ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் மாதவன் இயக்கிய படத்திற்கு கேன்ஸ் படவிழாவில் முதல்முறையாக திரையிடப்படுகிறது

by Tamil2daynews
May 7, 2022
in சினிமா செய்திகள்
0
‘இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் மாதவன் இயக்கிய படத்திற்கு கேன்ஸ் படவிழாவில் முதல்முறையாக திரையிடப்படுகிறது

 

ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தை கண்டுகளிக்கும் நேரம் இறுதியாக வந்துவிட்டது: உலக சினிமா வரலாற்றில் இந்தியாவை பெருமை கொள்ள வைக்கும் நிகழ்வு அரங்கேறவுள்ளது. புகழ்பெற்ற இஸ்ரோ விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை சர்வதேச அரங்கில் எடுத்துரைக்கும் அருமையான படைப்பு. நடிகர்  R மாதவன் இயக்குநராக அறிமுகமாகும், வாழ்க்கை வரலாற்று டிராமா திரைப்படமான ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’, 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில், உலக அரங்கேற்றத்தைப் பெறவுள்ளது. மே 19 வியாழன் அன்று இரவு 9 மணிக்கு ப்ரைம் டைம் ஸ்லாட்டின் போது, இந்த ஆண்டு கேன்ஸ் ஃபிலிம் மார்க்கெட்டில் இந்தியாவை அதிகாரப்பூர்வ நாடாகக் கொண்டாடுவதன் ஒரு பகுதியாக நடைபெறும் ‘பாலைஸ் டெஸ் ஃபெஸ்டிவல் பிரீமியர்’ பிரிவில் இப்படம் திரையிடப்படவுள்ளது. இந்த ஆண்டு அறிமுகமாகும் இந்நிகழ்வு எதிர்காலத்தில் பாரம்பரியமாக தொடரவுள்ளது குறிப்பிடதக்கது. இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்  75 வது ஆண்டு திருவிழா பாரம்பரியத்தின் துவக்கமாக இது நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாகும். இந்தியாவின் கலாச்சார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’  திரைப்படத்தை கேன்ஸ் விழாவின் ரெட் கார்பெட் வேர்ல்ட் பிரீமியருக்கு தேர்வு செய்துள்ளது.
R Madhavan to make his directorial debut with 'Rocketry: The Nambi Effect' - The Indian Wireநடிகரும், திரைப்படத் இயக்குநருமான R.மாதவன், இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியாளரான நம்பி நாராயணன் என்ற பெயரிடப்பட்ட இந்திய விஞ்ஞானியாக நடிக்கிறார், மேலும் படத்தை இயக்கி, தயாரித்து மற்றும் எழுதியுள்ளார். கேன்ஸ் திரைப்பட விழாவில் ராக்கெட்ரி: நம்பி எஃபெக்டின் உலக அரங்கேற்றம் பற்றிப் பேசிய R.மாதவன், “நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன்! நான் நம்பி நாராயணனின் கதையை மட்டுமே  சொல்ல விரும்பினேன், ஆனால் தற்போது நடப்பதையெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை. கடவுளின் கிருபையுடன், நாங்கள் நீண்ட காலம் காத்திருந்தோம், படத்திற்கு நடக்கும் அனைத்து நல்ல விஷயங்களையும் பார்க்க நான் நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன். ஒரு அறிமுக இயக்குநராக, என் அதிக பதட்டத்தை தருகிறது.  இப்படம் இந்தியாவை பெருமைப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்!”
Powerful dialogues, intense scenes; R. Madhavan's Rocketry trailer promises an intriguing taleஇஸ்ரோ விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணின் உறுதியான போராட்டம், மற்றும் வெற்றியின் கதையை படம்பிடித்து காட்டும்,  “ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்”, இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. ஜூலை 1 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படம் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாகிறது.
பிரம்மாண்டமான அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ஃபிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா மற்றும் ரான் டோனாச்சி போன்ற புகழ்பெற்ற சர்வதேச நடிகர்களுடன், இந்திய சூப்பர் ஸ்டார்களான ஷாருக்கான் மற்றும் சூர்யா ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்.

ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் திரைப்படம், TriColour films, Varghese Moolan Pictures  மற்றும் 27th Investments  நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை இந்தியாவில் UFO Moviez மற்றும் Red Giant Movies ஆகிய நிறுவனங்கள் இணைந்து  விநியோகம் செய்கின்றன.  Yash Raj Films மற்றும் Phars Film Co மூலம் இத்திரைப்படம் சர்வதேச அளவில் விநியோகிக்கப்படுகிறது.

Previous Post

பிரம்மாண்டமாக நடந்த SKவின் “டான்” முன் வெளியீட்டு விழா

Next Post

விஷால் , எஸ் .ஜே சூர்யா நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது !

Next Post
‘இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு!

விஷால் , எஸ் .ஜே சூர்யா நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது !

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • மேலாடையை கழற்றி போஸ் கொடுத்த  பிரபல தமிழ் நடிகை.

    7 shares
    Share 7 Tweet 0
  • இப்போது சினிமா உட்பட பல இடங்களில் ஜாதி அதிகமாகி விட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • 70 YEARS OF ” SUCCESS SHIVAJI ” – யின் “பராசக்தி” நாடகம் ஒரு சாதனை.

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒடிடியை விட தியேட்டர் ரிலீஸ் தான் எளிது ; பொம்மை நாயகி விழாவில் பா.ரஞ்சித்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் ஜெ.எம்.பஷீர்..!

February 2, 2023

ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட ‘ஒன்றல்ல ஐந்து நிமிடம்’ .

February 2, 2023

‘மைக்கேல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

February 2, 2023

அதிரடியில் மிரட்டும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “தசரா” திரைப்பட டீசர் !!

February 2, 2023

அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

February 2, 2023

திரில்லரான பொழுதுபோக்கு படம்; என்னுடைய கதையை ரசித்துக் கேட்டார் தளபதி விஜய்!- நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

February 2, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!