• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கொல்கத்தாவில் எஸ்.ஏ.சிக்கு சிறந்த நடிகர் விருது!

by Tamil2daynews
December 24, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கொல்கத்தாவில் எஸ்.ஏ.சிக்கு சிறந்த நடிகர் விருது!

 

இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரனுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது.’கூரன்’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அது பற்ற இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும்போது,

“நான் திரை உலகில் 45 ஆண்டுகளாகத் தயாரிப்பாளர், இயக்குநர் என்று இயங்கி வருகிறேன் .இப்போது நடிகராகவும் இருக்கிறேன்.சினிமாவில் நான் ஓய்வெடுக்க நினைத்தாலும் அது முடிவதில்லை. சினிமா ஒரு காற்று போன்றது. எப்போதும் அதை நான் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.

 தயாரிப்பாளராக, இயக்குநராக நான் பணியாற்றி இப்போது நடிகராகவும் தொடர்கிறேன்.நான் நடித்த திரைப்படங்களில் ‘கூரன்’ என்ற படத்தில் நடித்தது, அதிலும்  ஒரு நாயுடன் நடித்தது வித்தியாசமான அனுபவம். அது ஒரு நாய்க்கும் மனிதருக்குமான பாசம் சம்பந்தப்பட்ட கதை . அந்த வகையில் அந்தப் படத்தில் நடித்தது ஒரு மாறுபட்ட அனுபவமாக இருந்தது.

‘கூரன்’ படத்தில் நடித்ததற்காக எனக்கு சிறந்த நடிகர் என்ற ஒரு விருது கிடைத்துள்ளது. ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் அமைப்பினர் இணைந்து இந்த விருதை எனக்கு வழங்கியிருக்கிறார்கள்.சினிமாவில் அன்பைப் பற்றிச் சொல்லப்படுவதற்காக ‘சினிகைண்ட்’ என்கிற அந்த விருது வழங்கப்படுகிறது.அந்த விருதைப் பெற்றுக் கொள்ளும்படி எனக்கு அழைப்பு வந்தது.

கொல்கத்தாவில் உள்ள ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் எனக்கு விருதை வழங்கினார்கள் .நான் எனது மனைவியோடும் மகிழ்ச்சியோடும் அந்த விழாவில் கலந்து கொண்டு விருதினைப் பெற்றுக் கொண்டேன்.சினிமாவில் நம்பிக்கையோடும் அர்ப்பணிப்போடும்  உழைப்பை வழங்கினால் அது நமக்குப்  பெருமையையும் அங்கீகாரத்தையும் தேடித் தரும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று நான் சொல்வேன்.”என்று மகிழ்ச்சியோடு கூறினார்.
Previous Post

ஒரு திரைப்பட ஆல்பத்திற்காக முதல்முறையாக வெளியான ‘மூன்வாக் மினி கேசட்’ ( Moonwalk Mini Cassette ) — ஒரு சிறப்பு இசை அனுபவம் !!

Next Post

பார்வதா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் ‘புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Next Post

பார்வதா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் 'புரொடக்ஷன் நம்பர் ஒன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Popular News

  • ஒரு திரைப்பட ஆல்பத்திற்காக முதல்முறையாக வெளியான ‘மூன்வாக் மினி கேசட்’ ( Moonwalk Mini Cassette ) — ஒரு சிறப்பு இசை அனுபவம் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரியாக ‘8 தோட்டாக்கள்’ வெற்றி நடிக்கும் ‘பரீட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் வழங்கும் “மை லார்ட்”

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் அட்லீ வெளியிட்ட அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )” படத்தின் ட்ரெய்லர்

    0 shares
    Share 0 Tweet 0
  • ”பராசக்தி” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ZEE5, அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் ‘கென்னடி’ பட டிரெய்லரை வெளியிட்டது !!

February 12, 2026

சுகா இயக்கத்தில் “சைலப்பன் சைக்கிள் மார்ட்” – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

February 12, 2026

Phars Film நிறுவனம் ‘டாக்ஸிக்’ படத்தின் இந்திய மொழி பதிப்புகளுக்காக வரலாற்றுச் சாதனை மிக்க வெளிநாட்டு ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளது – !

February 12, 2026

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரியாக ‘8 தோட்டாக்கள்’ வெற்றி நடிக்கும் ‘பரீட்’

February 12, 2026

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் வழங்கும் “மை லார்ட்”

February 12, 2026

மை லார்ட் – விமர்சனம்

February 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.