• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரமாண்ட சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படம் “அயலான் “ ! 

by Tamil2daynews
February 4, 2020
in சினிமா செய்திகள்
0
சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரமாண்ட சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படம் “அயலான் “ ! 
0
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்றியமையாத படமாக, மிகப்பெரும் பட்ஜெட்டில் “இன்று நேற்று நாளை” இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் 24AM நிறுவனம் சார்பில் RD ரஜா தயாரிக்கும் படத்திற்க்கு “அயலான்”  எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

24AM நிறுவனம்
தயாரிப்பாளர்  RD ரஜா கூறியதாவாது….

எங்கள் 24AM நிறுவனம் சார்பில் தயாராகும் அயலான் படத்தின் தலைப்பிற்கு இணையமே கலங்கும், மிகப்பெரும் வரவேற்பு கிடைத்திப்பது பெரு மகிழ்ச்சி. மேலும் எங்கள் கோரிக்கையின் பேரில், இசைப்புயல் A R ரஹ்மான் தலைப்பை அறிவித்தது எங்களுக்கு பெருமை. இந்தப்படம் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே A R ரஹ்மான் அவர்கள் தனது சொந்தப் படம் போல் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தார். எங்களையும் படம் பற்றிய ஒவ்வொரு சிறு வேலைகளிலும் வெகுவாக ஊக்குவித்தார். தலைப்பிற்காக அவர் உருவாக்கிய ஒரு இசைத்துணுக்கே அபாரமானதாக இருந்தது. அவரது இசை இப்படத்தின் முதுகெலும்பாக இருக்கும்.

“அயலான்” என்பது படத்தின் கருவை மையப்படுத்திய தலைப்பு. அயலான் என்றால் ஏலியன் என்பது அர்த்தம். ( Destination earth ) சென்றடையும் இலக்கு பூமி எனக்குறிப்பிடப்பட்டுள்ளதை ரசிகர்கள் எளிதாக  புரிந்து கொள்வார்கள். நாம் அதைப் பற்றி எந்த ஒரு வார்த்தை சொன்னாலும் படத்தின் சுவாரஸ்யங்களை சொல்லிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. இத்தருணத்தில் படத்தின் படப்பிடிப்பு வெகு துரிதமாக நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு கட்ட படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது. தமிழின் பிரமாண்டமான் அறிவியல் புனைகதை ( சயின்ஸ் ஃபிகஷன் )  படமாக இப்படம் உருவாகிறது. எனவே படத்தில் அதிகளவிலான  விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதனை முன்னிட்டு படப்பிடிப்பின் போதே போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளும் இணையாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பங்கு பெறும் அனைவருக்கும் மற்றும் 24AM ஆன எங்கள் நிறுவனதிற்கு மட்டுமல்லாது தமிழ் சினிமாவிற்கே மிக சிறந்ததொரு பெருமையான படைப்பாக இப்படம் இருக்கும்.

24AM நிறுவனம் சார்பில் RD ரஜா தயாரிக்க KJR Studios நிறுவனர் கொட்டாப்படி J ராஜேஸ் இப்படத்தை வெளியிடுகிறார். பிரமாண்ட அறிவியல் புனைவு படமாக உருவாகும் “அயலான்” இப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, கருணாகரன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். அகாடமி அவார்ட் வின்னர்  A R ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.

 
 
Title Motion Poster: https://www.youtube.com/watch?v=0YL1DTjEfS8
Tags: 24AMAR RahmanAyalaanSivakarthikeyan
Previous Post

“ஓ மை கடவுளே” பத்திரிக்கை சந்திப்பு ! 

Next Post

ஹாலிவுட்டில் களமிறங்கும் ஜி.வி பிரகாஷ்!

Next Post
ஹாலிவுட்டில் களமிறங்கும் ஜி.வி பிரகாஷ்!

ஹாலிவுட்டில் களமிறங்கும் ஜி.வி பிரகாஷ்!

Popular News

  • கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இம்மார்ட்டல் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.