• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

by Tamil2daynews
September 14, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம்     “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

 

ஒரு நல்ல நடைமுறை வாழ்க்கையைப் பாசத்தோடும் பரிதவிப்போடும் சொல்லியிருக்கிறேன் ” ஆகாயம் ” படம் குறித்து இயக்குனர்

தினந்தோறும் நாகராஜ்.

டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரித்துள்ள புதிய திரைப்படத்திற்கு “ஆகாயம் ” என்று பெயரிட்டுள்ளனர்.

“தினந்தோறும்” திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தினந்தோறும் நாகராஜ், அதன் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களாலும், திரையுலகினராலும் அந்தப் பெயரிலேயே அன்புடன் அழைக்கப்பட்டார். தொடர்ந்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய “மின்னலே”, “காக்க காக்க”  போன்ற வெற்றிப் படங்கள் உட்பட பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.

அவர் தற்போது “ஆகாயம்” திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

“கன்னி மாடம்” திரைப்படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் அனைவரின் கவனம் ஈர்த்த ஸ்ரீராம் கார்த்திக் இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஆலிஷா மிராணி அறிமுகமாகிறார்.

மேலும் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், கிரி துவாரகிஷ், ஸ்ரீ தேவகிருஷ்ணன், “மெய்யழகன்” படத்தில் நடித்த இந்துமதி மணிகண்டன், தீபா, “மகாராஜா” திரைப்படத்தில் நடித்ததற்காக  தேசிய விருது பெற்ற சஞ்சனா நமீதாஸ், ரோசாரி, ரைட்டர் ஹரிஹரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

“சென்னை டு சிங்கப்பூர்”, “காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் நல்லமுத்து, இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

“நீர்ப்பறவை”, “அயோத்தி” உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்க,
பாடல்களை “நூறு சாமிகள் இருந்தாலும்” என்ற பிரபலமான அம்மா பாடலை எழுதிய ஏக்நாத், மற்றும் “காற்றோடு பட்டம் போல”, “நீலோத்தி” உள்ளிட்ட ஹிட் பாடல்களை எழுதிய சாரதி மற்றும் ரமணிகாந்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

“ஒரு நொடி”, “ஜென்ம நட்சத்திரம்” ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பு செய்த சூர்யா, இப்படத்தின் எடிட்டிங்கை மேற்கொண்டுள்ளார்.

சண்டைப் பயிற்சியை பையர் கார்த்திக் அமைத்துள்ளார்.
நடன அமைப்பாளராக மணிகண்டன் பணியாற்றுகிறார்.
மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்
தயாரிப்பு மேற்பார்வை : பிரசாந்த்
தயாரிப்பு : ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் – தினந்தோறும் நாகராஜ்.
படம் பற்றி இயக்குனர் தினம்தோறும் நாகராஜ் பகிர்ந்தவை…

“கதையாகச் சொன்னால் ‘ஆகாயம்’ குடிக்கு எதிரான படம். ஆனால், அதை உயிர்த்துடிப்பான ஒரு வாழ்க்கையோடு சொல்லியிருக்கிறேன்.  தவிர இதில் அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து வந்திருக்கின்றன.

படங்கள் அனுபவங்களைத் தந்து, வாழ்க்கைக்குள் நுழைந்து நல் உணர்வுகளைத் தர வேண்டும். அப்படி ஒரு சினிமா செய்வதுதான் நமக்கு கௌரவம். நான் அதைத்தான் செய்திருக்கிறேன்.

 ‘ஆகாயம்’ அப்படியான படம். ஒரு நல்ல நடைமுறை வாழ்க்கையைப் பாசத்தோடும் பரிதவிப்போடும் சொல்லியிருக்கிறேன் என்றார் இயக்குனர் தினந்தோறும் நாகராஜ்.

விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Previous Post

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

Next Post

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

Next Post

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்...” ; 'பீப்' படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

Popular News

  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • மரகத நாணயம் படப்புகழ் இயக்குநர் ARK சரவணன் இயக்கத்தில், நடிகர் ஹிப் ஹாப் ஆதி

    0 shares
    Share 0 Tweet 0
  • காந்தாரா படத்தைத் தொடர்ந்து தெய்வீக மர்மத் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் ‘ஆதி ருத்ரா’ – ஜனவரியில் படப்பிடிப்பு தொடக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • LK அக்ஷய் குமாரின் அடுத்த அதிரடி ஆட்டம்… கிரைம் டிராமாவாக உருவாகும் புதிய படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரிஜினல் மான்ஸ்டர்: மும்பையில் நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்வில் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

October 27, 2026

ராமர் மற்றும் சீதையின் அன்பை பேசும் ‘மங்கள வண்ணமே’ பாடல் ‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து வெளியானது!

October 27, 2026

நடிகர் சூர்யாவால் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இயக்குனர் மித்துன் மாணிக்கத்தின் திரைப்படம் ஃபேமிலி பாய் (Family Boy) – டீசர் வெளியீடு

October 27, 2026

நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

October 27, 2026

‘கொலையாளி அல்ல..! நான் காதலன்..!’ என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியான நடிகர் ஷாருக்கானின் ‘கிங் – KING’ படத்தின் புதிய போஸ்டர்!

October 27, 2026

ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு

October 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.