• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிரபுதேவாவின் ‘பகீரா’ படம் குறித்து தயாரிப்பாளர் ஆர்.வி. பரதன்!

by Tamil2daynews
March 3, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பிரபுதேவாவின் ‘பகீரா’ படம் குறித்து தயாரிப்பாளர் ஆர்.வி. பரதன்!

 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பரதன் பிக்சர்ஸின் ஆர்.வி. பரதன் தயாரிப்பில் நடிகர் பிரபுதேவாவின் ’பகீரா’ திரைப்படம் மார்ச் 3 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் புரோமோவும் பாடல் காட்சிகளும் பார்வையாளர்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்தப் படத்தில் பிரபுதேவாவின் பலவிதமான தோற்றங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
தயாரிப்பாளர் ஆர்.வி. பரதன் கூறும்போது, “பிரபுதேவா சார் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக சிறந்த திரைக்கலைஞராக இருந்து வருகிறார். பான்-இந்தியா என்ற ட்ரெண்ட் வருவதற்கு முன்பே அவர் ஒரு பான்-இந்தியன் சூப்பர் ஸ்டாராக இருந்தார் என்று சொல்வேன். ஒரு ரசிகனாக, அவரது நடன அசைவுகளைப் பார்த்து நான் எப்போதும் பிரமிப்புடன் இருந்தேன். மேலும் அவர்  ஒரு நடனக்கலைஞராக மட்டும் தன் எல்லையை சுருக்கிக் கொள்ளாமல், ஒரு வெற்றிகரமான நடிகராகவும் இயக்குநராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார். ’பகீரா’ படத்தில் கதாநாயகனாக நடிக்க பிரபுதேவா சாரை அணுகியபோது, அவர் பல படங்களில் பிஸியாக இருந்ததால், இதில் நடிக்க ஒப்புக்கொள்வாரா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது.
இந்தப் படத்திற்கு நிறைய மேக் ஓவர்கள் மற்றும் கெட்-அப்கள் தேவைப்பட்டது. இந்த ஒரு காரணமும் பிரபுதேவா சார் இந்தப் படத்தில் நடிக்க சம்மதிப்பாரா என்ற சந்தேகத்தை எங்களுக்கு ஏற்படுத்தியது. ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், அவர் இந்த ஸ்கிரிப்டைப் படித்துப் பார்த்திவிட்டு உற்சாகமாக இதில் நடிக்க சம்மதித்தார். படம் முழுக்கவே உற்சாகமாக எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தார். ஒருமுறை கூட அவர் சோர்ந்து போகவில்லை. இது வெறும் கெட்அப் குறித்தானது மட்டுமல்ல, தனித்துவமான உடல் மொழி, பாவனைகள் மற்றும் டயலாக் டெலிவரி போன்றவையும் இந்தப் படத்தின் ஹைலைட்டாக இருக்கும். இந்தப் படத்திற்காக அவர் முதலீடு செய்த நேரமும் சக்தியும் மிகவும் அபரிமிதமானது. அவரது ஆதரவை எப்போதும் பரதன் பிக்சர்ஸ் நினைவில் வைத்திருக்கும். ’பகீரா’ பார்வையாளர்களுக்கு அன்லிமிட்டெட்  எண்டர்டெயின்மெண்ட்டைக் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும் ஆதிக் ரவிச்சந்திரனின் திரைக்கதை அனைவரையும் ஆரம்பம் முதல் இறுதி வரை ஈர்க்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள்:
பிரபுதேவா, அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய்குமார், நாசர், பிரகதி மற்றும் பலர்.
படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:
எழுத்து மற்றும் இயக்கம்: ஆதிக் ரவிச்சந்திரன்,
தயாரிப்பு: ஆர்.வி. பரதன்,
தயாரிப்பு நிறுவனம்: பரதன் பிக்சர்ஸ்,
இணைத்தயாரிப்பு: எஸ்.வி.ஆர் ரவிசங்கர்,
இசை: கணேசன்.எஸ்,
ஒளிப்பதிவு: செல்வகுமார் எஸ்கே & அபிநந்தன் ராமானுஜம்,
படத்தொகுப்பு: ரூபன்,
கலை: சிவா யாதவ்,
விளம்பர வடிவமைப்பு: டி ஸ்டேஜ்,
பாடல் வரிகள்: பா.விஜய், ஆதிக் ரவிச்சந்திரன், ரோகேஷ்,
ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா,
VFX: ஆர் ஹரிஹர சுதன்,
தயாரிப்பு நிர்வாகி: பி.பாண்டியன், ஜி சம்பத்,
நடனம்: ராஜு சுந்தரம், பாபா பாஸ்கர்,
சண்டைக்காட்சிகள்: ராஜசேகர்-அன்பறிவ்,
ஆடை வடிவமைப்பாளர்: சாய்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்
Previous Post

NOISE AND GRAINS நிறுவனம் மற்றும் பிரபல இசை அமைப்பாளர் வித்யாசாகர் இணையும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி

Next Post

யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் ” ஐகோர்ட் மகாராஜா ” திரைப்பட கல்லூரி மாணவர் எ.பாக்கியராஜ் இயக்குக்கிறார்.

Next Post

யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் " ஐகோர்ட் மகாராஜா " திரைப்பட கல்லூரி மாணவர் எ.பாக்கியராஜ் இயக்குக்கிறார்.

Popular News

  • டென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்!!

    டென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்!!

    5 shares
    Share 5 Tweet 0
  • அரசுப்பள்ளியின் தலையெழுத்தை மாத்தும் ஜோதிகா! இம்மாதம் “ராட்சசி”. 

    0 shares
    Share 0 Tweet 0
  • குழந்தை பாதுகாப்பு பற்றி லதாரஜினிகாந்த்

    6 shares
    Share 6 Tweet 0
  • 2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு… தமிழில்” காபி” படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. ” இனியா “

    3 shares
    Share 3 Tweet 0
  • ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

April 20, 2026

ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

April 20, 2026

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

April 20, 2026

ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!

April 20, 2026

“மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!

April 20, 2026

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த பிரமாண்டம் – மகா அவதார் பரசுராம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

April 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.