைகொள்ளும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தன்வசமிருக்கும் காவல்துறை அமைச்சகத்தையே சரிவர நிர்வாகிக்காதது பெரும் ஏமாற்றத்திற்குரியது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஆணவப்படுகொலைகள், அரசியல் படுகொலைகள், கூலிப்படையினரின் கொலைகள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் என நாளும் வெளிவரும் கொடுஞ்செய்திகளும், குற்ற நிகழ்வுகளும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் நிலையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. திருடர்களால் காவல்துறை அதிகாரி பூமிநாதன் வெட்டிக்கொல்லப்படுவது முதல் பட்டப்பகலில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் தமிழார்வன் சமூக விரோதிகளால் தலையைத் துண்டித்துக் கொல்லப்படுவது வரையென நீளும் பச்சைப்படுகொலைகளும், கொலைவெறிச்செயல்களும் தமிழகத்தின் பாதுகாப்பு குறித்தும் , சமூக அமைதி குறித்தும் பெருங்கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன.
படுகொலை, வன்முறை வெறியாட்டம், போதைப்பொருள் விற்பனை என நாள்தோறும் விடிந்தவுடன் பார்வைக்கு வரும் இச்செய்திகள்தான் விடியல் அரசின் சாதனையா? இதுதான் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குவதற்கான சான்றா? வெட்கக்கேடு! அதிமுக ஆட்சியில் காவல்துறை மூலம் நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும் கண்டித்து, கடந்தாட்சியில் அரசியல் செய்த திமுக, தற்போது தங்களது ஆட்சியில் அதேவகை அரச வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் கொடுங்கோன்மை எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக இயங்கக்கூடிய செயற்பாட்டாளர்கள் கூலிப்படையினரால் தாக்கப்படுவதும், அதனைக் காவல்துறை கண்டும் காணாதது போலக் கடந்துசெல்வதும், மீனவர் ராஜ்கிரண் படுகொலையின்போது அவரது இறந்தவுடலைப் பார்க்கக்கூடக் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் அனுமதி மறுப்பதும், அதற்காகப் போராடுவோருக்கு நெருக்கடி கொடுப்பதும், கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளானதைக் கண்டித்த போராட்டத்தில் முதல்வரை பெற்றோர்கள் கைதுசெய்யக்கோரியபோது அதிகாரிகளும், காவல்துறையினரும் வெளிப்படையாக அவர்களை மிரட்டியதும், கரூரில் பாலியல் வன்கொடுமையால் பிள்ளையை இழந்தப் பெற்றோர் புகார் கொடுக்கச்சென்றபோது, அவர்களை ஆபாசமாகப்பேசி அவமதித்து மிகக்கடுமையாகக் காவல்துறையினர் நடந்துகொண்டதையும், பணிநேரத்திலேயே நிறைந்த மதுபோதையில் இருந்ததையும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய தங்கை ஜோதிமணியே குற்றஞ்சாட்டியதும், சேலம், மோரூரில் விடுதலைச்சிறுத்தைகளின் கொடியேற்றும் உரிமையை மறுத்து, அவர்கள் மீது சட்டத்தைப் பாய்ச்சியதும், ‘ஜெய் பீம்’ படம் ஏற்படுத்திய அளப்பெரும் தாக்கத்திற்குப் பின்பும், கள்ளக்குறிச்சியில் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்குத்தொடுத்து, அவர்களைக் கொடூரமாகத் தாக்கியதும், சென்னையில் வாழும் அடித்தட்டு உழைக்கும் மக்களை மிரட்டி, அவர்களது வாழ்விடத்தைவிட்டுக் காவல்துறை விரட்டுவதும், மதவாத அமைப்புகள் வெளிப்படையாக வன்முறையைத் தூண்டும்விதமாகப் பேசும்போதும் அவர்கள் மீது எவ்விதச் சட்டநடவடிக்கையையும் பாய்ச்சாது வேடிக்கைப் பார்ப்பதுமெனக் காவல்துறையின் செயல்பாடுகள் மிக மோசமாக இருக்கையில், அத்துறையைத் தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நல்லாட்சி கொடுத்து வருவதாகக்கூறி, தன்னைத் தானே முதன்மை முதல்வரென விளித்து, சுயதம்பட்டம் அடித்துக்கொள்வது கேலிக்கூத்தாகும்.
‘என்னை இந்தியாவிலேயே முதலாவது முதல்வர் எனக்கூறுவது போல, தமிழகத்தையும் முதல் மாநிலம் எனக்கூற வேண்டும்’ எனக்கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். எந்தவகையில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருக்கிறது? மக்கள் பிரச்சினைகளையும், சமூக அவலங்களையும் தீர்ப்பதில் முதலாவதாக இல்லாமல் செய்தி அரசியல் செய்வதிலும், வெளித்தோற்ற காட்சி அரசியல் செய்வதிலுமே காலங்கடத்தினால் எவ்வாறு முதன்மை மாநிலமாகும்? எந்தவிதத்தில் அதிமுக ஆட்சிக்கு மாற்றான ஆட்சியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்? தீர்க்கப்படாத சிக்கல்கள் எண்ணற்றவை வரிசைகட்டி நிற்க, ஒன்றிய அரசு எதேச்சதிகாரப்போக்கோடு மாநில உரிமைகளில் அத்துமீறிக்கொண்டிருக்க, அது எதனையும் பேசாது கடந்துசெல்வதுதான் முன்மாதிரியான மாநிலமா? தனிப்பெரு முதலாளிகளின் வரம்பற்ற வளவேட்டைக்கான நிலமாகத் தமிழகம் மாறிக்கொண்டிருக்கையில், அதனைத் தடுக்காது வேடிக்கைப் பார்ப்பதுதான் முதன்மை மாநிலத்திற்கான இலக்கணமா? ‘பாஜக எதிர்ப்பு’ எனப் பரப்புரைத்து ஆட்சியதிகாரத்திற்கு வந்துவிட்டு, பாஜகவை எதிர்க்கவே துணிவற்றுபோய் சமரசமாகி, அவர்களது செயல்பாடுகளையும், திட்டங்களையும் தாங்களே இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வதுதான் முதன்மை மாநிலமா? எதில் தமிழகம் முதன்மையாக விளங்குகிறது? தமிழக மக்களின் வாழ்க்கைத்தரத்தில் என்ன முதன்மையான மாற்றமும், முன்னேற்றமும் வந்திருக்கிறது? மாற்றத்திற்கான அறிகுறிகள் எதாவது தென்படுகின்றனவா? என்ன விடியல் கிடைத்திருக்கிறது? எதுவுமே இல்லாதபோது எதற்காகப் போலிப்பிம்பத்தைக் கட்டமைத்து இன்னும் மக்களை ஏமாற்ற முனைய வேண்டும்? மக்களையும், அவர்களது நலனையும் முன்னிறுத்தாது, தங்களையும், தங்களது பிம்பத்தையும் முன்னிறுத்தி அரசியல் செய்ய முற்படுவதா மக்களுக்கான விடியல்?!
ஆகவே, செய்தி அரசியல் செய்வதும், ஊடகங்கள் மூலம் காட்சி அரசியல் செய்வதுமான வெற்று விளம்பரப்போக்கை இனியாவது கைவிட்டு, மண்ணிற்கான சேவை அரசியலிலும், மக்களின் குறைதீர்க்கும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டுமென தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Previous Post

சூர்யாவுக்கு எதிர்ப்புகள் வந்தால் பாம்பு தான் பதில் சொல்லும்…!

Next Post

₹2000 திரைப்படத்தின் புகைப்படங்கள்

Next Post
₹2000 திரைப்படத்தின் புகைப்படங்கள்

₹2000 திரைப்படத்தின் புகைப்படங்கள்

Popular News

  • பிரைம் வீடியோ ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சிட்டாடல்: ஹனி பன்னி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் ஆதிராஜ் இயக்கும் புதிய ஆக்ஷன் பொழுதுபோக்கு திரைப்படம் ‘நொடிக்கு நொடி’ பூஜையுடன் துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஆர்யாவின் “கேப்டன்” படப்பிடிப்பு நிறைவடைந்தது !

    0 shares
    Share 0 Tweet 0
  • Ashima Narwal’s inspiring and cherishing travel diaries 

    0 shares
    Share 0 Tweet 0
  • கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும், எனக்கு பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்கியதோடு, இந்த அழகான திரைப்பட உலகின் ஒரு பகுதியாகவும் மாற்றியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.