தளபதி65 படத்தில் விஜய்க்கு ஜோடி இந்த நடிகையா? 10 வருடத்திற்கு பிறகு ஜோடி சேரும் பிளாப் நாயகி!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் தளபதி விஜய்.விஜய்யின் 65 வது படமான தளபதி65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. மேலும் இந்த படத்தை ஏற்கனவே 3 முறை விஜய்யுடன் கூட்டணி அமைத்த முருகதாஸ் இயக்கவுள்ளார்.
பெரும்பாலான விஜய் ரசிகர்களுக்கு இந்த கூட்டணி கொஞ்சம் ஏமாற்றமாக தான் இருக்கிறது. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போல முருகதாஸ் கெத்து, சூப்பர் கூட்டணி என எதையாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
உண்மையிலேயே அனைவரும் எதிர்பார்த்தது விஜய் மற்றும் மகிழ்திருமேனி கூட்டணியை தான். அதுவும் இல்லையென்றால் விஜய் பாண்டிராஜ் கூட்டணி தான் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் முருகதாஸுடன் கூட்டணி சேர்ந்தது எல்லாருக்கும் ஏமாற்றம் தான். ஏற்கனவே பிளாப் படங்களை கொடுத்து வரும் முருகதாஸ் விஜய் உடன் சேர்ந்து கண்டிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துவிட வேண்டும் என பயங்கர உக்கிரமாக இருக்கிறாராம்.

இசையமைப்பாளர் தமன் என்றவுடன் ஆகா என்ற ரசிகர்கள் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை தமன்னா என்றவுடன் அய்யோ என தலையில் கை வைத்து விட்டார்கள். ஏற்கனவே விஜய் தமன்னா கூட்டணியில் உருவாகி மோசமான தோல்வியை சந்தித்த படம் சுறா என்பதும் குறிப்பிடத்தக்கது.








