• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிரபல தென்னிந்திய முன்னணி நாயகி சமந்தா “தலைவி” படத்தில் முதல் பாடலை மூன்று மொழிகளில் வெளியிடுகிறார் !

by Tamil2daynews
April 5, 2021
in சினிமா செய்திகள்
0
பிரபல தென்னிந்திய முன்னணி நாயகி சமந்தா “தலைவி” படத்தில் முதல் பாடலை மூன்று மொழிகளில் வெளியிடுகிறார் !
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
புரட்சி தலைவி, தமிழக பெண்களின் ஆதர்ஷ நாயகி, மாண்புமிகு ஜெயலலிதா அவர்களின் சினிமா, அரசியல் வாழ்வின் மிக முக்கிய தருணங்களை, பிரதிபலிக்கும் “தலைவி” படத்தின் டிரெய்லரை நாயகி  சமந்தா தனது பக்கத்தில் பகிர்ந்திருந்தார். கங்கனா ரனாவத் நடிப்பில் படத்தில் நிகழ்ந்திருக்கும் அற்புத மேஜிக்கை காண ஆவலாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது நாயகி சமந்தா  இந்தி மொழியில் “ஜலி ஜலி”, தமிழில் “மழை மழை”, தெலுங்கில் “இலா இலா” என மூன்று மொழிகளிலும் “தலைவி” படத்தின் முதல் பாடலை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பல வெற்றிபடங்களை தந்து, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும் நாயகி சமந்தா தற்போது இந்தியில் பரபரப்பான இணைய தொடரான “ஃபேமிலி மேன்” இரண்டாம் பாகத்தில் நடித்திருப்பதன் மூலம் இந்திய அளவில், புகழ்மிகு நடிகையாக மாறியிருக்கிறார். “தலைவி” படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு பாராட்டி மகிழ்ந்த அவர், ஜெயலலிதாவின் நட்சத்திர திரைவாழ்வை சொல்லும் முதல் பாடலை தற்போது வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின்  சூப்பர்ஸ்டாராக விளங்கிய  ஜெயலலிதாவின் முதல் படமான “வெண்ணிற ஆடை 1965” படத்திலிருந்து துவங்கும் இப்பாடல், அவரது மறக்க முடியாத படங்களின், நடிப்பு துணுக்குகளை, கங்கனா ரனாவத்தின் அற்புத நடிப்பில் மீளுருவாக்கம் செய்துள்ளது.
இவ்வருடத்தின் மிக எதிர்ப்பார்ப்பிற்குரிய, தவிர்க்க முடியாத படங்களுள் ஒன்றாக “தலைவி” படம் இடம்பிடித்திருக்கிறது. பிரமிக்க தக்க வகையில் ஜெயலலிதா வாழ்வின் பக்கங்களை, நம் கண்முன் புரட்டி காட்டும்படி, மிக அழகான முறையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது, சாதரண பெண்ணாக இருந்து திரைத்துறைக்குள் நுழைந்தது, சிறு நடிகையாக இருந்து சூப்பர்ஸ்டாராக மாறியது, பின் போராட்டத்திற்கு பின் அரசியலில் இணைந்தது, பல தடைகளை உடைத்து அரசியலில் மலர்ந்து உயரிய பொறுப்பிற்கு சென்றது, தமிழகத்தை வடிவமைத்து,  அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியது என ஜெயலலிதா அவர்களின் வாழ்வின் பல அறிந்திராத பக்கங்களை நம் கண்முன் கொண்டுவரவுள்ளது இப்படம்.
Vibri Motion pictures, Karma Media Entertainment மற்றும்  Zee Studios ,  Gothic Entertainment நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தினை வழங்குகிறார்கள். விஷ்ணு வர்தன் இந்தூரி  சைலேஷ் R சிங், Sprint films சார்பில்   ஹிதேஷ் தக்கர் மற்றும்   திருமால் ரெட்டியுடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்கள். T- Series பாடல்களை வெளியிட  “தலைவி” படத்தினை  Zee Studios  23  ஏப்ரல், 2021 அன்று உலகம் முழுவதும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடுகிறது.
Previous Post

தனது பிறந்தநாளை மலைப்பாங்கான படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் ஹீரோ

Next Post

சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் கார் பயணத்தில் நடக்கிற கதையாக உருவாகி இருக்கிறது ‘டேக் டைவர்ஷன்’ படம்.

Next Post
சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் கார் பயணத்தில் நடக்கிற கதையாக உருவாகி இருக்கிறது ‘டேக் டைவர்ஷன்’ படம்.

சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் கார் பயணத்தில் நடக்கிற கதையாக உருவாகி இருக்கிறது 'டேக் டைவர்ஷன்' படம்.

Popular News

  • ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

August 4, 2026

சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!

August 4, 2026

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ‘தி ஒன் ரூல்’ பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா

August 4, 2026

விஜய் ஆண்டனியின் உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.