ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இந்தக் கோடை விடுமுறை பெரியவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதற்காகவும், குடும்பத்தினரின் பொழுது போக்கிற்காகவும் ப்ரைம் வீடியோ “ஓ மை டாக்” பட டிரெய்லரை வெளியிடுகிறது.

by Tamil2daynews
April 11, 2022
in சினிமா செய்திகள்
0
முதல்வரும், தளபதியும்  களை கட்டும் பாண்டிச்சேரி..!
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்தக் கோடை விடுமுறை பெரியவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதற்காகவும், குடும்பத்தினரின் பொழுது போக்கிற்காகவும் ப்ரைம் வீடியோ “ஓ மை டாக்” பட டிரெய்லரை வெளியிடுகிறது.

 

 

குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி தரும் இந்த படம்,  ஏப்ரல் 21 அன்று இந்தியாவிலும்,  240 உலக நாடுகளிலும் மற்றும் பல பிரதேசங்களிலும் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

சரோவ் சண்முகம் அவர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ள 2D என்டர்டெய்ன்மென்ட் ‘ஓ மை டாக்’ படம், மூன்று தலைமுறைகளைப் பற்றியது. குடும்பப் பாங்கான இப்படத்தில் நிஜத்தில் மூன்று தலைமுறை நடிகர்களான விஜயகுமார், அருண் விஜய் மற்றும் அர்னவ் விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

அமேசான் பிரைம் நம்பமுடியாத அளவிற்கு புத்தம் புதிய, எண்ணற்ற பிரத்யேகப் படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட் அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல், விளம்பரம் இல்லாமல், அமேசான் மியூசிக் மூலமாக இசை, இந்தியாவின் முக்கிய தயாரிப்புகளை துரிதமாக வெளியிட்டும், பெரிய வியாபார பேரங்கள், பிரைம் ரீடிங் மூலமாக எல்லையற்ற கல்வி விஷயங்கள்,  பிரைம் கேமிங்கில் மொபைல் கேமிங் இவை அனைத்தும் உங்களுக்கு ஆண்டு பிரைமரி சந்தா ரூ.1,499/- மூலமாக உங்களுக்கு கிடைக்கிறது.  வாடிக்கையாளர்கள், பிரைம் மொபைல் எடிசன் மூலம் ” ஓ மை டாக்” என்ற படத்தையும் காணலாம்.  ஏர்டெல் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு தனி நபர் பார்வைக்காகவே பிரைம் வீடியோ மொபைல் எடிசன் அளிக்கிறது.

மும்பை இந்தியா-11 ஏப்ரல் 2022- அருமையான மகிழ்ச்சியை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக தரும் உறுதியுடன் “ஓ மை டாக்”   இன்று பிரைம் வீடியோ வெளியிடுவதாக அறிவித்துள்ளது.  இந்த படம் ” 2D  என்டர்டெய்ன்மென்ட்” பேனரில் தயாரிக்கப்பட்டு,  சரோவ் ஷண்முகம் அவர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ளது.  இப்படம் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த(தாத்தா, அப்பா, மகன் மூவரின்)  மற்றும் நாய்க்குட்டி சிம்பா கதாபாத்திரங்களின் கொண்ட உண்மையான குடும்பப் படம் அனைவரின் இதயங்களையும் கவரும். அமேசான் ஒரிஜினல் பட வரிசையில் ஏப்ரல் 21 அன்று இந்த படம் பிரத்யேகமாக தமிழ், தெலுங்கு மொழிகளிலும் மற்றும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலும் கண்டு மகிழலாம்.

இப்படம் மூன்று கதாபாத்திரங்களான= மூன்று குடும்பங்களின் தலைமுறைகளான கலைக்குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, அப்பா மகன் மூவர், விஜயகுமார், அருண் விஜய் மற்றும் அர்னவ் (அறிமுகம்)  நெருக்கமான உறவு, அனைவரின் நெஞ்சையள்ளும் விதமாக படமாக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மஹிமா நம்பியார் மற்றும் வினய் ராய் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தைப் பற்றி நடிகரும், படத் தயாரிப்பாளரும், 2டி என்டெர்டெய்ன்மென்டின் நிறுவனருமான சூர்யா அவர்கள் பேசுகையில், “ஓ மை டாக்- ஒரு மனிதன், அவனுடைய நெருங்கிய நண்பனுக்கிடையே நடக்கும் முக்கியமான மதிப்பு, காதல், நட்பு, அன்பு ஆகியவைகள் உள்ளத்தைத் தொடுமாறு இந்த படம் அமைந்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்தினரும், முக்கியமாகக் குழந்தைகளும் சேர்ந்து கண்டுகளிக்க வேண்டிய படம்.  உணர்வுப் பூர்வமான இந்த படம் தொலை தூரத்திலிள்ள அனைவரும் பிரைம் வீடியோ மூலம் கோடை விடுமுறையில் குழந்தைகளை மகிழ்விக்கும்.” என்றார்.

முன்னணி நடிகரான அருண் விஜய்  பேசும் போது, “ஓ மை டாக்” படம் எனது சொந்த தொழில் மற்றும் அடையாளத்தைத் காட்டும். எனது குடும்பத்தைப் பற்றியும் பல காரணங்களுடன் தொடர்புள்ளது . இப்படத்தின் மூலம் என்னுடைய அப்பா, என் மகன். அர்னவ்வின் ( அறிமுகம்) அப்பாவாக வருவது மட்டுமல்லாமல் நான் ஒரு அப்பாவாகவும் இருப்பதால் என் மனம் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறது. அர்னாவின் அப்பாவாக இந்த படத்தின் முக்கியத்துவம், இளம் ரசிகர்களின் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த படம் உண்மையான என்டெர்டெய்னர் மட்டுமின்றி, குழந்தைகள் தம் விஸ்வாசம், அறியாமை மற்றும் பல குணாதிசயங்களை தமக்குள் ஏற்படுத்திக் கொள்ள மிகுந்த சான்றாக அமையும் என நான் கருதுகிறேன்” என்று கூறினார்.

இயக்குநர் சரோவ் சண்முகம் கூறுகையில்,-” ஓ மை டாக் படம் உணர்ச்சிகள் ததும்பும் ஓர் உன்னதப் படம்.  இப்படம், குழந்தைகளாக,  நாம் கற்றுக் கொண்ட பாடங்களை பெரியவர்களாக நாம் வளர்ந்துவிட்ட பிறகு, நமது பல வித பொறுப்புகளினால் மறந்துவிடுவதை அலசுகிறது. இது குழந்தைகள்  தங்களின் சக்திவாய்ந்த மனோதிடத்தையும், மதிப்புகளையும் பெரியவர்களுக்கு வழிகாட்டிகளாக அமைகிறது என்பதையும் காட்டுகிறது. விஜயகுமார் ஐயா, அருண் விஜய் மற்றும் அர்னவ் ஆகியோருடன் பணியாற்றுவது மிகவும் உற்சாகமாக உள்ளது.  மூன்று தலைமுறைகள் கொண்ட அந்த நடிகர்களின் திறமையான நடிப்பினை நாம் இதில் காணமுடிகிறது.” என்றார்.

இந்த படத்தை தயாரித்தவர்கள்.. ஜோதிகா-சூர்யா, மற்றும் இணை தயாரிப்பாளர்கள் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் RB டாக்கீஸின் எஸ் ஆர். ரமேஷ் பாபு. இசையமைப்பு நிவாஸ் பிரசன்னா . ஒளிப்பதிவு கோபிநாத் ஆகியோர் செய்துள்ளனர். இப்படம் பிரைம் வீடியோ மற்றும் 2D என்டர்டைன்மென்ட் ஆகிய இருவருக்குமிடையே நான்கு-பிலிம் வியாபாரத்தின் ஒரு பகுதியாகும்.

கதைச் சுருக்கம் :

“ஓ மை டாக்” பார்வையற்ற நாய்க்குட்டி சிம்பா மற்றும் அர்ஜூன் ஆகியோருக்கிடையே நடக்கும் உணர்வு அடிப்படையாகக் கொண்டு விளங்குகிறது. அர்ஜூன் சிம்பாவைக்  காப்பாற்றியதின்  மூலம் அவருக்கு சொந்தமாகவே ஆகிவிடுகிறது. இந்த படம் அர்ஜூன் மற்றும் சிம்பாவின் நெருக்கடிகள் மற்றும் பல வித சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நகர்ந்து, நம் ஒவ்வொருவரின் இதயத்தையும் சுற்றி வலம் வருகிறது.

Previous Post

விரைவில் வெளியாகும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு

Next Post

Giant Music வழங்கும் இன்டிபென்டன்ட் ஆல்பம் பாடல் “ஆசை அலை மீறுதே” !

Next Post

Giant Music வழங்கும் இன்டிபென்டன்ட் ஆல்பம் பாடல் “ஆசை அலை மீறுதே” !

Popular News

  • நடிகர் நாசர் ன் தம்பி ஜவஹர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்து உள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

    0 shares
    Share 0 Tweet 0
  • வெளியானது தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பழந்தமிழர் மருத்துவ கண்டுபிடிப்புகள்‌ பற்றி பேசும்‌ “பெல்‌”

May 31, 2023

டக்கர்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

May 31, 2023

‘சூப்பர் ஸ்டார்’ வெளியிட்ட ‘காவி ஆவி நடுவுல தேவி’..!

May 31, 2023

செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

May 30, 2023

வெளியானது தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்

May 30, 2023

நடிகர் நாசர் ன் தம்பி ஜவஹர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்து உள்ளார்.

May 30, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!