ரஜினிகாந்த், கமல்ஹாசன்,லோகேஷ் கனகராஜ் திடீர் சந்திப்பு..!
கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இன்று முதல் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி விருவிருப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருவரும் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளனர்.
முன்னதாக கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்திற்காக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த நடிக்க இருப்பதாக பேசிக் கொள்ளப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த திட்டம் செயல்படாமல் போல கமல்ஹாசன் விக்ரம் படம் லோகேஷ் இயக்கத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.