• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகை  அக்‌ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார் பிரபல பாடகி உஷா உதுப் ! 

by Tamil2daynews
September 13, 2020
in சினிமா செய்திகள்
0
நடிகை  அக்‌ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார் பிரபல பாடகி உஷா உதுப் ! 
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ட்ரெண்ட் லவுட் (Trend Loud ) நிறுவனத்தின் சார்பில்  உருவாகும் முதல் திரைப்படத்தில் நடிகை  அக்‌ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார் பிரபல பாடகி உஷா உதுப் !
ட்ரெண்ட் லவுட் Trend Loud நிறுவனம் நடிகை அக்‌ஷரா ஹாசன் முன்னனி பாத்திரத்தில் நடிக்க, தனது முதல் திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவித்த நொடியிலிருந்தே, படத்திற்கு  ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பும், வரவேற்பும் கிடைத்து வருகிறது. தற்போது  அடுத்த ஆச்சர்யமாக, Trend Loud நிறுவனம், இப்படத்தில் இந்தியாவின்  பெரும்புகழ்பெற்ற  பாடகி உஷா உதுப் மிகபெரும் இடைவெளிக்கு பிறகு அக்‌ஷரா ஹாசனின் பாட்டியாக, இத்தமிழ்படம் வழியாக நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இயக்குநர் ராஜா ராமமூர்த்தி இது  குறித்து கூறியதாவது…
இத்தருணம் மிகப்பெரும் பெருமை தரக்கூடியது. வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ள ஆளுமையான பாடகி உஷா உதுப் அவர்களுடன் பணிபுரிய கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு மிகப்பெரும் பாக்கியம் ஆகும். மேலும்  10 வருடத்திற்கு பிறகு ஒரு தமிழ் படத்தில் அதுவும் எங்கள் படம் மூலம் அவரை தமிழில் நடிக்க அழைத்து வருவது எங்களுக்கு பெருமையே. அவர் இப்படத்தில் கர்னாடக சங்கீத வித்தகராக, அக்‌ஷரா ஹாசனின் பாட்டியாக நடிக்கிறார். படத்தில் அவரது கதாப்பாத்திரம் அவரது இயல்பு வாழ்விற்கு முற்றிலும் நேரெதிரானது. ஆனால் அவர் இக்கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திப் போவார். மிகப்பிரபல பாடகி, மிகச்சிறந்த நடிகர் என்பதை தாண்டி, அனைவரிடமும் மிக எளிமையாக பழகும் அவரது அன்பான இயல்பு, அவரது துறுதுறுப்பு படக்குழுவில் அனைவரிடமும் பெரும் உற்சாகத்தை  கொண்டு வந்திருக்கிறது. அவர் முற்றிலும் இயக்குநரின் நடிகை, அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. இறுதியாக அவர் நமது உலக நாயகன் கமலஹாசன் அவர்களுடன் திரையில் நடித்திருந்தார்.  தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு  அவரது மகள் அக்சஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிப்பது மேலும் ஒரு சிறப்பு.
Previous Post

நீட் தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் – மாணவர்களுக்கு இயக்குனர் அமீர் வேண்டுகோள்

Next Post

ஒரு குரலாய் இசை நிகழ்ச்சிக்குக் குரல் கொடுத்த ரஜினிகாந்த்!

Next Post
ஒரு குரலாய் இசை நிகழ்ச்சிக்குக் குரல் கொடுத்த ரஜினிகாந்த்!

ஒரு குரலாய் இசை நிகழ்ச்சிக்குக் குரல் கொடுத்த ரஜினிகாந்த்!

Popular News

  • ‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • கவித்துவமான காதல், கண்கவரும் காட்சிகள், ரசிக்க வைக்கும் கெமிஸ்ட்ரியுடன் மனம் வருடும் அழகிய காதல் கவிதையாக வெளியாகியுள்ளது ‘ஹைக்கூ’ திரைப்பட டீசர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ – மனதை வருடும் அழகான மெலடி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026

நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்ட ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

September 10, 2026

‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் !

September 10, 2026

‘சேயோன்’ திரைப்படத்தில் இணைகிறார் சீமான்!

September 10, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.